சுடரி இருளில் ஏங்காதே
சுடரி இருளில் ஏங்காதே
நம்ம வாழ்க்கைல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருளை சந்திக்க வேண்டிய சூழல் கட்டாயம் வரும் அப்ப இருளிலிருந்து ஏங்காமல் சுடர்விட்டு வெளிச்சமாய் வெளிவரனும். இது தான் கதையோட சாராம்சம். எனக்கு பிடித்த பாடல் வரிகள் இது.
ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு இழப்பு ஏற்படும் போது என்னென்ன நடக்கும் எத்தனை வலிகள் இதெல்லாம் கண்முன்னே பாத்த போல இருந்தது.
இழப்பு நடந்த வீட்டில் ஆறுதல் சொல்லலனா கூட பராவல பொருட்கள ஈட்டலாம் னு வரும் ஜென்மங்கள் எல்லாம் என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் சந்தர்ப்பவாதிகள். அதை வாசிக்கும் போது அத்தனை கோவம். ஏன் அதை அவங்க நினைவா வச்சிக்க மாட்டாங்களாமா?
தூயவனை என்ன சொல்வது. கொஞ்சம் முன்பு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் இந்த வரிகளை வாசித்தபோதே அவ்வளவு கனம் மனதில். ஏதாவதுனா கஷ்டப்படுவாங்களேனு நிரந்தரமா கஷ்டத்தை கொடுத்துட்டு போயிட்டாரு.
தினகரன் அண்ட் பேமிலி சூப்பர். ரேவாவும் முயன்று டியூஷன் எடுத்து தன்னை மீட்டெடுத்து கொண்டது நைஸ். ஏதோ வாசிக்கலாம்னு தான் எடுத்தேன் கதை முடிந்ததே தெரில. எதார்த்தமா இருந்தது. வாழ்த்துக்கள்.
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 2 Online
- 867 Members