Nithya Mariappan
நான் நித்யா மாரியப்பன். பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில். அடிப்படையில் தீவிர வாசகியான எனக்கு திரில்லர், திகில் மற்றும் அறிவியல் புனைவு கதைகளைப் படிப்பதில் அலாதி பிரியமுண்டு. இந்த வாசிக்கும்பழக்கம் தான் என்னை எழுதவும் தூண்டியது எனலாம். கல்லூரிப்படிப்பு, தொழிற்கல்வி, வேலை என வேகமாகப் பயணித்து அந்த வேகம் சலித்துப் போனதில் வீட்டில் ஓய்வாக இருக்கும் சமயத்தில் எழுதத் தொடங்கினேன்.
இணையம் தான் நான் எழுதுவதற்கான முதல் வாய்ப்பையும், எனது எழுத்துக்கான வாசகர்களையும் அளித்தது என்றால் அது மிகையில்லை. அத்தோடு எனது எழுத்தார்வத்தைப் புரிந்து கொண்டு எழுதுவதற்கான பூரணசுதந்திரத்தை அளித்த பெற்றோரும் எனது எழுத்துப்பயணம் நிற்காமல் தொடர்வதற்கான முக்கியக்காரணிகள்.
நகைச்சுவை கலந்தகுடும்பக்கதைகள் தான் எனது எழுத்து பாணி. படிப்பவர்கள் முகம் சுளித்துவிடக் கூடாது என்பதிலும், வெறும் காதலை மட்டும் சொல்லாது மற்ற உணர்வுகளையும் எழுத்தில் அழகாக வடிக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகிறேன்.
அந்த வகையில் எனது நாவல்களான ‘கிருஷ்ணதுளசி’, ‘யாவும் நீயாக மாறினாய்’, ‘அமிர்தசாகரம்’, ‘காதல்கொண்டேனடிகண்மணி’, ‘அனுபல்லவி’ ஸ்ரீ பதிப்பகத்தில் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
‘கண்ணாமூச்சி ஏனடி ரதியே’, ‘மாயமித்ரா’, ‘ராகமஞ்சரி’, ‘பரிதி தீண்டிய பனிமலரே’, ‘நினைவில் உறைந்த நீராம்பலே’ இந்த ஐந்து நாவல்களும் அருணோதயம் பதிப்பகம் வாயிலாக புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆறாவதாக ‘உன்னில் இதயம் அளாவுதே’ புத்தகமாக வெளிவரவிருக்கிறது. எனது குறுநாவலான ‘அன்புடை அன்றிலே’ ராணிமுத்துவில் வெளிவந்தது.
இதுவரை 42 நாவல்கள், 4 குறுநாவல்கள், 25 சிறுகதைகள், 11 கவிதைகள், 2 சிறார் கதைகள் எழுதியுள்ளேன். 43வது நாவலான ‘அன்பனின் ஆரபி’ இணையத்தில் தினந்தோறும் பதிவுகளாக வந்துகொண்டிருக்கிறது.
எனது கதைகளை அமேசான், பிரதிலிபி, எழிலன்பு நாவல்கள் தளம், praveenathangarajnovels.com மற்றும் nithyamarippan.blogspot.comல் படிக்கலாம்.
நன்றி!
என்றும் நட்புடன்
நித்யா மாரியப்பன்
Leave a reply
-
Yazhini1 year ago
-
G. Shyamala Gopu1 year ago
-
அனுஷா டேவிட்1 year ago
-
S.B2 years ago
-
Arulmozhi Manavalan2 years ago
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 5 Online
- 1,938 Members