JJ-2024 எழுத்தாளர் பெயர்-கதை பெயர் பட்டியல்
வணக்கம்,
ஜுன் போனால் ஜூலை காற்றே-2024 போட்டிக்கு பெயர் கொடுத்த அனைவருக்கும் என்மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.
புதுசா ஒரு காரியம் துவங்க, அதில் தாங்களும் பங்கேற்கும் எழுத்தாளராக கலந்துக் கொள்வது மகிழ்ச்சி.
ஜன்னல் பயணத்தில் காற்று வீச, அதனை ரசித்து கொண்டு வந்தேன். அப்பொழுது 'ஒரே ரயில், ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை, பயணம் மட்டும் ஒன்று.' இதனை பற்றி சிந்தித்து கொண்டு வரும் பொழுது தான், ஏன் நாம ஒரே போட்டியில் வெவ்வேறு தீம் கொடுத்து வெவ்வேறு கதைகளை எழுத வச்சி போட்டி நடத்தக்கூடாது? என்று தோன்றியது. எப்பவும் முடிவு எடுத்தா அதை செயல்படுத்திடனும். அதனால் உடனடியாக போட்டி அறிவிப்பு பதிவு செய்தேன்.
போட்டியின் விதிமுறைப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும், ஒவ்வொரு தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சின்னதாக ஒரு paragraph அளவிற்கு கதையின் வழிக்காட்டுதலாக ஒரு தீம். அந்த தீம்மை வச்சி நீங்க எப்படி வேண்டுமென்றாலும் உங்கள் கற்பனை திறமையை பயன்படுத்தி, கோர்வையாக, எழுத்தில் மெருக்கேற்றி, ஒரு முழுமையான கதையாக, நிறைவான முடிவோடு உங்கள் எழுத்தில் தரவேண்டும்.
எவ்வாறு கதையை கொடுக்க போறாங்க. கதையின் கரு, எழுத்துநடை, கதையில் வரும் வித்தியாசமான வசனங்கள், சம்பவங்கள் இதற்கு தான் வெற்றி வாய்ப்பு அமையும்.
பெயர் கொடுக்க ஜூன் 15 வரை நேரம் உள்ளது. அதன் பின் பெயர் கொடுக்க விரும்பினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை தாழ்மையோடு தெரிவிக்கின்றேன்.
இங்கே நிச்சயம் பெயரை கொடுத்தால் முடிப்போம் என்றவர்கள் மட்டும் பங்குபெறுங்கள் என்றதற்கு இணங்க எழுத்தாளர்கள் பெயர் கொடுத்துள்ளார்கள்.
அவர்கள் கதை தீமிற்கு ஏற்றவாறு அவர்கள் தலைப்பை கொடுத்துள்ளார்கள். வார்த்தை அளவு 10000 முதல் எல்லயற்ற வார்த்தைகள் மற்றும் sep 30 முடிக்கணும்.
எழுதுபவரின் பெயர்கள் மற்றும் அவர்கள் எழுதும் கதை பெயர்களின் அட்டவணை 👇
🔰எழுத்தாளர் பெயர்கள்---கதைப் பெயர்கள்🔰
---------------------------------------------------------------------
🔰நித்யா மாரியப்பன்--மேகத்தின் மோனம்🔰
🔰வத்சலா ராகவன்--டாக்டர்.ரஜினிகாந்த்🔰
🔰பத்மஸ்ரீ--தொடுவானமாய் உனை பார்க்கிறேன்🔰
🔰சுமையா பேகம்--தட்டாதே திறக்கிறேன்🔰
🔰பானுரதி துரைராஜசிங்கம்--தாமரையின் தழலவன்🔰
🔰அனுஷா டேவிட்--பிரியமானவளின் நேசன்🔰
🔰அருள்மொழி மணவாளன்--அரிதாரம்🔰
🔰தனக்யா கார்த்திக்--நிழல் தேடும் நிலவே...🔰
🔰தேவி--மெய்யெனக் கொள்வாய்🔰
🔰பார்கவி முரளி--வஞ்சிப்பதோரும் பேரவா!🔰
🔰கமலி--கடல் விடு தூது🔰
🔰சித்ரா ஹரிதாஸ்--கானலாய் ஒரு காதல்🔰
🔰ஜெயலக்ஷ்மி கார்த்திக்--மனம் உன்னாலே பூப்பூக்குதே🔰
🔰அருள்மொழி காதலி--சிநேகலோலாமம்🔰
🔰Subhasree Prema--தீயாகிய தீபம்🔰
🔰முருகேஸ்வரி-இதயனின் இதயத்துடிப்பவள்🔰
🔰நுஹாமர்யம்--மொழி அறியா காதல்🔰
🔰துமி --கொல்லிப்பாவை🔰
🔰🔰🔰
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 0 Online
- 867 Members