ரித்தி ரிவ்யூ காதல் மந்திரம் சொல்வாயோ
காதல் மந்திரம் சொல்வாயோ
#rithi விமர்சனம்
யாழ்-மொழி
முகில்-லதா
இதுல ஒரு ஹீரோனு நான் கண்டிப்பா சொல்லவே மாட்டேன்.. கெத்தா இருந்தா தான் ஹீரோனு இல்லை அப்டின்றதுக்கு முகில் எக்ஸாம்பில்..
நான் முகில் விசிறி... செம்ம கேரக்டர்ல.. பக்கத்து வீட்டு பையன்ற பீல் குடுக்க வச்சுட்டீங்க பா.. அதுக்கே தனி பாராட்டுக்கள்.. அதுவும் சாரு பிரண்ட்டா இருக்க கேட்டும் மறுத்த பார்த்தியா அங்க நிக்குற டா நீ..
சாரு சேம் லைக் முகில்.. நிதர்சனம் புரிஞ்சி நடக்குறது அழகு.. இறந்த ஒருவனை நினைத்து காதலில் தவிப்பதுலாம் நிஜமா பீல் பண்ண வச்சுட்டாங்க..
ஐயோ மொழிய மறந்துட்டேனே.. சாரிங்க இவரு தான் ஹீரோ.. நிஜமாவே ஹீரோ தான்.. காதலுக்கு மட்டும் இல்லாமல் நட்புக்கும் பெருமை சேர்த்த ஹீரோ.. காதலி பின்னாடி சுத்துறதும் நண்பனை கண்டுபிடிக்க சுத்துறதும்.. ரொம்ப அழகு வ்ரைட்டரே! ..
எல்லா கதையிலும் வர்றது மாதிரி பிரண்ட் தன் தங்கையை காதலிக்கிறது தெரிஞ்சி உடனே சந்தோசப்படாம உண்மையை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் மொழி செம்ம...
யாழினி அக்கா... நீங்க ஜாடிக்கு ஏத்த மூடி தான்.. அது எப்படி வர்மா கூட சேர்ந்து அவரை மாதிரியே டிடெக்டிவ் வேலை பார்த்து மொழி நடந்து கொண்டதை புரிஞ்சுக்கிட்டயே??? நீ எல்லாம் மொழிக்கு தான் மா சரி பட்டு வருவ...
நிறைய கேரக்டர்ஸ் பத்தி சொல்ற மாதிரி இருக்கா இல்லைங்க 2 ஜோடி பத்தில் தான் பேசியிருக்கேன்.. ரொம்ப அழகான பேமிலி.. அழகான காதல் கதை.. ஹாப்பியா படிக்கலாம்..
பெஸ்ட் விஷேஸ் வ்ரைட்டர் ஜி💐💐💐..
- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 5 Online
- 978 Members