Skip to content
Share:
Notifications
Clear all

Menaga Vivaeka ரிவ்யு தாரமே தாரமே வா

1 Posts
1 Users
0 Reactions
130 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 373
Topic starter  

தாரமே தாரமே வா பிரவீணா தங்கராஜ் அவர்களின் கதை

விமர்சனம் வழங்கியவர்: Menaga Vivaeka 

  

       குறைந்த கதாபாத்திரங்கள் கொண்ட நிறைவான  கதைக்களம்.நாயகன் ரித்தீஸ்வரன் நாயகி ஐஸ்வர்யா.ரித்து உன்னுடைய தன்மானம் சுயமரியாதை எல்லாமே சூப்பர👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼என்னதான் உடன் பிறந்த அக்காவா இருந்தாலும் அவங்ககிட்டேயும் எந்தவித உதவியும் எதிர்பார்க்காம உன்னோட சொந்த முயற்சியில உன்னோட தேவையை பார்த்துகிறது அருமை.இலக்கியா போல உனக்கொரு நட்பு கிடைத்தது வரம்.சந்தர்ப்ப சூழ்நிலையால் நீ ரியாவ கல்யாணம் பண்ணாலும் அவளுக்கு தேவையான எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணது அழகா இருந்தது.அடேய் ரித்து இலா வுக்காக நீ ரியாவ அடிச்சது உன்ன பொறுத்தவரை சரியாய் இருந்தாலும் அவ சின்ன பொண்ணு தானே.உனக்கும் அவளுக்கும் எவ்ளோ வயசு  வித்தியாசம். கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை உங்க காதலால் அழகா சரி பண்ணிடீங்க.ஆனாலும் இந்த ரியாவ வேளாவேளைக்கு சமைச்சு போட்டு ஸ்னாக்ஸ் வாங்கி தந்து அவளை ஒரு வேலையும் செய்ய விடாம ரொம்ப செல்லம் குடுக்குறடா  நீ.😤😤😤😤😤😤😤😤😤திலீப் மாதிரி ஒரு சிலர் இருக்காங்க.அவனோட தங்கச்சிய தன்னோட நபர்கள் தப்பா யூஸ் பண்ண பார்த்தாங்கன்னு அவனுக்கு கோவமா வருது.ஆனா ரியா விசயத்துல அவன் அப்படி நடக்கலியே.இப்போ அவ அவனோட மாமா பொண்ணுன்னு தெரிஞ்சபின்னாடி திருந்தி வருத்தப்பட்டு என்ன செய்ய.🤛🤛🤛🤛🤛🤛🤛அடேய் ரித்து இப்பவாவது ரியா மேல உனக்கு இருக்கிறது அக்கா பொண்ணுன்ற பாசம் மட்டும் இல்ல காதல்னு புரிஞ்சதா.🤔🤔🤔🤔🤔🤔மஸ்தான் மாதிரி ஒரு சிலர் நன்றிக்கடனுக்காக  அவங்க வாழ்க்கையை இழந்தது மாதிரி இனி யாரும் அந்த தப்ப பண்ண கூடாது.இதனை அவனும் கஷ்டப்பட்டு அந்த பொன்னும் கஷ்டப்பட்டு எவ்வளவு மனஉளைச்சல்.தணிகாசலம் என்னதான் ரியாவோட வளர்ப்பு அப்பாவா இருந்தாலும் அவ மேல அவர் அதீத அன்பு வச்சிருந்தார்.அதனால தான் அவ்ளோ கண்டிப்பு அவளுக்கு.ரியாவோட உண்மையான அப்பா வந்தபின்னடி எங்க தன்னோட பொண்ணு அவர் கூட போயிருவாளோன்னு அவர் தவிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல.ஆனாலும் அவரும் இவங்க பாசத்தை பார்த்து அவளை தன்னோட வச்சிக்கணும்னு நினைக்காம அவங்க பாசத்தை புரிஞ்சது அருமை.யுகன் ரியாவோட சொந்த அண்ணனா இல்லாம இருந்தாலும் எவ்ளோ கஷ்டப்பட்டு அவளை கண்டு பிடிச்சு அவங்க பேமிலி கிட்ட கூட்டிட்டு போறது சூப்பர்.என்ன அப்ப  அப்ப இந்த ரியாகிட்ட அடி வாங்கிட்டே இருக்கான்.இதுல அவளோட வாத்தியார் வேற.அவனை எப்ப பாரு அறுவைனு கலாய்க்கிறதே அவ வேலை.🤗🤗🤗🤗🤗ரியாவும் நிதர்சனத்தை புரிஞ்சு அவளோட ரெண்டு அப்பாவையும் ஏத்துக்கிட்டது நல்ல முடிவு.பாசம் காதல் நட்பு துரோகம் புரிதல் இப்படி நிறைய இந்த கதைல இருக்குப்பா.செம்ம ஸ்டோரி.ரித்து ரியா காதல் அழகானது.நெஞ்சமதில் நீங்க இடம் பிடித்தது தாரமே தாரமே வா.👍🏻👌🏼👏🏻👏👍🏻👍🏻👌🏼👏🏻👏👏💖💜💜💖💜💖💜💖💜💖💖💖💖💜💖💖💖💖💖.இவங்க கதை வர ஹீரோவ சைட் அடிக்குறதே எனக்கு பொழைப்பா  போச்சி. பாவம் என்ற புருஷன்.. 😁😁😁😁


   
ReplyQuote