தேடி வந்த திரவியமே கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு
புத்தகமாக முதல் பரிசு பெற்ற இரட்டை ரோஜா போட்டிக்கதை. அக்கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்கள் உங்கள் பார்வைக்கு.
கதை விமர்சனங்கள் பிடிச்சிருந்தா புத்தக வாங்கி படித்து மகிழுங்கள்.
விமர்சனம் வழங்கியவர் - எழுத்தாளர் நித்யா மாரியப்பன்
#இரட்டைரோஜாக்கள்போட்டிக்கதைகள்
கதை: தேடி வந்த திரவியமே
எழுதியவர்கள்: பிரவீணா தங்கராஜ் & ஜெயலட்சுமி கார்த்திக்
சொந்த தொழில் ஆரம்பிக்கும் முனைப்பில் இருக்குற இளைஞன் ஸ்ரீதர். அதற்கு அவன் தேர்ந்தெடுத்த தொழில் வேஸ்ட் மேனேஜ்மெண்ட். வித்தியாசமான ஃபீல்ட் தான். தொழிலை பெருக்குற ஆர்வத்தோட இருக்குறவனுக்குள்ள ஒரு குட்டி காதல் மலருது.
ஆனா அவன் காதலிக்கிற நிரஞ்சனாவோ தன்னோட அண்ணாவோட காதல் ஏற்படுத்துன கசப்பான அனுபவத்தை மனசுல வச்சுக்கிட்டு அவனுக்கு பதில் சொல்லாம காலம் கடத்துறா.
இந்த நேரத்துல தான் ஒரு ரவுடி கும்பல் கிட்ட இருக்குற பணம் பல கை மாறி கடைசியா ஸ்ரீதர் கைவசம் வருது.
ஸ்ரீதரோட அப்பா அமுதவாணன் நேர்மையின் சிகரம். அம்மா மலர்விழிக்கு அறுவைச்சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுது. அதேநேரம் பேங்க் லோனுக்கு அப்ளை பண்ணுறப்போ மேனேஜர் அவன் கிட்ட லஞ்சம் கேக்கறார்.
இதே போல இன்னொரு இக்கட்டு நிரஞ்சனாவுக்கும் வருது. வெளிநாட்டுல இருக்குற அவளோட அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால ஒத்தாசைக்கு அங்க போறாங்க நிரஞ்சனாவோட அம்மா மோகனா.
தனித்து விடப்பட்ட நிரஞ்சனாவும், பணத்தைக் கண்டெடுத்த ஸ்ரீதரும் அடுத்து என்ன பண்ண போறாங்கங்கிறது தான் கதை.
வித்தியாசமான ஒரு தொழிலை செய்ய ஆரம்பிக்குற இளைஞனுக்கு நடைமுறை வாழ்க்கைல உண்டாகுற பிரச்சனைகள், அவன் சந்திக்கிற கேலிப்பேச்சை சரியா படம் பிடிச்சி காட்டிருக்காங்க. நாடக்கத்தனமான வர்ணனைகள் அற்ற சராசரி வாழ்க்கைல நம்ம சந்திக்கிற பொண்ணா கதாநாயகியை காட்டுனது நல்லா இருந்துச்சு.
முக்கியமா பணம் எனும் மாயாவிய பத்தி அழகான வார்த்தைகள்ல சொல்லிருந்தாங்க. இயல்பான நீரோட்டம் போல போன கதைல ஆங்காங்கே இருந்த தட்டச்சுப்பிழைகளும் வாக்கியப்பிழைகளும் வெண்பொங்கலுக்கு நடுவே வர்ற மிளகாட்டம் கொஞ்சம் உறுத்திச்சு. ஆனா கதையோட்டத்துல பூதாகரமா தெரியல. மொத்தத்துல பெரிய கனவுகளுடன் கூடிய சராசரி இளைஞனின் கதை இது.
மகனை பாக்க வெளிநாட்டுக்கு போற மோகனாவுக்கு கிடைச்ச வரவேற்பு என்ன? ஸ்ரீதர் அந்தப் பணத்தை தனக்காக உபயோகிச்சானா இல்லையா? அந்த ரவுடி கும்பல் பணத்தை தேடி ஸ்ரீதரை பிடிச்சாங்களா இல்லையா? நிரஞ்சனா அவனோட காதலை ஏத்துக்கிட்டாளா? அப்பிடி ஸ்ரீதர் அந்த பணத்தை உபயோகிச்சது தெரிஞ்சா நிரஞ்சனா எப்டி ரியாக்ட் பண்ணுவா? நேர்மைச்சிகரம் அமுதவாணனின் நிலை என்ன? இது எல்லாம் கதை படிச்சா தெரிஞ்சு போயிடும்
கதை : தேடி வந்த திரவியமே
ஆசிரியர் : பிரவீணா தங்கராஜ் - ஜெயலட்சுமி கார்த்திக்
விமர்சனம் செய்பவர் : Writer- ரியா மூர்த்தி
🔥🔥🔥ஓப்பனிங் சீன்லயே ரீடர உள்ள இழுத்துப் போடுற டேலண்ட் சில கதைகளுக்குத்தான் உண்டு. இந்தக் கதை அந்த வகையறா. சூரரைப் போற்று படம் புடிச்சவங்க எல்லாருக்கும் இந்தக் கதையும் கண்டிப்பா புடிக்கும். 👌👌👌ஹீரோனா இப்படித்தான்டா இருக்கனும்னு எடுத்து சொல்லற அளவு பக்கா டேலண்ட்டடு பையன் ஸ்ரீதர். தமிழ் சினிமாவுக்கே உரிய லூசு ஹீரோயினா இல்லாம யதார்த்தமான 21st சென்ஞ்சுரி பொண்ணா வர்ற புத்திசாலி பொண்ணு நிரஞ்சனா. ஹீரோ கைக்கு வர்ற திடீர் பணமும், அந்த பணத்தால உருவாகுற சம்பவங்களும்தான் கதைக்களம். எபிக்கு எபி பணம் விளையாடுது 💸💸💸 ரைட்டர்ஸ் தங்களோட மெச்சூரிட்டிய மொத்த உலகத்துக்கும் காட்டணும்னு வேற லெவல்ல கதையோட்டத்த உருவாக்கி இருக்காங்க. 💪💪💪 கதைக்கான மிகப்பெரிய பலமே ஒவ்வொரு சூழ்நிலையிலயும் நாம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்போமோ அதையே கேரக்டர்களும் யோசிக்குற நிதர்சனமும், கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் குறையாம கொண்டு போன விதமும். கதையில எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம்னா பணம் பத்தி அப்பப்ப வர்ற டயலாக்தான்.
ஃபைனலா ரைட்டர்ஸ்க்கு ஒரு ரெக்வெஸ்ட், மோகனா மலர் மாதிரி மாமியார் இருந்தா எங்களுக்கு ஒரு பார்சல் அனுப்புங்கய்யா, புண்ணியமா போவும் 🙏🙏🙏 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நட்புக்களே 💝💝💝
விமர்சனம் வழங்குபவர் : ரைட்டர் இனியா
கதை பெயர்-தேடி வந்த திரவியமே
கதை ஆசிரியர்- praveena thangaraj - Jeya Lakshmi Karthik
கதை விமர்சனம்- எத்தனை கதை படிச்சாலும் அதுல எத்தனையோ கதை நம்மை கவர்ந்தாலும் ஒரு சில கதைகள் மட்டும் தான் ஏனோ மனசுல நீங்கா இடம் பிடிக்கும் அதுல இந்த கதையும் ஒன்னு💝
முதலில் இரண்டு எழுத்தாளர்களுக்கும் hats off .. 🔥 😍
இந்த கதையில நான் மூணு விஷயத்தை கத்துக்கிட்டேன்.
1. பணமும் அதனை சார்ந்த நகர்வுகளும்
2. உறவுகளின் மதிப்பு
3. சமூக அக்கறை
மூனையுமே வேற லெவல்ல காமிச்சிருந்தாங்க. இந்த கதை மனசுக்கு ரொம்ப நெருக்குமாச்சு அது ஏன்னா காட்சிகள் அதிக மிகை படுத்துதல் இல்லாமல் இயல்பா நகர்ந்த விதம்.💝
பணத்துக்கு கொடுத்த வர்ணனைகள் எல்லாம் அருமை,அது கடக்கும் பாதை அல்டிமேட்.
இது எல்லாத்தையும் விட நான் இந்த கதையில வெறுத்த ஒருத்தன் இருக்கான்
அவன் பேரு சந்துரு
😡😡😡😡😡😡😡😡 அவனை நிறைய திட்ட தோணுது விமர்சனமா போனதால விட்டுறேன்.
இந்த கதையில ஹை லைட்டே #wastemanagement தான்🔥 அடர்வனம், உரம்,வாத்து பண்ணை, குப்பைகளை அழகாக சீரமைக்கிறது இதெல்லாம் நோ வேர்ட்ஸ்🔥 ரொம்ப அழகா விவரங்களை நம்ம மனசுல பதிய வச்சிருக்காங்க.
கடைசியா முக்கியமான ஒன்னு என்னென்னா " இந்த விமர்சனத்தை பாக்குறவங்க கதையை கண்டிப்பா படிங்க மிஸ் பண்ணிடாதீங்க.." ரொம்ப இயல்பா நகரும் எதார்த்தமான ஆழ் கருத்துகள் உள்ள இன்னும் ஓப்பனா சொல்லனுமுன்னா நமக்கே நடக்குற மாதிரி ஒரு ஃபீல் அவங்க உள்ளுணர்வுகள் வரைக்கும் நம்மள பாதிக்கும்.
ஐ லவ் மோகனா அம்மா 😘😘😘😘😘
ஶ்ரீதர்,மலர்,அமுதவாணன்,நிரஞ்சனா, சந்துரு எருமை😡,மீரா( அவளையும் எனக்கு புடிக்காது) அப்றம் அந்த செல்ஃபி பைத்தியம் மேகா எல்லாரோட பாத்திர படைப்பும் அல்டிமேட்.
#காதல் இந்த காதல் தான் நமக்கெல்லாம் கிடைக்கனும் அப்படின்னு feel பண்ண வைக்கிற எதார்த்தமான காதல் அதே நேரத்தில் ஆழமான காதல்.
ஒட்டுமொத்தமாக இன்னைக்கு என்னைய எங்கையும் நகர விடாம படிக்க வச்சிட்டு எங்க அம்மாக்கிட்ட என்னைய திட்டு வாங்க வச்ச கதை🤣🤣🤣🤣
பின்குறிப்பு- #வீட்டு_வேலைகளை_முடித்தபின்_படிக்க_ஆரம்பிக்கவும்_இல்லையென்றால்_என்நிலைமை_தான் 🤣🤣🤣 ஏன்னா படிக்க ஆரம்பிச்சா கீழ வைக்க தோணாது😌
#தேடிவந்த_திரவியமே - திக்கெட்டும் தொலைவெல்லாம் சுற்றி திரியும் மாயவன் அவனை சிறைப்பிடித்தவனின் கதை🔥
அக்காக்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
விமர்சனம் வழங்குபவர் : கௌசல்யா முத்துவேல் ரீடர்
தேடி வந்த திரவியமே!!!..
இரட்டை ரோஜா கதைக்காக ஜெயா அக்கா, பிரவீணா அக்கா இருவரின் கூட்டு முயற்சி!!.. இருவருக்கும் முதலில் என் வாழ்த்துக்கள் இப்படி ஒரு கதைக்கருவை தேர்ந்தெடுத்தமைக்கு💖!!.. ஒரு மாயாவியின் பயணமே இக்கதை!!!.. அவன் எங்கு யாரிடம் சேர்ந்தான்!!!. அவனை எடுத்தவனின் நிலை என்ன?!!. அவனுக்கு நல்லதா??!!.. கெட்டதா??!!. எனும் பல கேள்விகளுக்கு பதில்களை படு சுவாரஸ்யமான முறையில் கொடுத்துள்ளார்கள் எழுத்தாளர் இருவரும்!!!.. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் ஏதோ ஒரு கருத்தை பதிய வைத்தது!!.. குப்பையை வைத்து வாழ்வதற்கான பல அருமையான தகவல்களை கூறியுள்ளார்கள்!!!.. அனைத்து செய்திகளும் புதியவை!!!.. நம்மை சிந்திக்க வைப்பவை!!!.. வீட்டுக்கும், நாட்டுக்கும் தேவையான பல செய்திகளை கதா கொண்டுள்ளது!!!.. தாயின் மீதான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்தது!!!
தன் மகவுகள் தவறே செய்தாலும் அவர்களுக்கு தேவையெனில் அனைத்தையும் மறந்து அவர்களுக்கென அனைத்தும் செய்யும் தாயின் இயல்பான குணத்தை சொன்ன இடங்கள் அபாரம்!!!.. அதற்கான சாதகங்களையும், பாதகங்களையும் விளக்கிய போது உங்கள் எழுத்துக்களால் காட்டிய பதட்டம் படிக்கும் எங்களோடு கேட்காமலே ஒட்டிக் கொள்கிறது!!!.. பணத்திற்காக தாயின் நிலையை சிறிதும் கருதாமல் சுயநலமாக பேசும் காட்சிகளில் எப்படியாவது அவர்களை கூட்டிச் செல்ல வேண்டும் என மனம் தானாக வேண்டுகிறது!!.. அத்துனை உயிர்ப்பு உங்கள் இருவரின் எழுத்துக்களில்!!.
. பொறுப்பான காதலியாக தன் காதலனை தட்டிக் கேட்டதில் சனாவை மிகவும் பிடித்தது!!!.. அதே நேரத்தில் அவனுக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருந்ததும் மனதை கவர்ந்தது!!!.. தன் மகனின் சூழ்நிலை அறிந்தாலும் செய்த தவறுக்கு தண்டனை நிச்சயம் வேண்டும் என்ற உறுதி தந்தையாக அவர் மேல் தனி மரியாதையை கொடுத்தது!!!..
சூழ்நிலையால் செய்த தவறுக்கு அனைவரும் கோவம் காட்டினாலும் தவற்றை சரி செய்ய வழி சொன்ன தாயன்பு வேர லெவல்!!!.. மாயாவியின் நிலை என்ன??!!.. எப்போது யாரிடம் சேருவான்??!!.. சேர்ந்த பின் அவனின் நிலை என்ன!!??.. பெற்றவரின் நிலை என்ன!!??.. என விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் அபாரம்!!!.. அனைத்திற்குமே, அனைவருக்குமே நல்லவை மட்டுமே முடிவாய் கொடுத்தது அருமை!!!.. வரிகளும், வசனங்களும் கதைக்கு கூடுதல் அழகு!!!..
காதல், குடும்பம், புதிய கருத்துக்கள், இயல்பான காட்சியமைப்புகள் என கதையை கொண்டு சென்ற விதம் அத்துனை நேர்த்தி!!!.. எந்த ஒரு இடத்திலும் சிறிதும் சலிப்பு தட்டவில்லை!!!... சுவாரஸ்யமும் குறையவில்லை!!!.. கதை ரொம்ப ரொம்ப பிடித்தது!!!.. இயல்பான வசனங்களும், காட்சியமைப்புகளும், பல புதிய அருமையான செய்திகளும் மனதை கவர்ந்தது!!.. இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💖
விமர்சனம் வழங்கியவர்: Chithrasaraswathi reader
பிரவீணா தங்கராஜ் மற்றும் ஜெயலட்சுமி கார்த்திக்
இருவரின் இரட்டை ரோஜா கதை வரிசையில் தேடி வந்த திரவியமே எனது பார்வையில். பரிசு பெற்ற கதை. பணம் என்ற செல்வம் செல்லும் இடம் மற்றும் அதனை ஈட்ட ஈடுபடும் வழிகள்தான் அதன் மதிப்பு என உணர வைக்கும் கதை. முறை தவறிய வழியில் வந்த பணம் நேர்மையான ஒருவனான ஸ்ரீதரிடம் வரும் கிடைத்தாலும் அதை உபயோகம் செய்ய மனம் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதும் சூழ்நிலை அந்தப் பணத்தை உபயோகம் செய்ய வைக்கிறது. நேர்மையான தகப்பன் மற்றும் காதலி நிரஞ்சனா ஆகியோரால் ஏற்றுக் கொள்ள முடியாத இந்நிகழ்வை அதை உபயோகப்படுத்தும் விதத்தால் தன் மனதை அவர்களிடம் புரிய வைக்கிறான். நிரஞ்சனாவின் சகோதரனின் சுயநலமும் , தன் அடுத்த தலைமுறையை நேசிக்கும் அவளின் தாயின் நடவடிக்கைகளும் இன்றைய காலத்தின் யதார்த்தம். வாழ்த்துகள் இருவருக்கும். கழிவுப் பொருட்களை பயனாக உபயோகம் செய்து வரும் நாயகன் என்ற சமுதாய நலன் குறித்த கதாபாத்திரம் நன்று.
இதுவரை சேகரித்த முகநூல் கருத்துக்கள். வாசகர்களே... உங்களுக்கு கதை பிடித்தால் வாங்குங்
க. 😊
இல்லைப்பா போகலைனா புத்தகமா வேண்டும் என்போர் இன்பாக்ஸ் வாங்க.



- 130 Forums
- 2,083 Topics
- 2,351 Posts
- 4 Online
- 978 Members