Skip to content
Share:
Notifications
Clear all

புவனா மாதேஷ் review for காதல் மந்திரம் சொல்வாயோ

1 Posts
1 Users
0 Reactions
264 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்கியவர்: புவனா மாதேஷ் (ரைட்டர்)

 

மீண்டும் ஒரு விமர்சனத்த்துடன் நான் தான் 😜😜😜😜😜😜 

அடுத்த தலைப்பு மந்திரம் போட்டு என்னை அப்படியே அந்த கதையை படிக்க வைச்சது.

காதல் மந்திரம் சொல்வாயோ...

அருமையாக கதைக்களம்...முதலில குழப்பமும், ட்விஸ்ட்டும் அதிகம் இருந்தாலும்  படிக்க படிக்க  ரொம்ப பிடிச்சு போச்சு.. 😍😍😍😍 யாரை பத்தி முதல்ல சொல்லலாம்... 🤔🤔🤔எனக்கு அந்த கதையிலயே ரொம்ப பிடிச்சது கதிர் முகில் தான்..😘😘😘😘 ஹீரோன்னு நினைச்சுக்க வேண்டாம் 😜😜😜 ஹீரோவோட நண்பன்😘😘😘😘 ரொம்ப சாது..😋😋 அடிக்கடி மறந்து போற குணம் இவனுக்கு 😃😃 அதை நினைவு படுத்தி விடற தங்கச்சி😍😍😍 அண்ணன் தங்கச்சி பாசம் அடி தூள்.. 🤗🤗🤗 ஒருதலையா காதலிச்சு அது கை கூடலைன்னு இவன் அழுதது ரொம்ப வருத்தமா போச்சு..😣😣😣 கடைசில இவன் செத்துட்டான்னு சொல்லும் போது கதை எழுதன எழுத்தாளர் மேல கோபம் நிறையவே வந்துச்சு..😤😤😤😤😤😤

அடுத்து ஹீரோ...😌😌😌 அழகான ஹீரோ.. 😛😛😛ரசிக்கற மாதிரி வந்தான்..😘😘😘 தன் நண்பனோட சாவுக்கு காரணம் தான்னு நினைச்சு பீல் பண்ண இடம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..😖😖 ஹீரோயின் மேல இருந்த காதல் வாவ்...😍😍 அதைவிட இவனோட நட்பு செமயா இருந்துச்சு..😍😍 அப்பறம் ஹீரோயின்😍😍😍  நல்ல தங்கை..😘😘. கடைசி வரைக்கும் காதல்' என்கிற மந்திரம் சொல்லாம கடைசியா படம் முடியும் போது அந்த மந்திரத்தை சொன்ன தெய்வம் இவங்க தான்..🤣🤣🤣🤣 ஆரம்பித்துல ஹீரோ இவளோட டம்பளர்ல juice குடிச்சுட்டான்னு மூஞ்சியை தூக்கி வைச்சது குபீர் சிரிப்பு..🤣🤣🤣 இவளோட ரோல் செமயா இருந்துச்சு... அப்பறம் அதுல வர அப்பா, அம்மா, மாமா, அத்தை, எல்லாரும் சூப்பர்...🤗🤗 நெஸ்ட் ராகவ்...  அண்ட் சாரு.. யார் இவங்கன்னு கேட்க தோணுதுல...😋😋😋 முதல்ல சொன்னனே முகில் அவனோட காதலி தாங்க சாரு..😌😌😌 சாருவோட மாமா பையன் தான் ராகவ்..😏😏 கடைசிவரை இவங்களோட பங்களிப்பு ரொம்ப அதிகமா இருக்கும்.. 😍😍 முகில் & சாருவோட சீன்ஸ் கூட செம... 😍😍😍சாரி ராகவ் & சாருவோட லவ்ஸ் செம சூப்பர்🤣🤣🤣🤣... என்ன டா இப்படி சொல்றன்னு நினைக்காம கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.. கதை அருமை..😍😍😍 

நான் படிக்கும் போது எனக்கு தோன்றிய சில விஷயங்கள்.. 

ஹீரோயின் குடும்பம் உறவுகள்.. சாரு குடும்ப உறவுகள், ராகவ், வர்மா குடும்ப உறவுகள் ரொம்ப குழப்பம் அதற்கு பதிலும் ஒரு பதிவில் இருந்தது ஆனா எனக்கு புரியல.. இப்பவரை அது குழப்பம் தான்.. சில இடங்களில் எழுத்துப்பிழை பார்த்தேன் டைப்போ எரர்ன்னு நினைக்கிறேன்.. சில இடங்களில் பெயர் மாறி மாறி இருந்தது..

மற்றப்படி கதை அருமை..😍😍 ட்விஸ்ட்க்கு பஞ்சமில்லை..கதை நகர்வு அருமை.. 😍😍

எனது குறிப்பு : எழுத்து பிழை பெயர் குழப்பம் களையப்பட்டு புத்தகமாக வந்து விட்டது.🤩😜

  

 


 
Posted : June 18, 2024 2:31 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved