Skip to content

Menaga Vivaeka review for ஏரெ(றெ)டுத்து பாரடா முகிலனே

1 Posts
1 Users
0 Reactions
212 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

ஏரெடுத்து பாரடா முகிலனே

ஆசிரியர் - பிரவீணா தங்கராஜ்

விமர்சனம் வழங்கியவர் : Menaga Vivaeka

 

நாயகன்  - வெண்முகிலன்

நாயகி  - நுவலி

 

இவன் ஏரெடுத்து உழவு மட்டும் செய்யவில்லை. தன் உழைப்பால் நாயகியை கவரவும் செய்துவிட்டான். 

 

நகரத்தில் மென்பொருள் அலுவலகத்தில் பணிபுரியும் ஆடவன் திடீரென தன் சொந்த கிராமத்திற்கு வந்து உழவு தொழிலை மேற்கொள்கின்றான். நல்ல பதவி ஐந்திலக்கண ஊதியம் நண்பர்கள் இப்படி இருந்த ஆடவன் இவ்வாறு செய்ய கரணம் என்ன?

 

நாயகனின் உழைப்பின் மீதுள்ள ஆர்வத்தால் நாயகி ஆடவனின் பின்னால் சுற்றி வருகின்றாள். நாயகி நாயகனுக்கு அத்தை  பெண் உறவு. உறவாக இருந்தாலும் நாயகனுக்கு அவள் மீது எந்தவித ஈர்ப்பும் இல்லை. நாயகனின் குடும்பத்திற்கும் நாயகியின் குடும்பத்திற்கும் சிறு விரிசல். இந்த நிலையில் நாயகியின் காதலை நாயகன் ஏற்பானா?

 

நாயகி நாயகன் உடன் பழகுவதை ஒரு சிலர் தவறாக சித்தரித்து பேசுவதை கண்ட அவளின் தந்தை அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேட முயல்கிறார். படிப்பில் நாட்டம் இல்லாத இவள் நாயகி இதை அறிந்த பின் கண்டிப்பாக படித்தே தீருவேன் என அடம்பிடிக்கின்றாள். அவளின் தந்தையும் அவளை கல்லுரியில் சேர்க்கிறார். நாயகனின் படிப்பறிவை அறிந்த பின்பு அவளுக்கும் படிப்பில் ஆர்வம் உண்டாகிறது. இரண்டு வருட இடைவெளியை நாயகி சமன் செய்கின்றாள் நாயகனின் துணை கொண்டு 

நாயகனின் விவசாயம் நன்முறையில் சென்று கொண்டிருக்கும் போது நாயகனின் முன்னாள் காதலி அவளின் திருமண அழைப்பிதழை தருவதற்கு நாயகனின் வீட்டிற்கு வருகின்றாள். நாயகனின் காதலியின் வரவை எண்ணி நாயகி கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் அவள் எப்போதும் போல் சாதாரணமாக இருக்கின்றாள். நாயகியின் செயல் காதல் என்று உணர்ந்தாலும் அதை பெரிதாக நாயகன் எடுத்துக்கொள்ளவில்லை. தன் முன்னாள் காதலி அவனை சமாதானப்படுத்தி அவனுடன் மீண்டும் சேரும் முயற்சியில் இங்கு வந்திருக்க அது தோல்வியில் முடிகின்றது.

 

இவர்கள் ஏன் பிரிந்தார்கள். ஏன் நாயகன் கணினி துறையை விட்டு விவசாயம் பார்க்க வந்தான்? நாயகியின் காதலை ஏற்றானா?இவனின் கடந்த காலம் என்ன? 

 

இப்படி பல விடை தெரியாத வினாக்களுக்கு இந்த கதையை படித்து தெரிந்து கொள்வோம் ,நாயகியின் எதார்த்தமான பேச்சும் குறும்பு தனமும் நம்மை கவர்கின்றன.

 

ஆசிரியரின் எழுத்து நடை அற்புதம். ஒரு இடத்தில் கூட தொய்வு இல்லாமல் கதையை நகர்த்தி கொண்டுபோனார். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. அதை இன்றைய இளைஞர் அனைவரும் உணர்ந்தாலே நம் நாடு விவசாயத்தில் முன்னிலை வகிக்கும்.

👏🏻👌🏼👍🏻👏👏🏻👌🏼👌🏼💜👏💖💜👌🏼💖💜💖💖👏👌🏼👏🏻💖💖👌🏼💜💜👍🏻👍🏻👍🏻👌🏼💖👏🏻👌🏼💜👍🏻👍🏻👍🏻💜

💖👏🏻🤔👌🏼💜💜👍🏻

 


 
Posted : June 18, 2024 2:58 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved