Skip to content
புவனா சந்திரசேகர் ர...
 
Share:
Notifications
Clear all

புவனா சந்திரசேகர் ரிவ்யு 90's பையன் 2k பொண்ணு

1 Posts
1 Users
0 Reactions
126 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 371
Topic starter  

விமர்சனம் வழங்குபவர் : புவனா சந்திரசேகரன்

90's பையன் 20k பொண்ணு

ஆசிரியர்: பிரவீணா தங்கராஜ்

 

வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஒரு தம்பதி. சூழ்நிலை காரணமாக அவர்களே எதிர்பாராமல் திருமணம் முடிந்து விடுகிறது. 

அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லை வேண்டாம் என்று பிரிந்து செல்கிறார்களா என்பது தான் கதை. 

வயதில் பெரியவனான ரிஷிவேந்தன் அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறான். வயதுக்கேற்ற முதிர்ச்சி. பழகும் விதத்திலும் தனது மனைவியைக் குழந்தை போல நடத்துவதிலும் அவளிடம் அன்பு செலுத்துவதிலும் ஒரு ஐடியல் ஹஸ்பண்ட் தான். 

ஷிவாலி ஒரு குழப்பவாதி. ஆனாலும் அவளுடைய குழந்தைத் தனமான செயல்களால் அவளைத் தவறாக எண்ண முடியவில்லை. குழந்தைத்தனமாகத் தான் நடந்து கொள்வதாக ரசிக்க வைக்கிறது. 

நகைச்சுவையாகச் செல்லும் கதையில் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகள் அழகு. பொடி டப்பி, பிட்ஸா மூஞ்சி என்ற விதவிதமான பட்டப்பெயர்களை ரசித்தேன். 

இல்லறத்தின் வெற்றிக்கு வயதோ, கல்வித் தகுதியோ, அழகோ காரணம் இல்லை. பரஸ்பர அன்பு தான் முக்கியம் என்ற அழுத்தமான கருத்தை ஆசிரியர் தனது நடையில் அழுத்தமாகப் பதித்திருக்கிறார். 

திடீர் திருப்பம் கொண்டு வர, தவறான உணவுப் பழக்கங்களை வைத்து ஒரு நல்ல கருத்தையும் அறிவுரையாக சேர்த்துத் தந்திருக்கிறார். 

விறுவிறுப்பான கதை. நிறைய உரையாடல்கள். இந்தக் காலத்திற்கு ஏற்ற வார்த்தை பிரயோகங்கள். கதையை அனுபவிக்க இன்றே படிக்க ஆரம்பியுங்கள். 

ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்த கதையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். 

நன்றி. மீண்டும் வாழ்த்துகள். 

புவனா சந்தி

ரசேகரன், 

19/07/2022.

 


   
ReplyQuote