Skip to content
பிரவீணா தங்கராஜின் ...
 
Share:
Notifications
Clear all

பிரவீணா தங்கராஜின் review for சுடுகாட்டில் தென்றல் வீசினால்...

1 Posts
1 Users
0 Reactions
394 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 397
Topic starter  
கதை பெயர் : சுடுகாட்டில் தென்றல் வீசினால்...
கதையாசிரியர் : அறிவுமதி (வாசகி)
விமர்சனம் வழங்கியவர்: பிரவீணா தங்கராஜ்
 
தலைப்பை பார்த்து பேய்கதை அதுவும் சுடுகாடு வருதே... ரிஜக்டட் என்று நிறைய முறை இக்கதையை படிக்க பிடிக்காமல் கடந்தேன். என்னோட ரீடர் ஒருத்தங்க இந்த கதைக்கு கமெண்ட்ஸ் செய்தது ஆர்வத்தை கூட்டியது. கதை படிக்க ஆரம்பித்தேன். இப்ப இந்த கதை படித்து விட்டு இந்த எழுத்தாளரின் மற்ற இரண்டு கதைக்கு காத்திருந்து படிக்கும் வாசகியாக மாறியிருக்கேன்.
      கதையை பற்றி விமர்சனம் செய்வதை விட வாசித்து பாருங்க.
 
         எழுத்து நடை அபாரம். பேய் கதை விருப்பமில்லைனு கடக்க வேண்டாம். சுடுகாட்டில் தென்றலாக காதலும் இதமும் அழகா எடுத்தாளப்பட்ட கதை.
துளி விரசம் காதலும் இல்லை. ஆனா படிக்கிறவங்க மனதில் அருள்-அமிழ்தா காதல் சேரணும்னு அத்தனை தவிப்பை கடத்தியிருக்காங்க.
 
         இறந்து போன நாயகன் அருளானன், தற்போது கலெக்டராக நாயகனின் இடத்தில் பதவி வகிக்க வரும் நாயகி அமிழ்தா. இவர்களை சுற்றி நடக்கும் மர்மம் பேயான நாயகனின் அவதாரமும் அதற்கான காரணமுமே கதை.

   
ReplyQuote