MARK-2024 போட்டி அறிவிப்பு
💗காதல் 💗காதல்💗காதல் இந்த உலகத்துல எங்க திரும்பினாலும் காதல். பெரும்பாலும் நாவல் உலகத்தை புத்துணர்ச்சியா வைத்திருப்பதும் காதல் கதைகள், குடும்ப கதைகள் தான்.
ஆனா காதலை தவிர்த்து வேற கதைக்கரு இல்லையா?!
ஏன் இல்லை, இன்றைய சமுகத்திற்கு தேவையான கருத்துகள் நிறைய இருக்கு. அதை கதை வடிவில் கொடுப்பதே சவாலான விஷயம்.
அப்படிப்பட்ட சவாலான விஷயங்களை கதைகருவா கொண்டு போட்டி வைக்கலாமென்று முடிவோடு களமிறங்கியுள்ளேன்.
'praveenathangarajnovels.com' என்ற தளத்தில் 'முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024' என்று சமூக கதைகளை எதிர்பார்த்து போட்டி வைக்கப்படுகின்றது.
போட்டி விதிமுறை:
*கதை எந்த விதமான கதைக்கருவோடு ஆரம்பிக்கப்பட்டாலும் முடிவில் சமுதாயத்திற்கு தாங்கள் கூறவரும் கருத்து முக்கியம்.
குடும்பக்கதை, காதல் கதை, திகில், மர்மம், அமானுஷ்யம், ஃபேண்டஸி, இத்யாதி வரிசையில் சமுக கருத்து ஆழமாய் இருக்க வேண்டும்.
*போட்டிகதையில் 'முகத்தில் அறையும ரியாலிட்டி கதைகள்'இல்' கதாபாத்திரங்கள் ஏதாவது ஒன்று பேசப்படும் விதமாக இருத்தல் நலம்.
*கதைகள் இதற்கும் முன் வேறெங்கும் வெளிவந்த கதைகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவை வெற்றி வாகை சூடிய கதையாக இருந்தால் தவிர்க்க வேண்டும். அப்படியில்லாமல் வேறு காரணங்களால் தவிர்க்கப்பட்ட சமுதாய கருத்தை பறைச்சாற்றும் கதைகள் பதிவிடலாம்.
*புத்தகமாக வந்த கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
*தங்கள் புதினம் 20000-25000 வரையிலான வார்த்தை அளவுகள் கொண்ட நாவலாக இருக்க வேண்டும்.
*போட்டியில் கலந்துக்கொள்ளும் நபர்கள் பெயர்களை Feb-10 வரை கொடுக்கலாம்.
*கதை எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் பெயரை அறிவித்தே எழுதலாம். ஏற்கனவே எழுதிய கதையை பதிவிடும் எழுத்தாளருக்கு இவை வசதியாக இருக்கும்.
புதிய கதை எழுத விரும்புகின்றேன் அதோடு, பெயரை மறைத்து எழுத ஆர்வம் கொள்கின்றேன் என்று எண்ணுபவர்கள் தங்கள் எழுதும் கதைக்கு ஏற்ப புது ஜிமெயில் ஓபன் செய்து கதை மாந்தர்களின் பெயரில் பதிவிடலாம்.
*கதை பிப்ரவரி 14 அன்று பதிவிடப்பட்டு ஏப்ரல் 25 அன்று கடைசியாக முடிக்க வேண்டும்.
*போட்டியின் முடிவு மே1 அன்று வெளியிடப்படும். இடைப்பட்ட நாட்கள் வாசகர் வாசிக்க நேரம் இருக்கும்.
*கால அவகாசம் நிச்சயம் நீட்டிக்கப்படாது. (சொன்னா சொல்படி கால அவகாசத்திற்குள் முடிக்கும் திறமைக்கு தான் போட்டிகள்)
*கதை உங்களுடைய சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
*Guest writer's நீங்களும் நட்புக்காக வரலாம். உங்கள் பெயரை மறைத்தோ அல்லது தெரிவித்தோ பங்குபெறலாம்.
*பங்கு பெறும் அனைவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும்.
* முதல் ஐந்து இடத்திற்கு வரும் எழுத்தாளருக்கு பரிசு கோப்பை🏆 வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.
பெயர் கொடுக்கவோ இதர தகவலுக்கோ எனது முகநூல் கணக்கு, வாட்சப் எண்(தெரிந்தவரெனின்), அல்லது 'தளத்தில் contact mail' அனுப்பினால் போதுமானது.
பங்கு பெறும் யாவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி,
பிரவீணா தங்கராஜ்
சமுக கருத்து என்றால் எப்படி என்று திகைப்பவருக்கு, மனிதனின் செய்கையால் சமுதாயத்தில் ஏற்படும் இன்பத்தை விட துன்பமே அதிகம். அப்படிப்பட்ட துன்பங்களை எடுத்துரைத்து கதையின் போக்கில் சுபமாகவோ, அல்லது தீர்வு களைவது போலவோ, சமுதாயத்தில் அறத்தை எடுத்தியம்பும் முடிவாகவும் காட்டப்பட்டு போதிக்கும் கதைகள்.
Just examples 👇
மறுமணம், பாலியல் வன்முறை, வன்முறை, சாதி மதம் களைவது, அலைப்பேசியால் ஏற்படும் ஆபத்து, ஆன்லைன் உலகம், மருத்துவ சீர்கேடு, போதையில்லா பாதை, லஞ்சத்தினால் குடும்ப சீரழிவு, பணம் பதுக்கல், மதுவால் ஏற்படும் நடுத்தர வாழ்வு, சிலை கடத்தல், டிரக் மாபியா, கெடுதி etc...
மனித உணர்வுகள், சமூக நிலைமைகள், கலாச்சார மாற்றங்கள் போன்ற தலைப்புகளை கொண்ட கதைகளை குறிக்கும். முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
வாசகர்களுக்கு:
தொடர்ந்து வாசித்து blog comments, சைட் கமெண்ட்ஸ் மற்றும் முகநூலில் கருத்து விமர்சனம் தெரிவிக்கும் வாசகர்களுக்கு பரிசாக புத்தகம் வழங்கப்படும்.
🌸------🌸
*இது எனது முதல் முயற்சி... தனி முயற்சி...
எழுத்தாளர்கள் வாசகர்கள் தனி முயற்சியில், கூட்டு முயற்சிக்கு இணைய வாருங்கள்.
@rea_der_7800 site ல போட்டிக்கான முதல் வாழ்த்து. எப்படி wattpad பிரதிலிபி எல்லாம் ஒவ்வொன்னா ரசிச்சேன்னோ அதே போல ரசிக்கின்றேன். நன்றி மா. ❤️
- 118 Forums
- 1,733 Topics
- 2,002 Posts
- 0 Online
- 754 Members