Skip to content
வஞ்சிப்பதோரும் பேரவ...
 
Notifications
Clear all

வஞ்சிப்பதோரும் பேரவா!

3 Posts
3 Users
0 Reactions
91 Views
(@kothaihariram)
Trusted Member
Joined: 10 months ago
Posts: 26
Topic starter  

வஞ்சிப்பதோரும் பேரவா கதை எழதிய விதம் சூப்பர் அதிரடி டிவிஸ்ட் திரில்லிங் எல்லா விதமான உணர்வுகளையும் அழுத்தமாக கொடுத்தது சூப்பர் கதையின் கரு தற்போதைய முக்கியமான விசயம் அதை அழமாக உணர்வுகளை கடத்தியது செம ஆரம்பம் ஹர்ஷா பிரியம்வதா கல்யாணம் பண்ணறது நாயகனின் காதல் தோல்வி தெரிந்தும் தன்னோட சின்ன வயசு காதலனை கர ம் பிடிக்கும் வது அவனை மாற்ற முயற்சிக்கிறாள் அவளின் காதலை உணர்ந்தும் புரிந்துக் கொள்ளாத நாயகன்
நாயகியின் காதலை புரிந்துக்கொள்ளும் நேரம் மௌனிகா யஷ்வந்த் வருகை
பெண்களின் மர்மம் கொலைகள் அதை கேட்டு துடிக்கும் நாயகி அவளின் மனநிலையை புரிந்துக்கொள்ளாமல் மௌனிகாவை காப்பற்ற செல்லும் நாயகன் தன்னோட மனைவியின் நிலையை புரிந்துக்கொள்ளும் போது இருவரின் புரிதல் இல்லாத நிலை இருவரின் பிரிவு பிரியாவை சாவின் எல்லைக்கு சென்று வந்தது அதன் பிறகு தன் தவறை மற்றும் காதலை உணரும் நாயகன்
யஷ்வந்தின் செயல்களை பாராத்தால் இந்த உலகத்தில் வாழ பயமா இருக்கிறது
இப்படியும் மனித ஜந்துக்கள் இருக்கிறது கஷ்டமா இருக்கு
சோசியல் மீடியாவை தவறான வழியில் மட்டும் இப்போ உபயோகிறார்கள்
அந்த மனிதர்களும் நம்மில் கலந்து இருப்பது தான் பயமா இருக்கு
இறுதியில் யஷ்வந்த் சொல்லற விசயம் பழி வனமம் துரோகம் மட்டும் செய்யும் மனித மனம் மாறும் வரை இந்த மாதிரி எத்தனையோ யஷ்வந்த் வருவது உறுதி
அவனுக்கு கிடைத்த தண்டனை போல் சட்டப்படி தண்டனை கடுமையால் தான் நிம்மதியாக வாழ முடியும்


   
ReplyQuote
(@gowri)
New Member
Joined: 2 months ago
Posts: 1
 

#வஞ்சிப்பதோரும்_பேரவா!

ப்பா…. பெர்பெக்ட் க்ரைம் த்ரில்லர் 🔥🔥🔥🔥🔥🔥

அப்படியே ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல்🤩🤩🤩🤩🤩🤩

ஹர்ஷா ஓட காதலி மௌனி அவனை விட்டு யஷு கூட கல்யாணம் முடிஞ்சி போய்ட்டா…..

அவ துரோகத்தில் கூட, தன் மேல தான் ஏதோ தப்புன்னு இருக்கும் ஹர்ஷாவை….

அவன் வீட்டிலும், அவனோட வதுவும் சேர்ந்து கல்யாணம் பண்ண வைக்கரங்க…..

வது ஓட புரிந்துணர்வில், ஹர்ஷா சகஜ நிலைக்கு திரும்ப…..

மீண்டும் மௌனியின் பிரவேசம் ஹர்ஷா வாழ்க்கையில்……

துரோகம் செய்தவளின் மேல் துவேசம் இல்லா ஹர்ஷாவும்….

சிறு வயதில் இருந்தே ஹர்ஷா மேல் மையல் கொண்டு இருக்கும் வதுக்கும் இடையில்…..

சின்ன சின்ன கோவங்கள்……

அவளின் வரவுக்கு பின்…..

நல்லவனை விட்டு போனதால் என்னவோ….

மௌனி வாழ்க்கை அத்தனை சிறப்பாக செல்லவில்லை…..

அதற்கு காரணம் அவளின் கணவன் யஷுவும்…..

அவனின் வக்கிர குணமும் தான்…..

தொடர் கொலைகள்…..தற்கொ**லைகள்….

காரணம் இவன் தான்னு தெரிஞ்சா சுவாரிசியம் போய்டும்…..

ஆன இங்கே….. பரபரபுக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இல்ல…..

ஃபேண்டஸி நைட்ஸ், இதை நா படிச்சி இருக்கேன்….சிற்றிலை வளைவு கதையில்…..

அதே தானா இது??????

பல பதற வைக்கும் காட்சிகள் இருந்தாலும், நானே கண்ணை மூடிக்கிட்டது….

மௌனி இறந்த விதத்தில் தான்…..

மக்களிடையே இவளோ வக்*கிரங்கள் இருக்கா??????

வலை**தளம் ரொம்ப நல்லது தான்….எதுவும் தெரியாத வரை …..

அப்படி அதன் கோர முகம் தெரியாமலே இருந்துப்போம்……

க்ரைம் த்ரில்லர் கதை விரும்பி படிப்பவர்கள் படிக்கலாம்…..

தேய்வே இல்லாம கதை நகர்ந்த விதம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அபி, ஹரிக்கு எல்லாம் தனி கதை இருக்கா?????

பிராஜனை அப்படியே விட்டிங்களே……

கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது 🤩🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐


   
ReplyQuote
(@barkkavi)
Estimable Member
Joined: 5 months ago
Posts: 36
 

@kothaihariram Tq so much for the lovely review sis 😍😍😍


   
ReplyQuote