வஞ்சிப்பதோரும் பேரவா
வஞ்சிப்பதோரும் பேரவா - பார்கவி முரளி
டைட்டில் வித்தியாசமா இருக்கவும் வாசிக்க எடுத்தேன். தலைப்புக்கும் கதைக்கும் அப்படி ஒரு பொருத்தம். லவ் வித் க்ரைம் த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருந்தது. கதையில் வரும் தனித்து தெரியும் தமிழ் வார்த்தைகள் அவ்வளவு அழகு ரசித்து வாசித்தேன்.
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்த எவரும் அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீள முடியாது நினைவுகள் சுற்றி வந்துட்டே இருக்கும். மூவ் ஆன் பண்ணலாம்னு நினைச்சாலும் சூழல் அங்கேயே நிக்க வைக்கும். என்ன செய்தால் மீளலாம் என்ற அளவு கூட யோசிக்க வைக்கும். சுயத்தை இழக்க வைக்கும். அப்படியான ஒரு கேரக்டர்ல ஹர்ஷா பொருந்தி போறான் ரொம்ப எதார்த்தமா இருந்தது. அவன் மேலே வருத்தம் வந்ததே காணாமல் போய் மூணு நாள் கழித்து தான் உணருகிறானு வரும் இடத்தில் தான்.
சிறு வயதில் ஒருதலையாக காதலித்து தனக்கு சொந்தமில்லை என்று வரும் போது அதையும் ஏற்று திரும்பி காதல் தோல்வியில் வருபவனையும் ஏற்று அவனுக்கான ஸ்பேஸ் கொடுத்து அவன் அன்பை பெறும் பிரியம்வதா. ரெண்டு பேரும் மருத்துவமனையில் இருக்கும் போது தொடுகை பற்றிய பேச்சு வரும் அது ரொம்ப நல்லா இருந்தது.
பணம் தான் பிரதானம்னு நினைத்து உண்மையான நேசத்தை தவற விட்டு தனக்கு தானே குழி தோண்டிய மௌனி நிஜமாவே ரொம்ப வருத்தமா இருந்தது. முயன்று தப்பித்திருக்கலாம்.
சைக்கோக்கள் பிறப்பதில்லை மாறாக சமூகத்தால் தான் உருவாக்கபடுறாங்க. உருவ கேலியில் இருந்து பிறப்பு கேலி வரை செய்து என்ன தான் சாதிக்க போகிறார்களோ அதனால் பாதிக்கபடுபவன் மனம் படும் வேதனை இவங்களுக்கு புரியுமா? இப்படி ஒரு சைக்கோ அரக்கனா இவன் இருப்பான்னு எதிர்பாக்கல. இருள் தளத்தின் இருண்ட பக்கங்கள் அவ்வப்போது வாசித்து வாசித்து ஓ இது கூட இதிலும் உண்டா என்ற மனநிலை தான் வருகிறது. கிளைமேக்ஸ்ல அதிர வச்சிருகாங்க. அண்ட் எனக்கு இந்த தண்டனைல சட்டிஸ்பிகேஸன் இல்லை ஆனால் சொன்ன மாதிரி அவனை மாதிரி நாம ஒன்றும் சாடிஸ்ட் இல்லையே வச்சு வச்சு கொல்ல.
எனக்கு பிடிக்காத கேரக்டர் கதையில் கைலாஷ் தான். இவனெல்லாம் ஏன் மனுஷ பிறப்பு எடுக்கனும் அவனோட விளக்கம் கேட்டு விளக்கமாறால அடிக்க தான் தோணுச்சு **** தகுதியே இல்லாதவன்.
ரொம்ப பிடிச்ச கேரக்டர் ஹரிஹரன். அவன் வந்ததும் விசாரணை தூள். அபிஜித் ஹரி ஹர்ஷா பிரஜன் கூட்டணி சேந்து ஒரு வழியா சால்வ் பண்றாங்க. அவங்களோட பிளான் செயல்வழிமுறை எல்லாம் நல்லா இருந்தது.
ஒரு விஷயம் கண்முன்னே எதேச்சையாக நடக்கும் அது ஏன் எதுக்குனு அப்ப தெரியாது . புரியும் நேரம் வரும் போது நேரம் நம்மிடம் இருக்காது. கடைசியில் ஹர்ஷா உணர்ந்து ஓடும் இடம் பரபர தான். கதை அருமையா கொண்டு போயிருகீங்க. போட்டிகதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ். க்ரைம் த்ரில்லர் விரும்பிகள் விரும்பி வாசிக்கலாம்.
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 8 Online
- 881 Members