Skip to content
Share:
Notifications
Clear all

மேகத்தின் மோனம்

2 Posts
2 Users
1 Reactions
520 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

மேகத்தின் மோனம் - சமூக வளைதல்தால் படும் கஷ்டம் அதிலிருக்கும் நலத்தை பார்க்காமல் கெட்டத்தை பார்க்கும் மனிதர்களால் ஓரு மனிதனின் வாழ்க்கையின் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை கொண்டு எழதியது செம சூப்பர் 

 

ஆரம்பமே தீவிரவாதி தாக்குதல் குடும்ப உறுப்பினர் இழந்து தற்கொலைக்கு வரும் நாயகியை தன்னோட பேச்சால் அவளின் வாழ்க்கையில் மாற்றத்தை தன்னையறியாமல் மாற்றி விடுவது அருமை 

அவனின் வலிப வயச வேகத்தால் பிரச்சனை மாட்டி அதையே திருப்பி செய்யும் போது அவனோட வாழ்க்கையை வசந்தமாக மாற்ற வருகிறாள் நாயகி அதை புரிந்துகொள்ளமால் தன்னோட குடும்பதையும் கஷ்ட படுத்திக்கிறான்

தந்தையின் அன்பை புரிந்துக்கொள்ளாமல் சுற்று பையன் அவனின் வாழ்க்கையை நல்வழி படுத்த தன்னை மகன் வெறுத்தாலும் மேகாவை கல்யாணம் பண்ணிவைக்கிறார்...

மேகாவிடமும் தன்னோட இம்மெச்சூரிட்டியை காட்டி அவளை கஷ்ட படுத்திக்கிறான். .. 

விளாகிற்கு வேறு ஊர் செல்லும் போது தான் தன்னோட மனைவியின் இருப்பை புரிந்து காதல் கொள்கிறான்

அவன் தவறு செய்யும் போது சண்டையிட்டு அவனை புரிந்துக் கொண்டு அவனை அளவில்லாமல் அவனை காதலிகிறாள் நாயகி தான் செய்த தவறை லேட்டாக புரிந்தக் கொள்கிறான் தந்தையை இறுதியாக புரிந்துக் கொண்டு குடும்பத்தை சேர்வது அருமை

 
Posted : August 21, 2024 1:28 pm
(@chitrasaraswathi)
Posts: 17
Eminent Member
 

நித்யா மாரியப்பனின் மேகத்தின் மோகனம் எனது பார்வையில். தீவிரவாதிகளின் தாக்குதலால் விபத்தில் தனது அம்மா மற்றும் சகோதரியை இழந்துவிட அப்பாவும் அவளும் உயிர் பிழைக்கிறார்கள். அப்பாவை பற்றி நினைக்காமல் தற்கொலைக்கு முயல அங்கு வீடியோ எடுக்கும் யூ ட்யூப்பரான முகில் தனது வார்த்தைகளால் மேகவர்ஷினியின் தற்கொலை எண்ணத்தை கைவிட வைக்கிறான். இந்நிகழ்வால் முகில் மீது ஈர்ப்பு ஏற்பட அவனை காதலிக்கத் தொடங்குகிறாள். இருவரின் அப்பாக்களும் கல்லூரிக் காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பதால் முகிலின் விருப்பம் இன்றி நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வில் எப்படி மாற்றங்கள் செய்தது என்பதை யூ ட்யூப்பர்கள் வாழ்வில் வரும் யதார்த்தமான நிகழ்வுகள் மூலம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். இன்றைய தலைமுறையினரின் நேர்மறையான வாழ்வியல் முறையை முகில் மற்றும் மேகா மூலம் நமக்கு உணர வைத்திருக்கிறார்.

 
Posted : October 14, 2024 2:51 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved