உன்னாலே பூப்பூக்குதே
ஜெயலட்சுமி கார்த்திக் கின் மனம் உன்னாலே பூப்பூக்குதே எனது பார்வையில். மென்பொறியாளராக வேலையில் இருக்கும் ஆருத்ரா பெற்றோர் இல்லாமல் தந்தை வழி பாட்டி வளர்த்த பெண். ஆடிட்டரான கோகுலகிருஷ்ணா பெற்றோருக்கு ஒரே பையன். இருவரின் திருமணம் பெற்றோர்கள் முடிவின் படி நடக்கிறது. விடுதியிலேயே அதிகம் இருந்த பெண் என்பதால் சமையல் மற்றும் அவர்களது இனம் சார்ந்த வழிமுறைகள் அதிகம் தெரியாது இருக்கும் ஆருத்ராவிற்கு மாமியார் கெடுபிடி மன அழுத்தத்தை தருகிறது. ஆனால் கணவன் செய்யும் சிறு சிறு உதவிகள் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மாமியார் சுபாவின் போக்கை அமைதியாக கடந்தாலும் வீட்டிலும் பணியிடத்திலும் அவளுக்கு அழுத்தத்தை உண்டாக்குகிறது. குழந்தைக்கு தாயாகும் நிலையில் கணவனுடன் சென்னையில் இருக்க விரும்பும் அவளது எண்ணம் இருந்தாலும் மாமியாரின் சொல்படி வயதான பாட்டியுடன் திருச்சிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பாட்டியின் வயது காரணமாக அலைச்சல் அவருடைய உடல் நிலையை பாதிக்க பாட்டியயை தொந்தரவு செய்ய மனமில்லாமல் திருச்சியை விட்டு வெளியே கிளம்பும் ஆதிரா நல்லபடியாக குழந்தை பெற்றாளா அவளது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டடதா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். குடும்ப அரசியலை யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். ஆருத்ரா நல்ல தைரியமான பெண். ஆனாலும் அவள் அன்பிற்காக ஏங்குவதும் கோகுலின் தான் மனைவியை சிறு சிறு விசயங்களில் கூட உதவுகிறேன் என்று நினைப்பதும் யதார்த்தமானதுதான். வாழ்த்துகள் மா.
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 0 Online
- 1,938 Members