அரிதாரம்
அருள்மொழி மணவாளன் இன் அரிதாரம் எனது பார்வையில். ஆராதனா முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகை. அவளை ஒரு விருது வழங்கும் விழாவில் முதன் முதலில் பார்த்த தொழில் அதிபரான நிகேதன் அவளை மிகவும் பிடித்து காதல் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து அதற்காக அவளை வைத்து திரைப்படம் எடுக்கிறான். அந்த திரைப்பட இயக்குனர் பிரணவ்வும் ஆராதனாவும் காதல் செய்ய அதை எதிர்க்கும் பிரணவ்வின் அம்மாவின் விருப்பப்படி அவனது சொந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறான். அவளது முன்னாள் காதல் தெரிந்தும் அவளைத் திருமணம் செய்து கொள்ள உறுதியாக இருக்கும் நிகேதனின் மனம் தெரிந்து அவனுடன் நட்பு பாராட்டும் பிரணவ் அவர்களின் திருமணம் நடக்க உதவி செய்கிறான். ஆனால் ஆராதனாவின் மேலாளராக இருக்கும் ரகு அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறான். இதில் ஆராதனா எந்த வாழ்வை தேர்ந்தெடுக்கிறாள் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். ஆராதனா தைரியமான பெண் என்றாலும் சமூகத்தில் தனி ஒரு பெண் என்பதால் மோசமான ஆண்களால் அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதை தீர்க்க உதவும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக தந்திருக்கிறார். நிகேதன் மற்றும் அவனது பெற்றோர் அருமையான கதாபாத்திரங்கள். வாழ்த்துகள் மா.
Leave a reply
- 145 Forums
- 2,447 Topics
- 2,849 Posts
- 14 Online
- 1,939 Members