கதையின் சிறு அறிமுகம்
💕ஒரு விபத்து; ஒரு மர்மம்; ஒரு கனவு; ஒரு காதல்💕
அமெரிக்க வாழ் இந்திய இளைஞன் திவாகர் விடுமுறைக்காகத் தன் சொந்த ஊருக்கு வரும் நேரத்தில் நடக்கும் ஒரு விபத்து அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட, திடீரெனத் தன் வாழ்வில் இணைபவளைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையிலும் ஏதோவொரு பந்தத்தை உணர்கிறான். அவளுக்கோ தன்னைப்பற்றி முற்றும் தெரிந்திருக்க, தன் சிறுவயது ஞாபகங்களில் அவள் பெயர் ஏனோ மறைக்கப்பட்டிருக்க, இப்போது அவளுடைய மர்மங்கள் தனதாக, விடைதேட இருவரும் கிளம்ப, இறுதியில் கனவும் காதலும் வென்றதா?
Coming soon......
Prologue
வேறே கொத்த பூமி பை உன்னானா....
ஏதோ விந்த்த ராகமே விண்ணானா...
பலிகே பால கூவதோ.. குலிகே பூல கொம்மதோ..
கசிரே வெண்ணிலம்மதோ.. ஸ்னேகம் சேஸா...
யதிரே பால வெள்ளிதோ, நடிசே காஜு பொம்மதோ..
அந்தம் முந்து ஜன்மதா… ஏதோ பௌசா…
மாலை மங்கத் தொடங்கிய நான்கு மணி வேளையில், காரில் அந்தத்
தெலுங்குப் பாடல் மென்மையாக ஒலித்துக் கொண்டிருக்க, அதனோடு
தாளம் தவறி, வார்த்தையும் சரியாக வராமல் ஏதோ உளறிக் கொண்டே
காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அந்த இருபத்தாறு வயது இளைஞன்.
டேய் டேய்...காது கிழியுது...எதுக்குடா புரியாத பாட்டுப் போட்டு நீயும் தப்புத்
தப்பா பாடி உயிரெடுக்கற... தமிழ் பாட்டு தான் வையேன்!
அருகில் அமர்ந்திருந்து அர்ச்சனை பண்ணியவர் அவன் அம்மா.
அதை லட்சியம் செய்யாமல் மேலும் கர்ணகொடூரமாக உச்சஸ்தாயியில்
அவன் இழுத்துப் பாட, அவன் அம்மா காதைப் பொத்திக்கொண்டு திரும்பி
பார்த்தீங்களா?எனத் தன் கணவனுக்கு ஜாடை காட்டினார்.
விடு விடு.. தமிழ்ப் பாட்டைப் பாடி அதையும் கொலை பண்ணாம
இருக்கானே.. அதுவரைக்கும் சந்தோஷம். நான் பெத்த மகனே, கொஞ்சம்
வேகமாப் போடா.. நாம போறதுக்குள்ள ட்ரெயின் வந்துடப் போகுது..
ஏன்ப்பா.. எவ்ளோ ரம்மியமான சாங் இது... மெலடிய ரசிச்சிட்டே ஸ்லோவா
போகாம, வேகமாப் போ, வேகமாப் போன்னு இப்டி டார்ச்சர் பண்றீங்களே?
உங்க யாருக்குமே இசை ரசனையே கிடையாதா??
அவன் தந்தை அடேங்கப்பா. என்பதுபோல் ஆயாசமாகப் பார்த்தார்.
ம்க்கும்.. இந்த வேகத்துக்குப் போகணும்னா நேத்து சாயங்காலமே
கிளம்பியிருக்கணும். இளவட்டமாச்சே, கொஞ்சம் வேகமா ஓட்டுவியேன்னு
உங்கப்பா உன்கிட்ட காரைக் குடுத்தா, நீ மாட்டுவண்டிக் கணக்கா
ஓட்டுறயே??
தன் பங்கிற்கு அவனது அன்னையும் பொரிந்து தள்ள, இருவரையும்
முறைத்தபடி கியரை மாற்றி வேகமேற்றினான் அந்த ஆடவன்.
என்னவோ இங்கிலாந்து மகாராணியே வந்து இறங்கற மாதிரி இவங்க
குடுக்கற அலப்பரை இருக்கே! ஏம்மா? அந்த குட்டி ராட்சசி வர்றதுக்கு வண்டி
அனுப்புனா பத்தாதா? நாமளே குடும்பமா போய் வரவேத்தா தான் அந்த
அறுந்தவாலு வருவாளா?
அடி வாங்குவ படுவா! அவளே வருஷத்துக்கு ஒருதடவை தான் ஊருக்கே
வர்றா.. புள்ளைய ஸ்டேஷனில போய் கூட்டிட்டு வராம, ஆள்
அனுப்புவானாம்... வண்டி அனுப்புவானாம்... ஏன், தொறைக்கு அதவிட
முக்கியமான வேலை என்னவோ?
ம்ம்.. அவளாவது ஒழுங்கா படிச்சு இப்ப ஐ ஏ எஸ் பரிட்சைக்குப் படிச்சிட்டு
இருக்கா. நீ இன்னும் என் கூட சேர்ந்து ஊரு சுத்திட்டு தானடா இருக்க?
அம்மாவும் அப்பாவும் ஒருசேரத் தங்கள் மகளுக்கு வக்காலத்து
வாங்கிக்கொண்டு வர, இவர்களிடம் வாயைக் கொடுத்து வாழ முடியாது
என்று புரிந்துகொண்டு சரணாகதி ஆனான் அவன்.
உள்ளுக்குள் ஒரு வருடமாகப் பிரிந்திருக்கும் தங்கையைக் காணும் ஆர்வம்
அலாதியாக இருந்தாலும், வெளியே அக்மார்க் அண்ணன்போல் அவளைத்
திட்டிக்கொண்டும் குறைகூறிக் கொண்டும் மட்டுமே இருப்பான் அவன்.
பெற்றோரும் தம்மக்கள் இருவர்மீதும் சமமான அன்பு கொண்டிருந்தாலும்,
மூத்தவனிடத்தில் கண்டிப்பாகவும் இளையவளிடத்தில் பாசமாகவும்
இருப்பதுபோல் காட்டிக்கொள்வர்.
சிரிப்புப் பேச்சுக்களுடன் சிவகங்கை நகரத்து ரயில் நிலையத்துக்கு
அவர்களது கார் விரைந்து கொண்டிருக்க, சட்டென ஆளரவமற்ற
நெடுஞ்சாலையில் ஒரு திருப்பத்தில் அதிவேகமாக வந்த லாரி இவர்களை
மோதிச் சாய்க்க, நிலையிழந்து சாலையை விட்டுக் கீழே கவிழ்ந்தது கார்.
புழுதி பறக்க, காரின் கண்ணாடிகள் அழுத்தத்தினால் உடைந்து நொறுங்க,
நிலையிழந்து உள்ளே அமர்ந்திருந்த மூவரும் அலறினர்.
அதிர்ச்சி தந்த மயக்கத்தில் அன்னையும் தந்தையும் இருக்க, கால்
ஆக்ஸிலேட்டரில் சிக்கிக்கொள்ள, தன்னை விடுவித்துக்கொள்ளப்
போராடிக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
உடலெங்கும் காயம்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருக்க, வரண்ட நாவும்
சுழலும் கண்களும் அவனை இழுக்க மூச்சைத் திரட்டி பயங்கரமான
கத்தலுடன் உதவிக்குரல் எழுப்பினான் அவன்.
உடைந்திருந்த கண்ணாடி வழியே அவன் நிமிர்ந்து பார்த்தபோது, கண்
மூடும் முன் கடைசிக் காட்சியாய் தங்களை இடித்த வாகனம் மீண்டும்
அதிவேகத்தில் தங்களை நோக்கி விரைவதையே கண்டான்.
********
அங்கிருந்து சுமார் பத்து மைல் தொலைவில், ஆளரவமற்ற சிவகங்கை
ரயில் நிலையத்தில் தான் மட்டும் தனியாக, மாலை இருள் சூழும் நேரத்தில்,
தன்னை அழைக்க வரும் குடும்பத்தாருக்காகக் கைக்கடிகாரத்தையும்
ஸ்டேஷன் வாசலையும் மாறிமாறிப் பார்த்தபடி காத்திருந்தாள் வானதி.
-
Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-1416 hours ago
-
Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-125 days ago
-
Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-116 days ago
-
Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-91 week ago
-
Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-82 weeks ago
- 109 Forums
- 1,756 Topics
- 2,014 Posts
- 1 Online
- 848 Members