Skip to content
Share:
Notifications
Clear all

Trending SS-25 Rules Announcement

1 Posts
1 Users
0 Reactions
557 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1165
Member Admin
Topic starter
 

Trending அப்படின்னா என்ன?

ஏன் அதை பிடித்து மக்கள் தொங்கறாங்க?

அதுல என்ன ஆர்வம்? 

அதனால நல்லது கெட்டது இருக்கா? 

இந்த trending மூலமாக அப்படி வாழ்க்கையில் எடுத்து சொல்ல கதைகள் இருக்கா?

அப்ப இந்த போட்டி உங்களுக்கானது. 

விதிமுறை: 

*யார் வேண்டுமென்றாலும் கதை எழுதலாம். 

*1000 முதல் 3000 வரை வார்த்தை அளவு இருக்கணும். 

*ஒருவர் ஒரு கதை பதிவிடலாம். 

*Sep-16 முதல் Oct-15 வரை trending கதை பதிவிடும் இடம் பகுதியில் உங்க கதைகளை, add topic கொடுத்து பதிவேற்றலாம். 

*Oct-20 போட்டி முடிவு வெளியிடப்படும். முதல் இருவருக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும். 

*பங்கேற்பு சான்றிதழ் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உண்டு.  

*அதிகபட்ச வாசிப்பு கூடுதல் சிறப்பு. 

*Vote methods வைக்கப்படலாம். 

*கதைகள் தளத்தில் எப்பொழுதும் இருக்க விரும்புவோர் பதிவு செய்யுங்கள். 

 

 
கொஞ்சம் விளக்கம் ப்ளிஸ்...
உங்க தளத்தின் போட்டி புரியலை சிஸ்.
கேட்கும் எழுத்தாளர்களுக்கு...‌

டிரெண்டிங்... அப்படின்னா... பிரபலமாக நடக்கப்படுவது.

இப்ப இருக்கற சொசைடி, டிரெண்டிங்ல என்னலாம் இருக்கு... சமீபத்திய சமூக பக்கத்தை புரட்டுவோம்.

*டாக் ஷோ
* முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் மனைவி. கர்ப்பம்
*ரீல்ஸ் மோகம்
*நடிகை நடிகர் போல உடை போட்டு சாமான்ய மக்கள் ரீல்ஸில் நடிப்பது.
*பணத்திற்காக எதற்கும் துணிந்து, தங்களை தாங்களே அரைநிர்வாண புகைப்படமாக காட்சிப்படுத்துவது.
*சமூகத்தில் தங்களை பேசும் பொருளாக பேசப்பட வைப்பது.
*பெண்-பெண் காதலிப்பது, ஆண்-ஆணை மணப்பது.
*குழந்தைகளை கூட வீடியோ மூலமாக குழந்தையின் இயல்பை தொலைக்க வைப்பது.
*வீடியோ எடுத்தபடி நல்லது செய்வது.
*பிரான்க் என்று சொல்லப்படும் விஷயம்
*சமூக காணொளியில் டிரைவர் செயல்
*டிரெண்டிங் வீடியோ அதனால் ஏற்படும் பின்வரும் நிலை...
*யூடியூப் வருமானம், இன்ஸ்டா வருமானம்.
*தவறான வழியில் வீடு கார் வாங்குவது.
*பிரகனன்ஸி ஆனதை கூறுவது, பிரபலங்கள் குழந்தைகளோடு அலப்பறை, கட்டைகாரன் கல்யாண வீடுனாலும் இழவு வீடுனாலும் வீடியோ தூக்கி பேட்டி எடுக்கறான்.

  இத்யாதியில் நல்லது கெட்டதா பகுத்து சமூக விழிப்புணர்வுடன் கதையாக கொடுக்கப்படுவது.
இப்ப புரியுதா?
 ஒரு செயல் மூலமாக நடக்கப்படும் சாதக, பாதக விஷயத்தை கதையில் கொண்டு வந்து, உங்க பாணியில் தெரியப்படுத்துங்க. இதான் கான்சப்ட். உங்க எழுத்துக்கு இது சவாலா இருந்தா கலந்துக்கோங்க.

 நான் வைக்கிற போட்டி இப்படி தான் புதுசா இருக்கணும்னு நினைப்பேன்.  கலந்துக்கறவங்க பெயர் கொடுக்கணும்னு கூட அவசியமில்லை.

  சைட்ல trending stories update here இருக்கற thread la add topic போய் கதையை பதிவு செய்து post published பண்ணிடுங்க. அது என் பார்வைக்கு வந்ததும் approvel தந்துடுவேன்.‌
     மினிமம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சைட்டை ஒரு சைட் அடிப்பேன்.
 அதனால் approval வந்துடும்.
வேற டவுட் இருந்தா கேளுங்க.

  விருப்பம் உள்ளோர் கலந்துக்கலாம். வாழ்த்துகள்.

 

 
Posted : September 15, 2025 12:55 pm
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved