Skip to content
தடம் மாறிய பயணம்
 
Share:
Notifications
Clear all

தடம் மாறிய பயணம்

1 Posts
1 Users
1 Reactions
58 Views
(@yazhini)
Posts: 20
Trusted Member
Topic starter
 

         பயணம் 

           "அம்மா சீக்கிரமா இங்க வந்து பாரு " என்று டிவி பார்த்து கத்தி கொண்டு இருந்தாள் பூர்ணிமா..

"என்னடி ஏன் இப்படி உயிர் போற மாதிரி கத்தி கூப்பாடு போடற"?? .. என்று பூர்ணிமாவின் அம்மா கிச்சன் வேலையை விட்டு விட்டு வெளியே வந்தாள்..."என்னோட ஹீரோ ஓட பாட்டு ஓடுது பாரு" !!என்று ஆடிக்கொண்டே கூறினாள் பூர்ணிமா...

"ஏண்டி பிசாசே என்னோட உயிர வாங்குற உன்னோட இதே ரோதனையா போச்சு எப்ப தான் காலேஜ் திறப்பாங்கன்னு இருக்கு ..காலைல எழுந்துரிச்சா இதே தலைவலியா இருக்கு...போய் வேற வேலை இருந்தா பாரு போ!!....என்று பூர்ணிமாவை விரட்டினால் ரேகா....பூர்ணிமாவின் அம்மா ..கல்லூரி ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஓடியதே தெரியவில்லை பூர்ணிமாவிற்கு..முதல் நாள் இருந்த பயம் தயக்கம் எதுவும் இல்லை..அவள் காலேஜ் போக ஆரம்பித்த இரண்டாவது நாளே பூர்ணிமா தந்தை புது போன் வாங்கி கொடுக்க ஒரே கொண்டாடமாகி போனது பூர்ணிமாவிற்கு .

பூர்ணிமா கையில் போன் வந்தவுடன் அனைத்து சோசியல் மீடியாவில் தனது புது கணக்கை துவங்கி அதில் தனது போட்டோ ஒன்றை பதிவு செய்தாள்..கொஞ்ச நாட்களில் அவளது கவனம் படிப்பில் இல்லாமல் போய் விட்டது..

எப்போதும் போனும் கையும் என்று இருக்க...."பூர்ணிமா இங்க வா "என்று தந்தை அழைக்கும் குரல் கேட்க ரூமில் இருந்து வெளியே வந்தாள் ...

" என்னப்பா "???

"நீ நேத்து காலேஜ் போனியா"??

"ஆமா அப்பா காலேஜ் தான் போனேன் "!! ஏன் என்ன ஆச்சு???

"சும்மா தான் மா கேட்டேன் .நீ போ...

"ஹம் சரிப்பா"....

" என்னங்க என்ன நடந்துச்சு ?? ஏன் 

 பூர்ணிமா கூப்பிட்டு என்ன கேட்டுட்டு 

 இருக்கீங்க "..

" இல்லை ரேகா உன்னோட பொண்ணு நேற்று காலேஜ் போகல"..

"என்னங்க சொல்றீங்க "...

" ஆமா ரேகா இப்ப தான் நம்ப சபேசன் பையன் ரகு பார்த்து 

சொன்னான்"...

" இல்லைங்க நம்ப பொண்ணு அப்படியெல்லாம் இல்லை....அவன் வேற யாராவது பாத்துட்டு கூட சொல்லி இருக்கலாம் இல்ல "...

" நானும் அதை யோசிச்சு தான் அமைதியா வந்துட்டேன் ".. சரி நீ போய் வேலையா பாரு"...

"சரிங்க எதையும் யோசிக்காதீங்க"...

பூர்ணிமாவின் அறையில் அவளது போனில் " டேய் சதீஷ்"

மறுமுனையில்

" சொல்லு பூர்ணி "!!!

"எங்க அப்பாக்கு என்மேல சந்தேகம் வந்துட்டு போல "...

"என்னடி சொல்ற எப்டி உன்னோட போன் ஏதாவது பார்த்தாரா?? இல்லை நீ எனக்கு கால் பண்ணும் போது கேட்டுட்டாரா "???எப்டி தெரிஞ்சது எதவச்சு தெரிஞ்சது சொல்ற"....

"இல்லை டா இப்ப வீட்டுக்கு வந்தவர் 

நேத்து காலேஜ் போனியா என்னனு விசாரிச்சர் டா அதான் "..!!.

" அது சும்மா கூட கேட்டு இருக்கலாம் பூரணி ".....

"ஓ இருக்குமோ நா ஒரு லூசு நா தான் அதிகமா யோசிச்சேன் போல"....

"சரி பூரணி நாளைக்கு நாம எப்பவும் மீட் பண்ற இடத்துக்கு வா"!!!...

" ஓகே டா பை "...

"ஓகே பூரணி "...

மறுநாள் காலை எழுந்து வெளியே கிளம்பும்போது ஏனோ ஒரு வித பயம் அவளும் அறியாமல் நெஞ்சில் வந்து போனது ... சரியாக 10.30 மணிக்கு சதீஷ் சொன்ன இடத்திற்கு பூரணி வந்துவிட்டாள்......

தூரத்தில் சதீஷ் கார் தெரிய பூரணி தான் நிற்கும் இடத்தில் இருந்து கை காட்டினாள்...அருகில் வந்த காரில் இருந்த சதீஷ்

" சீக்கிரம் ஏறு பூரணி போகலாம்"...

" சரி டா எங்க போறோம்"...

" உனக்கு ஒரு சர்ப்ரைஸ் "...

"எங்கன்னு சொல்லு 

சதீஷ்"...

" வந்து பாரு தெரியும்"...

அவர்கள் இருவரும் சென்ற இடம் காடு போல் இருந்தது...

" இங்க ஏன் வந்து இருக்கோம் சதீஷ்"..

"வா சொல்றேன்..இங்க ஒரு அழகான இடம் இருக்கு அது காமிக்க தான் கூட்டிட்டு வந்தேன்"...

"பயமா இருக்கு சதீஷ் வா போயிடலாம் "......

"அது எல்லாம் ஒன்னும் இல்ல நான் இருக்கேன் தானா வா "...

அவன் கொடுத்த தைரியம் அவளுக்கு அவனோட செல்ல வேண்டும் என்று தூண்டியது..

இருவரும் காட்டிற்குள் செல்ல செல்ல ஒரு வீடு ஒன்று இருந்தது ...அதில் இருந்து இரண்டு பேர் வெளியில் வர "வா சதீஷ் இது தான் நீ சொன்ன பெண்ணா".. என்று ஒருவன் கேட்க

"ஆமாம் தல என்று சதீஷ் கூறினான்"..

"யார் சதீஷ் இவங்க". என்று பூர்ணிமா கேட்க...

"அத நா சொல்லறேன் கண்ணு உன்ன உன்னோட லவ்வர் எங்க கிட்ட 

லட்ச ரூபாக்கு விற்று விட்டான் என்று கூற...

"பொய் சொல்லாதீங்க என்னோட சதீஷ் அப்படி பட்டவன் இல்லை"

"நிஜம் தான் கண்ணு"

"சதீஷ் இது பொயின்னு சொல்லு என்று பேச பூர்ணிமாவை நிமிர்த்தி 

பார்க்காமல் சதீஷ் கிளம்பினான்..அவன் சட்டையை பிடித்த பூர்ணிமா எங்க அம்மா அப்பாவா விட்டு உன்னை நம்பி அவ்ளோ தூரம் வந்தேன் இல்ல எனக்கு இது தேவை தான் என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்...

அவன் அவளை தள்ளி விட்டு விட்டு செல்ல " சதீஷ் என்னும் கூட்டிட்டு போடா பிளீஸ் என்று கதற ..கொஞ்சம் கூட அவளை பற்றி கவலை படாமல் சதீஷ் சென்று விட.. அங்கு இருந்து th தப்பிக்கும் வழி தெரியாமல் பூர்ணிமா தவிக்க.."சரி வா அவன் தான் உன்னை விட்டு விட்டு போயாச்சு இல்லை வா வந்து எங்கள கவனி என்று அதில் ஒருவன் சிரித்து கொண்டே சொல்ல அவனிடம் இருந்து காட்டில் தப்பி ஓடினாள் ..எங்கோ வழி தெரியாமல் ஓட கார் ஒன்று இடிக்க ...பூர்ணிமா நீ நல்லா இருக்க இல்லை என்று தாய் குரல் கேட்க தப்பித்தோம் என்று என்ன முடியாமல் தான் செய்த மட 

தனம் மட்டும் நினைவில் நின்றது..இது காலத்திற்கும் அவளுக்கு வடுவாக இருக்கும்...

காலேஜ் முதல் வருடம் போகும் பெண் பிள்ளைகள் தான் கூட்டை விட்டு சுதந்திரமாய் இருக்க நினைத்து பல வித அபாயங்களை சந்திக்க நேரலாம் ... புது மனிதர்கள் காணும் யாவும் கண்ணுக்கு குளுமையாக தெரியலாம் ...நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்...இந்த பூர்ணிமா ஏதோ தப்பித்து விட்டாள். ஆனால் அவளுக்கு இது காலம் முழுவதும் அழியா வடு....

 

  •                           முற்றும்....

 
Posted : October 13, 2025 11:03 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved