Trending story-25 Winner Announcement
Praveena Thangaraj Novels
Trending Story -2025
இந்த தலைமுறை டிரெண்டிங் முறை கதைகரு வச்சேன். எழுதுவதற்கு நிறைய இருக்கு. ஆனா ஏனோ பலரும் எழுத தயங்கிட்டாங்க. சிலருக்கு போட்டி வைத்ததே தெரியலை என்று தான் சொல்லறாங்க.
தீபாவளி அப்ப 'இப்ப வந்து எழுதட்டுமா?' என்று கேட்டவர்கள் ஒரு எட்டு பேர்.
மேலும் அதுல இருவர் 18+ நெடி அதிகமா எழுதும் ஆள்.
என் போட்டில யாரும் எழுத விருப்பமில்லைன்னா கூட ஓகே. 18+ மட்டுமே பிரதானமாக எழுதுபவரை என்னைக்கும் உள்ள நுழைய விடறதில்லை. அதை தெளிவா சொல்லிட்டேன். ஆனா மற்ற ஆறு பேரை எழுத சொல்லலாமா? வேண்டாமா என்ற இருவேறு மனநிலையில் போட்டியின் முடிவை கூட அன்னைக்கு சொல்லலை.
ஆனா உள்ளுக்குள் இருக்கும் மனசாட்சி, போட்டி முடிந்தப்பிறகு எழுத வந்து கேட்டா அது நியாயமில்லைனு முடிவா சொல்லிடுச்சு. அதனால் அடுத்த முறை போட்டி வச்சா கலந்துக்க சொல்லிட்டேன். (சாரி ரைட்டர்ஸ்.)
போட்டில கலந்துக்கொண்ட கதைகளை சிலரிடம் வாசிக்க கொடுத்து, அதுல இருவரை வெற்றி பெற்றவராக முடிவெடுத்துள்ளார்கள்.
பங்கு பெற்ற கதைகள் எழுத்தாளர்கள்
அனிதாகுமார் (கடந்து போக வேண்டுமா)
எங்கும் எதிலும் அசிங்கமான வார்த்தைகள் கமெண்ட்ஸ் பகுதியில் நிரம்பி வழிவதால் கடந்து போக வேண்டாமா? என்று இந்த கதை.
பத்மஶ்ரீ (தடம் மாறிய பயணம்)
என்னதான் அம்மா அப்பாவை ஏமாற்றி காதலனுடன் பயணம் செய்த பெண்ணுக்கு பாடமாக அமைந்தாலும் தடம் வடுவாக அமைவதாக இந்த கதை.
நித்யயுவனி (பிராங்க்கும் காதலியும்)
நிம்மதியா எங்கயும் இருக்க முடியலை. முக்கியமா சாப்பிடற இடத்திலும் கூட. அங்கயும் போனும் கையுமா வந்து பிராங்க் பண்ணறேன்னு இந்த இன்ஸ்டா பிரபலம் யூடுயூப் ஆட்கள் நடத்தற கூத்து. மனிதர்கள் தன் இயல்பை மறந்து தொலைத்து போன்ல அடுத்தவங்க வாழ்க்கையையும் கேலிக்குரியதாக அல்லது எரிச்சல்படுத்தும் விதமாக மாறுவதை தடுக்கும் விதமாக கதை.
ஜீனத் சபீஹா (வேதனையின் வலி)
ஐடி உலகில் புதிதாக டிரெண்ட் ஆகும் விஷயம். பெர்த்டே பம்ஸ். ஒரு உயிரை எமனிடம் கூட கொண்டு செல்லும் விதமான அடி உண்டு. அது வேண்டாமே. விளையாட்டு விபரீதமாகும்னு போதிக்கற கதை.
ஷியாமளா கோபு (புண்ணிய கணக்கு) சிறப்பு பங்கேற்பாளராக அம்மா.
நம்ம பையனிடம் காசு வாங்க வந்ததாக நினைப்போம். இல்லை.. எல்லாவிதமான பாவ புண்ணியத்தில் தன் மகனுக்கு, பெற்றவர்களை பார்த்துக்கற புண்ணியக் கணக்கும் சேரணும்னு நினைக்கிற தாயின் கதை.
அனுஷாடேவிட் (நிணம் உருக)
இந்த குழந்தை பெற்ற உடல் பாடி ஷேமிங் பண்ணி பண்ணியே, பெண்களோட மனவுளைச்சலை தூண்டும் ஆண்களுக்கான கதை. நிறைய பேர் கடந்து வந்தாலும், எல்லா பெண்களும் அனுபவித்த வலி. தாய்மை என்ற பதவிக்கு உருவம் அது. உருவத்தை வைத்து கேலி கிண்டல் எல்லாம் எப்பவுமே பண்ணுவது தவறு.
*****
இதுல முதல் இரண்டு இடத்தை நடுவர்களாக வாசித்தவர்கள் தேர்ந்தெடுத்த கதை:
1. நிணம் உருக - அனுஷாடேவிட்
2. பிராங்க்கும் காதலியும் - நித்ய யுவனி
வெற்றி தோல்வி என்பதை விட பங்கு பெற்றதே பாராட்டத்தக்கது.
கலந்துக்கொண்டோருக்கு சான்றிதழ்.
முதலிருவருக்கு மட்டும் பணம் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி
பிரவீணா தங்கராஜ்.
Leave a reply
- 145 Forums
- 2,453 Topics
- 2,864 Posts
- 1 Online
- 1,956 Members