ருத்ரமாதேவி - 9
அத்தியாயம் 9
பாட்டி தாத்தா பற்றி ருத்ரா கேட்டதும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார் மகாதேவி.
'அவர்கள் பெற்றோர் பற்றி தானே கேட்டேன்' என்று நினைத்துக் கொண்டே, அவரை உலுக்கிய ருத்ரா, "ஏன் மா? என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி ஆகிட்டீங்க?" என்று படபடத்தாள்.
அவளின் உலுக்களில் சுயநினைவுக்கு வந்த மகாதேவி, "ஒன்னும் இல்லடா' என்று அமைதியானார்.
"அம்மா, தயவு செய்து பாட்டி தாத்தா பற்றி கூறுங்கள்" என்றாள் ருத்ரா.
அதற்கு மகாதேவி, "ஏன் திடீரென்று உனக்கு" என்று அவளிடம் கேட்டாலும், அவளுக்கு ஜோதிடர் கூறிய வார்த்தை தான் நினைவுக்கு வந்தது.
ருத்ராவின் இருபத்தியோராம் வயதில் கணவன் மனைவி இருவரும் ( சதாசிவம் - மகாதேவி ) தங்கள் குடும்பத்துடன் இணைவார்கள் என்று கூறியது.
தன் தாயிடம் எப்படி கூறுவது என்று யோசனையுடன் அமர்ந்திருந்த ருத்ராவை, "சொல்லு ருத்ரா" என்ற தன் தாயின் குரலில், தாயைப் பார்த்து தன் பிறந்த நாளில் நடந்ததை பற்றி கூறத் தொடங்கினாள்.
அவள் ஆரம்பிக்கும் பொழுதே அலுவலகத்தில் இருந்து வீட்டினுள் நுழைந்த சதாசிவனும் அவளின் கூற்றை கவனிக்க ஆரம்பித்தார்.
முழுவதும் கூற கேட்ட இருவரும் அமைதியாய் இருந்தனர். என்ன பதில் சொல்வார் தன் தாய் என ருத்ரா, அமைதியாக தாயையே பார்த்திருக்க, அவளின் தோளில் கை வைத்தார் சதாசிவம்.
தன் தந்தையை அங்கு கண்டதும் அதிர்ச்சியில் அவளின் வாய் '"அப்பா'" என்று சத்தம் இல்லாமல் முனங்கியது.
தன் மகளின் குழப்பத்தை தீர்க்க வேண்டும் என்றால் தங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதுவரை அவளுக்கு தெரியாமல் இருப்பதே தவறு என்று தங்கள் குடும்பத்தை பற்றி கூறத் தொடங்கினார் சதாசிவம்.
தஞ்சாவூருக்கு வடக்கே காவேரி ஆற்றின் கரையின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் தான் என் தந்தையின் ஊர்.
என் தாத்தாவின் தாத்தா காலத்தில் இருந்தே விவசாயம் தான் எங்கள் தொழில்.
எனது தந்தை பண்ணையார் அருணாசலம். தாயார் பார்வதி. எனது தம்பியின் பெயர் சாந்தசிவம்.
எங்கள் பரம்பரையில் யாரும் பள்ளி படிப்பை முடித்தது இல்லை. அப்படி இருக்க எங்கள் ஊரில் இருந்து முதல் முதலில் கல்லூரிக்குச் சென்ற நபர் நான்தான். திருச்சியில் உள்ள கல்லூரியில் தான் படித்தேன்.
இளநிலை கல்வி முடித்து முதுநிலை படிப்பையும் விடுதியில் தங்கியே படித்தேன். படிப்பு முடியும் தருவாயில் நண்பன் ஒருவனுக்கு திருமணம் வந்தது.
நாங்கள் பரீட்சை முடித்தவுடன் திருமணத்திற்கு சென்று விட்டு ஊருக்கு செல்வதாக திட்டமிட்டோம். அதன்படி திருமணத்திற்கு ஒரு ஐந்து நாட்களுக்கு முன் அவனின் ஊர் சென்றோம்.
திருச்சியில் இருந்து இரண்டு பேரூந்துகள் மாறி திருமணஞ்சேரி செல்ல இரவு ஆகிவிட்டது.
கல்யாண மாப்பிள்ளையுடன் சேர்த்து எட்டு பேருக்கும் தடபுடலாக விருந்து வைத்து நன்கு கவனித்துக் கொண்டனர் என்று கூறி அன்றைய நினைவுக்கே சென்று விட்டார் சதாசிவம்.
நண்பர்கள் அனைவரும் மாப்பிள்ளையை கிண்டல் செய்து பேசி சிரித்து கொண்டு உணவருந்தி முடித்தனர்.
அவர்களுக்கு அவர்கள் வீட்டின் எதிரே இருந்த வீட்டில் அவர்களை தங்க வைத்திருந்தார்கள். காலையில் சூரியன் உதிக்கும் முன் ஆற்றங்கரை சென்று குளித்து வாருங்கள் என்று மணமகனின் தந்தை கூறிவிட்டு, அவர்களுக்கு துணையாக ஊர்காரர் இருவரையும் நியமித்துவிட்டு சென்றார்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடனை அனைவரும் முடித்து குளிப்பதற்கு ஆற்றங்கரை நோக்கிச் செல்வதற்கு மணமகனையும் எழுப்பினர்.
அவனின் தந்தை வேண்டாம் நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் அவன் இனி வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கூறி விட்டார்.
சரி என்று அவரிடம் கூறிவிட்டு நண்பர்கள் பேசி சிரித்துக்கொண்டு ஆற்றங்கரை நோக்கி சென்றனர். அவர்களுக்கு முத்து என்ற சிறுவன் வழி காட்டி சென்றான். நீரில் ஓட்ட சலசலப்பு அருகில் கேட்டது.
அனைவருக்குள்ளும் ஒரு மெல்லிய சிளுசிளுப்பு தோன்றியது. பெண்கள் சத்தமும் கேட்க சதாசிவம் முத்துவிடம் விசாரிக்க, அண்ணா இது பெண்கள் குளிக்கும் படித்துறை. நீங்க எல்லோரும் அந்தப் பக்கம் போய் குளிங்க என்று சற்று தள்ளி இருந்த இடத்தை காட்டினான்.
அனைவரும் அங்கு சென்று நீச்சல் அடித்து குளித்து மகிழ்ந்தனர்.
அந்த இளம் காலை வெளிச்சத்தில் அந்த ஆற்றங்கரையும் பாலமும் மிக அழகாக காட்சியளித்தது.
அதை மிகவும் ரசித்து பார்த்து அமர்ந்து கொண்டிருந்தான் சதாசிவம். அனைவரும் குளித்து முடிய பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.
இப்படியாக தினமும் காலையும் மாலையும் ஆற்றங்கரை செல்வது, குளிப்பது, கோயில் குளம் என்று சுற்றுவது, அப்பப்ப கல்யாண வேலை பார்ப்பது என்று அவர்களின் பொழுது போனது.
நாளை திருமணம். காலையில் சதாசிவத்திற்கு சீக்கிரம் முழிப்பு வந்து விட்டது. தன் நண்பர்களை எழுப்ப ஒருவரும் எழ வில்லை. நீ போய் குளிச்சிட்டு வா என்று அனைவரும் ஒன்று போல் கூறிவிட, அவனுக்கும் இனி படுத்தாலும் தூக்கம் வராது. ஆகவே ஆற்றங்கரை செல்லலாம் என்று கிளம்பினான்.
ஆற்றங்கரை சென்ற பிறகு தான் தெரிந்தது சீக்கிரம் வந்து இருப்பது. அவ்விடம் மிகவும் அமைதியாக இருந்தது. அப்போது தான் மணி பார்க்க மூன்றே முக்கால்.
ச்சே ரொம்ப சீக்கிரம் வந்து விட்டோம் என்று நினைத்து, சரி அப்புறமா வந்து குளிப்போம். இப்ப திரும்புவோம் என்று வீட்டை நோக்கி திரும்ப, பாலத்தின் மேலே ஒரு பெண்ணை நான்கு பேர் கட்டாய படுத்தி இழுத்துச் செல்வதை கண்டான்.
உடனே பாலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவன் வருவதற்குள் அந்த பெண்ணை ஆம்னி வேனில் ஏற்ற முயன்றார்கள்.
ஏய் என்று கத்திகொண்டே அந்த பெண்ணை காப்பாற்ற அவளை பிடித்து இழுத்தான்.
தங்கள் வேலையை தடுக்கும் வகையில் புதிதாக வந்தவனை கண்டு முதலில் அதிர்ந்து பின்னர் அடிக்க தொடங்கினார்கள் அந்த கயவர்கள்.
ஒருவன் நால்வரையும் அடித்து விரட்ட முயற்சிக்க, ஒரு நேரத்தில் அவனால் முடியாது என்று தோன்ற, அந்த பெண்ணை பார்த்தான்.
அந்த பெண்ணோ பயத்தில் நடுங்கியபடி வேனுக்கும் பாலத்தின் சுவருக்கு நடுவே ஒழிந்து இருக்க, அவளை பார்த்து ஏய் பொண்ணு., சீக்கிரம் வேனில் ஏறு என்று கட்டளையாக கத்தினான்.
அவனின் கட்டளை குரலில் முதலில் மிரண்டு, பின்னர் அக்கட்டளைக்கு கட்டுண்டு, வேகமாக வேனில் ஏறினாள்.
அவனின் அந்த கர்ஜனையில் மிரண்டது அவள் மட்டும் அல்ல. அந்த கயவர்கள் நால்வரும் தான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 82 days ago
-
ருத்ரமாதேவி - 73 days ago
-
ருத்ரமாதேவி - 65 days ago
-
ருத்ரமாதேவி - 56 days ago
-
ருத்ரமாதேவி - 41 week ago
- 143 Forums
- 2,496 Topics
- 2,979 Posts
- 4 Online
- 2,064 Members
