ருத்ரமாதேவி - 12
அத்தியாயம் 12
இரண்டு நாட்களாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவளின் வாழ்வில் நடந்ததால் மனம் நொந்து வெறுமனே அமர்ந்து இருக்கும் தன் மனைவியை காண சதாசிவத்தின் மனது கனத்தது.
அவளை எப்படி இதில் இருந்து மீட்பது என்று ஒன்றும் அவருக்கு புரியவில்லை. எப்படியாவது அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று அவளின் அருகில் செல்ல, வாசலில் அவனை அழைக்கும் குரல் கேட்டது.
சரி இவளிடம் பிறகு பேசலாம் என்று விட்டு வாசல் நோக்கி நடந்தான். வாசலில் ஓனரின் மனைவி நின்று கொண்டு இருந்தார்.
"என்ன தம்பி?. யார் இந்த பொண்ணு?" என்றார் வீட்டினுள் பார்த்தவாறே.
"அவள் என் மனைவிங்க" என்றான் சத்தமாக.
"என்னப்பா? மஞ்சள் கயிற கட்டி ஒரு பொண்ண திடீர்னு கூட்டிட்டு வந்துட்டு மனைவினு சொன்னா என்ன அர்த்தம். இது நல்ல குடும்பங்கள் வாழும் ஏரியா. என் புருஷன்ட அப்பவே படித்து படித்து சொன்னேன்".
"காலேஜ் படிக்கிற பையன்களுக்கு வீடு கொடுக்காதீங்கனு. கேட்டாரா!. இப்ப பாரு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்துருக்க" என்றார் சடவோடு.
அவர் பேசியதை கேட்டதும் சதாசிவத்திற்கு கோபம் வந்தது. "இந்தா பாருங்கம்மா. அவள் என் மனைவி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன். திரும்பத் திரும்ப நீங்க இப்படி பேசுறீங்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை" என்றான்.
"என்னப்பா? சவுண்டா பேசுற. தப்பு பண்ணிட்டு இவ்வளவு சவுண்டா பேசிகிட்டு இருக்க".
"கல்யாணம் பண்ணினதுல்ல என்னம்மா தப்பு கண்டீங்க" என்றான் நக்கலாக.
"இந்த பாரு தம்பி இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ உடனே வீட்டை காலி பண்ணு".
"என்னம்மா இப்படி சொல்றீங்க?. உடனே எப்படி வீடு காலி பண்ண முடியும்? ஒரு மாசம் அட்வான்ஸ் இருக்கு" என்க.
"அட்வான்ஸ் தானே. நான் இப்பவே தரேன். வாங்கிட்டு காலி பண்ணு" என்று விட்டு கீழே சென்று விட்டார்.
அவர் இன்றே வீடு காலி பண்ண வேண்டும் என்று கூறியதில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை சதாசிவத்திற்கு.
'இன்னும் மனைவியையே சமாதானப்படுத்தல. அதுக்குள்ள இந்த ஹவுஸ் ஓனரம்மா இப்படி பேசுதே' என்று நொந்து வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் ஹவுஸ் ஓனர் மேலே வந்தார். ஹவுஸ் ஓனர் சதாசிவத்திடம் என்ன தம்பி ஏதோ கலாட்டா பண்றீங்கலாம் என்று கேட்க,
அவன், "இல்லை சார் அம்மா தான் என்னை வீட்டை உடனே காலி பண்ண சொன்னாங்க என்றான் சோகமாக.
"இல்ல தம்பி நீங்க ஏதோ ஒரு பொண்ணு" என்கையில் அவர் பேசுவதை தடுக்கும் விதமாக கை காட்டி விட்டு,
"சார். அவ என் மனைவி. இன்று காலையில் பெருவுடையார் கோவிலில் வைத்து எங்கள் திருமணம் முடிந்தது. தயவு செய்து ஏதோ ஒரு பெண், ஏதோ ஒரு பெண் என்று கூறாதீர்கள்" என்றான் கவலையாக.
"என்ன தம்பி சொல்றீங்க" என்றார் அவரும் குழப்பமாக.
"ஆமாம் சார் என்று நேற்று இருந்து அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை கூறி, என் அப்பாவும் இப்பொழுது வீட்டிற்கு வரக்கூடாது என்று விட்டார்கள் சார்.
"நான் சில இடத்தில் வேலைக்கு கேட்டிருக்கின்றேன். அதுவரை நான் இங்கே இருக்க அனுமதியுங்கள் போதும். எப்படியும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரிந்துவிடும் அதுவரை பொறுத்திருங்கள்" என்று இரு கைகளை கூப்பினான்.
அவர் அவனின் கையை பிடித்து இறக்கி விட்டு, "ஏன் தம்பி வருத்தப்படாதீங்க எல்லாம் சரியாகும். அந்தப் பிள்ளையை பத்திரமா பாத்துக்கோ. எத்தனை நாள் வேண்டுமென்றாலும் இங்கே இருங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் என் மனைவியிடம் கூறிக்கொள்கிறேன்" என்றார்.
அவருக்கு கை கூப்பி ரொம்ப "நன்றி சார்" என்க,
அவர் அவனின் தலையில் கை வைத்து "நல்லா இருப்பா" என்று விட்டு சென்றார்.
அவர் சென்றதும் வீட்டினுள் வந்த சதாசிவம் சிலை போல் அமர்ந்திருக்கும் தன் மனைவியின் தோளில் கை வைத்து உலுக்கி, "மகா" என்றான்.
அவனின் உலுக்கலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மகாதேவி.
"என்ன மகா? இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்க போற" என்றான் அமைதியாக.
அவன் கேள்விக்கு பதில் அவள் கண்களில் இருந்து கண்ணீராய் வந்தது.
அவளின் கண்களில் கண்ணீர் வழிவது அவளின் இதயத்தில் இருந்து இரத்தம் வழிவது போல் வலித்தது. என்ன உணர்விது.
'நேற்றுதான் பார்த்தேன். இன்று காலையில் தான் திருமணம் செய்தேன். மாலையில் அவளின் கண்ணீர் என்னை கலங்க வைக்கிறதே! ஓ இதைத்தான் மஞ்சள் கயிறு மேஜிக் என்பார்களோ' என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டு, அவள் அருகில் அமர்ந்து, தோளோடு சேர்த்து அனைத்து, "கவலை படாதே மகா" என்றான்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, "எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. நீ கதவை உள்ளே பூட்டிக்கொள். நான் வந்து கூப்பிட்டால் மட்டும் கதவை திற" என்று அவளிடம் கூறிவிட்டு வெளியே சென்றான்.
அவன் வெளியே சென்றதும் கதவை பூட்டிவிட்டு, அதன் பிறகு தான் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். ஒரு பெரிய ஹால். ஒரு மூலையில் கிச்சன் மேடை சிறிய தடுப்புச்சுவருடன்.
மறுபுறம் குளியலறை. சிறிதாய் ஒரு படுக்கை அறை. அளவான வீடு.
வீடு ஒரே தூசியாக இருந்ததால் மூளையில் கிடந்த பெருக்குமாறை எடுத்து வீட்டைப் பெருக்கி தண்ணீர் விட்டு துடைத்தாள்.
கிச்சனில் சமையலறையில் மண்ணெண்னெய் அடுப்பும். சில பாத்திரங்களும் இருந்தன. அவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு, குளிக்கலாம் என்று நினைக்கையில் மாற்று உடை இல்லையே என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே சுற்றி முற்றும் பார்த்தாள்.
அங்கு செல்ஃபில் அவனின் சில உடைகளும் அவள் நேற்று அணிந்து இருந்த பாவாடை தாவணியும் இருந்தது.
ஓஓ அப்போ காலையில் இங்கு தான் வந்து குளித்து கிளம்பி கோவிலுக்கு போனோமா என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.
உடனே அழுக்கு துணிகளை எடுத்து துவைத்து பால்கனியில் காய போட்டு அப்படியே அமைதியாக அமர்ந்து விட்டாள். இன்னும் அவன் வரவில்லை.
கடைக்குச் சென்ற சதாசிவம் அவளுக்கு தேவையான உடைகள் இரண்டு செட் வாங்கினான். மனைவிக்கு அதிகம் வாங்க ஆசை தான். கையில் இருக்கும் பணத்தை வைத்து வேலை கிடைக்கும் வரை ஓட்ட வேண்டுமே. அதான். பின்னர் இரவு உணவு இருவருக்கும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 1830 minutes ago
-
ருத்ரமாதேவி - 1713 hours ago
-
ருத்ரமாதேவி - 162 days ago
-
ருத்ரமாதேவி - 153 days ago
-
ருத்ரமாதேவி - 143 days ago
- 143 Forums
- 2,510 Topics
- 2,993 Posts
- 19 Online
- 2,065 Members
