ருத்ரமாதேவி - 18
அத்தியாயம் 18
வழக்கமாக ஐந்தரை மணிக்குள் வீடு வந்து விடுவான் சதாசிவம். ஆனால் இந்த ஒரு வார காலமாக அதிக வேலையின் காரணமாக வீடு வர தாமதம் ஆகியது. அதே போல் இன்றும் தன் மனைவி காத்திருப்பாள் என்று எவ்வளவு தான் வேகமாக வேலையை முடித்தாலும் காலதாமதம் ஆனது.
அவன் வீட்டிற்கு வர மணி எட்டை தாண்டியது. கலைப்பாக வந்த கணவனை கண்டதும், "காஃபி குடிக்கிறீங்களா?" என்று கேட்க,
"இல்லை வேண்டாம். ரொம்ப கசகசன்னு இருக்கிறது. குளித்துவிட்டு வருகிறேன் இரவு உணவே சாப்பிட்டு கொள்ளலாம்" என்றான்.
"சரி நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் சப்பாத்திக்கு மாவு தேச்சி வச்சிருக்கேன் சூடா சுடலாம் என்று. நீங்கள் வருவதற்குள் சுட்டு விடுகிறேன்" என்று மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து சப்பாத்தி சுட ஆரம்பித்தாள்.
குளித்து முடித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டு வந்த சதாசிவம் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருக்கும் தன் மனைவியை கண்டான். தலை நிறைய மல்லிகை பூ மெல்லிய நீல வண்ண சிஃபான் புடவையில் அவளின் அங்க வளைவுகளை கண்டான். பளிச்சென்று தெரிந்தது வெற்றிடை. அவனினுள் ஏதோ ஒரு ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தியது.
தன்னையும் அறியாமல் அவள் அருகில் சென்று, பின்னால் இருந்து அவளை சிறிது அணைத்தவாறு நின்று, அவளின் தோளில் நாடியை வைத்து அழுத்தினான்.
இது வழக்கமாக நடக்கும் விஷயம் என்பதால் அவளும், இதோ முடிந்து விட்டது என்று அடுப்பை அணைத்து விட்டு திரும்ப முயற்சிக்க, அவனின் கை அவளின் வெற்றிடையில் கொஞ்சம் உள் சென்று அழுத்தத்தை ஏற்படுத்தியது.
அவனின் அழுத்தத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய, அவள் அவனை விட்டு விலக முயன்றாள்.
அவனை விட்டு தள்ளி நின்று சாப்பிடலாமா என்று அவனை பார்க்க, அவனோ அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனின் பார்வை மாற்றத்தில் இருந்த பேதத்தை உணர்ந்த மகாதேவியின் உடல் நடுங்கத் தொடங்கியது. "ஏன் இப்படி பாக்குறீங்க?" என்று கேட்டு முடிப்பதுக்குள்ளாக அவளுக்கு வியர்த்து விட்டது.
"ம்ம்ம். ரொம்ப அழகா இருக்க மகா, அதான் பார்க்கிறேன்" என்றவாறே அவளை நெருங்க,
"எப்போதும் போல தானே இருக்கேன்" என்றவாறே பின்னால் நகர்ந்து கொண்டே இருந்தாள்.
மெதுவாக நகர்ந்தவளை தடுத்தது சுவர். சட்டென்று ஒரு பக்கமாக விலக பார்த்தவளை தன் இரு கைகளாலும் அணை இட்டு தடுத்தான்.
அவனின் மூச்சுக் காற்று அவளின் மேலே படும்படி நெருங்க, அவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், "பசிக்குது. சாப்பிடலாம் வாங்க" என்று அவனின் புஜத்தில் கை வைத்து தள்ளி பார்க்க,
"ம்ம்ம். சாப்பிடலாம்" என்றவாறே வியர்வை வடிந்த முகத்தை ஒரு கையால் நிமிர்த்தி, "என்னை பார் மகா" என்றான் குரல் கரகரக்க.
அவள் எங்கே பார்க்க. அவனின் செயலில் அவள் மொத்த வெட்கத்தையும் குத்தகைக்கு எடுத்து கண்களை இறுக மூடி இருந்தாளே.
அவளின் கண்களில் இறுக்கத்தை பார்த்து புன்னகைத்து கண்களில் அழுத்தி முத்தமிட்டான்.
அதிர்ந்து விழித்த அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு தங்கள் இல்வாழ்க்கையில் தாம்பத்தியம் எனும் அடுத்த பகுதி நோக்கி செல்ல படுக்கை அறைக்குள் நுழைந்தான்.
அவளை ஆட்கொண்டு விட்டு அப்படியே அசதியில் உறங்கினர். சிறிது நேரத்தில் கண் விழித்த சதாசிவம் மணி பார்க்க, மணி பன்னிரெண்டரை. தங்கள் இருவரும் இருக்கும் நிலை கண்டு புன்னகைத்தவாறே எழுந்து, அவளுக்கு போர்வை போர்த்தி விட்டு, வெளியே வந்து ஒரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு, தன் மனைவியை எழுப்பினான்.
கண் விழித்த மகாதேவி தான் இருக்கும் நிலை உணர்ந்து போர்வையை இருக பற்றி சுவரை ஒட்டி அமர்ந்து நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. நான் ட்ரெஸ் போடனும் என்க.
"அதை எல்லாம் காலையில் மொத்தமாக போட்டுக் கொள்ளலாம். இப்ப சாப்பிடு" என்று சப்பாத்தியை பிய்த்து அவளின் வாய் அருகே கொண்டு செல்ல,
அவளோ வெட்கத்தில் முகம் சிவந்து "ச்சே போங்க" என்றாள். அவன் அசையாமல் அவளை பார்த்துக் கொண்டு இருக்க. "ப்ளீஸ்ங்க" என்றாள்.
அவளை மேலும் கஷ்ட படுத்தாமல், சரி சீக்கிரம் வா என்று கூறி விட்டு வெளியே சென்றான்.
அவன் சென்றதும் தான் அவளால் சீராக மூச்சு விட முடிந்தது. உடை அணிந்து முடித்தும் அவனை பார்க்க வெட்கம் கொண்டு வெளியே செல்ல தயங்கி கதவை பார்த்துக் கொண்டே நின்றாள்.
வெகு நேரம் ஆகியும் 'மனைவி வரவில்லையே, ஒரு வேளை தூங்கி விட்டாளா!' என்று யோசித்து "மகா" என்று குரல் கொடுத்தான்.
இனியும் இங்கு நிற்க முடியாது என உணர்ந்து "ம்ம்ம் இதோ வர்றேன்" என்று மெதுவாய் முனங்கிய படி கதவை திறந்து, நேராக பின் புறம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
ஆனால் மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை. இருவரும் அமைதியாக உணவு உண்டனர். உண்டு முடிந்ததும் எடுத்து வைக்க தானும் உதவினான்.
இன்னும் அமைதியாக இருக்கும் தன் மனைவியின் கையை பிடித்து, "இங்க பாரு மகா, கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சாதாரணமாக நடக்கும் விசயம். இதற்கு நீ இவ்வளவு வெட்கப் பட தேவையில்லை, புரியுதா?" என்றான்.
சரி எனும் விதமாக தலையை ஆட்டினாள். அவள் நெற்றியில் முட்டி, "சரி வா தூங்கலாம்" என்று அழைத்துச் சென்றான்.
இப்படியாக அவர்களது இல்லறம் நல்லறமாக தொடங்கியது. நாட்கள் அதன் போக்கில் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் ஓடியது.
அவளது படிப்பும் முடிந்தது. அவனும் வேலையில் உயர் பதவியில் இருந்தான். அக்கம் பக்கம் உள்ளவர்களும் இதுவரை படிப்பை காரணமாக சொல்லி கொண்டு இருந்தா, இப்போ படிப்பு முடிந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆவுது. இன்னும் குழந்தை இல்லை என்று அவர்கள் காது படவே பேச ஆரம்பித்து விட்டனர்.
மகாதேவிக்கும் குழந்தை பிறக்காதோ என்ற பயம் வந்து கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்து விட்டாள். இதை செய், அதை செய் என்று யார் என்ன சொன்னாலும் அதை செய்தாள்.
அவனும் இன்னும் ஒரு ரெண்டு மூனு வருடம் போகட்டும் என்று எவ்வளவோ சமாதானம் செய்தாலும் அவளை விட்டு பயம் விலக வில்லை.
அவனுக்கும் அவளின் பயத்தை போக்க வழி தெரியாமல் மருத்துவரிடமே செல்லலாம் என்று முடிவெடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகினான்.
அவரும் இருவருக்கும் பல சோதனைகள் செய்து முடிவாக இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருவரும் ஆரோக்கியமாக தான் இருக்கிறீர்கள். பொறுமையாக இருங்கள் என்று கூறி அனுப்பினார்.
இருந்தும் அவள் கோயில் கோயிலாக சுற்றுவதை நிறுத்த வில்லை. அவளின் அந்த பக்திக்கு பயனாக ஆறு மாதத்தில் கருவுற்றாள் மகாதேவி.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 1713 hours ago
-
ருத்ரமாதேவி - 162 days ago
-
ருத்ரமாதேவி - 153 days ago
-
ருத்ரமாதேவி - 143 days ago
-
ருத்ரமாதேவி - 134 days ago
Recently viewed by users: Praveena Thangaraj 22 minutes ago, Arulmozhi Manavalan 44 minutes ago.
- 143 Forums
- 2,510 Topics
- 2,993 Posts
- 5 Online
- 2,065 Members
