அனுஷா டேவிட்

நான் அனுஷாடேவிட்.
எனக்கு வாசிப்பு என்பது சுவாசம், எழுத்து என்பது நேசம். சிறுவயதில் கன்னித்தீவு கதையில் ஆரம்பித்து கடையில் பொருளை மடித்து கொடுக்கும் பேப்பர் வரைக்கும் ஒரு எழுத்து விடாமல் வாசிப்பேன்.
என் கல்லூரி பயணத்தில் கவிதை எழுத ஆரம்பித்தேன் நண்பர்களின் ஊக்குவிப்பில். ரைட்டர் ராணிதென்றல் 2019 இல் வாசகர்களுக்கு சிறுகதை கவிதை பட்டிமன்றம் கடிதம் எழுதுதல் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தினாங்க அந்த காலகட்டம் பொற்காலம்னு சொல்வேன் வாழ்வின் இறுதி வரைக்கும் நினைவில் இருக்கும்.
அப்போது தான் முதன் முதலில் ஒரு சிறுகதை "சாது மிரண்டால்" என்று எழுதினேன். அதை பிரதிபலியில் பப்ளிஷ் செய்யவும் நல்ல வரவேற்பு. அன்றிலிருந்து நேரம் அமையும் போது கவிதை சிறுகதை எழுதுகிறேன்.
முதன் முதலாக நாவல் எழுதும் எண்ணம் உதித்தது ரைட்டர் பிரவீணா தங்கராஜ் அவங்க போட்டி தீம் அறிவித்த போதுதான். முயற்சி செய்யலாம் என்று முயன்றேன் வெற்றி பெறுவேன் என்று துளியும் நினைக்கவில்லை. "தீரா காதலே" நிஜத்தில் நடந்ததை நாவல் கதையாக எழுதியுள்ளேன். இனியும் இது போன்ற நிஜங்களை எழுதும் ஆவலில் இருக்கிறேன்.
எழுத்தை மட்டும் நேசியுங்கள்.
Leave a reply
-
Yazhini1 year ago
-
G. Shyamala Gopu1 year ago
-
Nithya Mariappan1 year ago
-
S.B1 year ago
-
Arulmozhi Manavalan1 year ago
- 136 Forums
- 2,233 Topics
- 2,577 Posts
- 1 Online
- 1,647 Members