அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்
💝அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்💝
Narmadha Subramaniyam
#narmsreads2024 - 10
தீராக் காதலே - அனுஷா டேவிட்
பிரவீணா தங்கராஜ் தளத்தில் நடைபெற்ற குறுநாவல் போட்டியில் பரிசு வென்ற குறுநாவல் இது!
பெரும்பாலும் அனைவரும் முதல் நாவலாகக் காதல் நாவல் தான் எழுதுவார்கள். ஆனால் இவரோ
சமூக விழிப்புணர்வு நாவலை த்ரில்லர் பாணியில் அருமையாக எழுதியிருக்கிறார்.
முதல் நாவல் என்று அவர் சொன்னால் தவிர கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கதையின் நகர்வும் எழுத்து நடையும் மிளிர்கிறது!
Eco crime, Environment crime, NCBR, Digital robbery, Cyber war என பதினெட்டே அத்தியாத்தில் இவர் கூறியிருக்கும் பல கருத்துகள் வியக்க வைத்தது. இந்தத் தகவல்களை எல்லாம் திரட்டி இப்படி ஒரு நாவலை எழுத வேண்டுமென்ற அவரின் எண்ணத்திற்கே பெரிய பாராட்டுக்கள் 👏👏👏👏
நினைத்ததோடு இல்லாமல் engaging நாவலாக அருமையாகக் கொண்டு சென்றிருக்கிறார்.
முதல் அத்தியாயம் வாசித்ததும் 'ஹீரோவை இப்பவே போட்டு தள்ளிட்டாங்களே! இது என்ன மூனு படம் மாதிரி போகுமா! நமக்கு ஜோடியைப் பிரிச்சாலே மனசு தாங்காதே இவங்க ஆளே இல்லைனு சொல்றாங்களே' என்று யோசித்தவாறே அடுத்த அத்தியாயத்தை வாசித்ததும், "வேற ஒருத்தங்க தான் ஹீரோ ஹீரோயினா! அப்ப ஓகே" என்று ஆசுவாசமானது.
இரு வேறு கதைகளாக, ஒரு பக்கம் நாயகன் நாயகியின் காதல் காட்சிகளும் மறுபக்கம் இரு போலீஸ் நண்பர்களின் விசாரணை காட்சிகளுமென நிறைய அனுமானிக்கவும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தவாறே நகர்த்தியிருந்த விதம் அருமை.
Over info கொஞ்சம் குறைத்திருக்கலாம். கதையின் போக்கில் பெரும்பாலும் வாசிக்காமல் கடந்து போக வாய்ப்பிருப்பதால் சுருக்கமாகக் கூறியிருக்கலாம் என்று தோன்றியது.
மற்றபடி நிறைவான வாசிப்பனுபவமாக இருந்தது உங்களின் இந்தத் தீராக் காதல்!
வாழ்த்துகள் சிஸ் 💐🎊🎉
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
----------------------------------
Selvarani selvarani
தீரா காதல்.
நல்ல ஒரு விழிப்புணர்வு கதை.
படித்தவனும் ஏமாறுகிறான்.படிக்காதவனும் ஏமாறுகிறான்.சதுரங்க வேட்டை படம் தான் நினைவுக்கு வந்தது. அகலக்கால் வைத்து மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட தீபக்.தீராவும் அதே மாதிரி கடன் வாங்கி மாட்டிக் கொண்டு ஆதினியின் புத்திசாலித்தனத்தால் தப்பிக்கிறான்.இவனுங்களுக்கு உண்மையில் குடும்பம் எதற்கு? கடன் வாங்கும் போது நல்லாத்தான் இருக்கும்.இன்று கூட ஒரு செய்தி பார்த்தேன்.கடனுக்காக மனைவியை கடத்தி வைத்து பணம் கட்டியதும் விடுவித்ததாக.உடனே இந்த கதை தான் நினைவுக்கு வந்தது.
வாழ்த்துகள் அனுஷா டேவிட்.
Leave a reply
- 145 Forums
- 2,445 Topics
- 2,847 Posts
- 5 Online
- 1,938 Members