Skip to content

phuvana chandresekar -விமர்சனம்-காதல் மந்திரம் சொல்வாயோ

1 Posts
1 Users
0 Reactions
233 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 520
Member Admin
Topic starter
 

விமர்சனம் வழங்குபவர் : phuvana chandresekar 

காதல் மந்திரம் சொல்வாயோ-பிரவீணா தங்கராஜ்

 

அருமையான கதை . நல்ல நடையில் காதலையும் நட்பையும் பேசியிருக்கிறார. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் பார்த்த உணர்வு மனதில் வந்தது.

தனது நண்பனின் தங்கையைக் கண்டவுடன் காதலிக்கத் தொடங்கும் வர்மா தான் நாயகன். வர்மாவை மனது நேசித்தாலும் அவனுடைய பணத்தைப் பார்த்துக் காதலை வெளியே சொல்லத் தயங்கும் நாயகி யாழ் வெண்பா. 

சாருவின் மீதான காதலை வெளிப்படுத்தத் தயங்கி நிற்கும் முகில் நாயகியின் அண்ணன். முகிலின் காதலை உணர்ந்தாலும் தாய் தந்தையின் விருப்பப்படி உறவுப் பையனை மணமுடிக்க ஒத்துக் கொள்ளும் சாரு.

முகிலின் மறதி குணம் அழகாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. சிறுவயதில் நிகழ்ந்த விபத்தால் தலையில் அடிபட்டு அதனால் இந்த பாதிப்பு வந்ததாக காட்டுகிறார். 

அந்த விபத்திற்குக் காரணம் யார்? என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். நாயகியின் வீட்டிலும் பல ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்த அத்தை குடும்பத்தோடு உறவைப் புதுப்பிக்க அத்தை மகனுடன் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. 

நாயகனும் நாயகியும் இணைந்தார்களா? முகிலுக்கு விபத்தில் என்ன‌ ஆயிற்று? நடுவில் கதையில் புகுந்து திருப்பங்களை உண்டாக்கும் ராகவ் யார்?  வர்மாவின் மாமா மகள் அம்முவிற்கு வர்மா தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டானா? சாரு, முகில் இருவரின் காதல் என்னவாயிற்று? இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரியக் கதையைப் படித்துப் பாருங்கள்.

நல்ல திருப்பங்களுடன் விறுவிறுப்பான காதல் கதை. நல்ல நடை.

    பிரவீணா தங்கராஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

 

 


 
Posted : June 18, 2024 2:16 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved