தீக்ஷிதாலட்சுமி review for ஹைக்கூ காதலன்

விமர்சனம் வழங்கியவர் : தீக்ஷிதாலட்சுமி
கதையின் பெயர் :ஹைக்கூ காதலன்.
கதையின் ஆசிரியர் : பிரவீணா தங்கராஜ்.
அருமையான கதை கரு.
உறவுக்களுக்குள் நடக்கும் பாசம் போராட்டம் என்று சொல்வதா? இல்லை உறவுகள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதா? என்றே தெரியவில்லை.😒😒
சொந்த வீட்டில் போலியாக வலம் வருபவனை என்ன சொல்வது. கோபம் மட்டுமே பட முடிந்தது.😞😞 யாருக்கும் அவன் உண்மையாக இருக்கவேயில்லை. அதுவும் சொந்த அக்கா மகளை தவறான எண்ணத்தில் தீண்ட நினைத்து அவளை அந்த எமனுக்கு காவுக் கொடுக்க துணிந்துவிட்டானே. 😐
அதுவும் அவன் தப்பிக்க அவள் சுமந்துக் கொண்டு இருக்கும் கருவையும்.. கருவிற்கு உயிர்க் கொடுத்தவனையும் அல்லவா கூடவே அழிக்க நினைத்தான். 😟🥺
போதை ஒரு தனி மனிதனை மட்டுமில்லை. ஒரு குடும்பத்தையே சிதைத்து விடுகிறது. 😓😓😥😥
நான்கு ஜீவன்கள் இரு உயிரை தேடி பயணப்படுகிறது. அதில் அவர்களுக்குள் ஒரு பிணைப்பையும் ஏற்படுத்துகிறது. 😇😇
தன் சொந்த அக்கா மகளுக்காக நாயகியை பழிவாக நினைத்தவனிடம் மனமோ தவறை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை கைவிட. அதில் அவனே அறியாமல் அவள் மீதே காதல் கொள்கிறான்.. 😍😍
அவளிற்கும் அவன் மீது காதல் தோன்ற. அதனை வெளிப்படுத்தவும் செய்தாள். ஆனால் அவனோ பெரிய பாடமே எடுத்துவிடுவான். 😁😁
நாயகன் ஒரு கட்டத்தில் சந்தர்ப்ப கைதியாக நிற்க. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பரிதவித்து போனாள் பெண்ணவள்.🙁😕
நால்வரும் தேடி சென்ற இரு உயிர்களுக்கு என்ன நேர்ந்தது. இவர்களின் காதல் கை கூடியதா இல்லையா.. கதையை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
அருமையான காதல் கலந்த குடும்ப நாவல். 👌👌
( பி.கு - நான் இக்கதை வாசித்து பல மாதங்கள் கடந்து விட்டன.. தினமும் மனதில் அரித்துக் கொண்டே இருந்தது.. கதையை வாசித்துவிட்டு விமர்சனமே செய்யவில்லையே என்று. ஆசிரியரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்ட போதும்.. அவர் கூறியது 'விமர்சனம் அளிப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உங்கள் தனிப்பட்ட விசியம்' என்று தான். அவரின் அந்த மனதிற்காகவே அன்றே முடிவு செய்தேன்.. கண்டிப்பா ஒரு நாள் இக்கதைக்கு விமர்சனம் அளிக்க வேண்டுமென்று. அதற்கான நேரம் இப்போது தான் அமைந்தது.)❣️❣️
என்றும் பேரன்புடன்
திக்ஷிதா லட்சுமி.💕💞
Leave a reply
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி5 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்5 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த5 months ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi1 year ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan1 year ago
- 137 Forums
- 2,242 Topics
- 2,589 Posts
- 6 Online
- 1,696 Members