Skip to content
முத்துலட்சுமி மோகன்...
 
Notifications
Clear all

முத்துலட்சுமி மோகன்தாஸ் ரிவ்யூ -பூட்டி வைத்த காதலிது

1 Posts
1 Users
0 Reactions
152 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 1 year ago
Posts: 294
Topic starter  

மதிப்புரை வழங்கியவர் : முத்துலட்சுமி மோகன்தாஸ் (கவிதாயினி)

   

   பிரவீணா தங்கராஜ் எழுதிய பூட்டி வைத்த காதலிது நாவலை படித்தேன்.

 

குடும்ப பிண்ணனியை கொண்ட அழகிய நாவல்.

 

கதாபாத்திரங்கள் கண்முன் தோன்றுகின்றார்கள், காட்சிகள் விரிகின்றன .

 

கதையின் நாயகி அதிதி  தன் நாயகன் மிதுனுக்கு கடமையுணர்வு கொண்ட மனைவி மட்டுமல்ல புகுந்த வீட்டிற்கும் பொறுப்பான மருமகளும் கூட. தன் குழந்தையை, கொழுந்தனாரை, நாத்தனாரை வழி நடத்தும் பாங்கு இயல்பான ஒன்றாகயிருக்கிறது .

தன் கணவனின் உதாசீனம், புறக்கணிப்பு என தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படும் போது, பொங்கி எழுந்தாலும், கணவனின் “காதல்” வெளிப்படும் போது, பொங்கி வந்த பாலில் ஒரு துளி நீரால் அடங்கி விடுவது யதார்த்தமான உண்மை. 

 

இளையவர்களின் காதலுக்கு துணை போக முடியாமல் தவிக்கும் தவிப்பில் தாய்மை உணர்வு மேலிடுகிறது.

 

 பூட்டி வைத்த காதலிது மிகவும் பொருத்தமான தலைப்பில் பவனி வருகிறது.

 

கணவன் மனைவியிடம் கூட சின்னச் சிறு சண்டைகள், செல்ல சிணுங்கல்களில் தயக்கமாகவே அதிதி மிதுன் தம்பதியரின் காதல் ரசம் சொட்டுகிறது.

 

ஷ்ரவனின் காதலி பூஜாவின் காதல் கடைசி நேரத்தில் வெளிப்படுத்தபடுகிறது. உள்ளத்தின் தயக்கம் தெள்ள தெளிவாகிறது. 

 

ஜோஸ்னா ரித்விக் காதலர்கள் என்றாலும் பரஸ்பரம் அன்பு  போல் முதலில் தோன்றி, உள்ளார்ந்த அன்பை தெரியப்படுத்த சூழல் அமைய வேண்டியதாகிறது. ரித்விக்கின் அதிரடியும் ரசிக்க வைக்கின்றது. 

 

விறுவிறுப்பாக செல்லும் கதையோட்டத்தின் முடிவில் புதிய காதலர்கள் சவீதா-மயூரன் முந்திக்கொண்டனர். 

 

மொத்ததில் மூன்று ஜோடிகளும் பூட்டி வைத்த காதலை அன்பெனும் துளையில் பண்பெனும்  சாவி போட்டு  திறந்து விடுகிறார்கள். 

 

*பூட்டி வைத்த காதலிது* அனைவர் மனதையும் கட்டிப் போடும் என்பது திண்ணமே.

 

அன்புடன்

முத்துலட்சுமி மோகன்தாஸ்

*-------*

 

 


   
ReplyQuote