Skip to content
ஜெயலட்சுமி கார்த்தி...
 
Notifications
Clear all

ஜெயலட்சுமி கார்த்திக்-ரிவ்யூ-பூட்டி வைத்த காதலிது

1 Posts
1 Users
0 Reactions
52 Views
Site-Admin
(@veenaraj)
Honorable Member
Joined: 10 months ago
Posts: 213
Topic starter  

விமர்சனம் வழங்கியவர் : ஜெயலட்சுமி கார்த்திக் (ரைட்டர்)

கதைப்பெயர் : பூட்டிவைத்த காதலிது

 

        பூட்டி வைத்த காதலிது தலைப்பைக் கேட்டவுடன், நான் கண்டிப்பாக காதல் சொட்ட சொட்ட ஒரு கதை வரப்போவதாக எண்ணி வாசிக்கத் துவங்கினேன். அதுவோ அழகான குடும்பப் பின்னணியில் துவங்கி இன்றைய இல்லத்தரசியான அதிதியின் மனநிலையையும் அவளிடம் உள்ள திறமைகளை சற்றும் கணக்கில் கொள்ளாமல் தன் அலுவலக டென்ஷன்களை இறங்கி வைக்கும் ஒரு இடமாக கருதும் இன்றைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பத் தலைவனான மிதுனையும் பற்றிய யாதர்த்தமான கதை. 

 

அன்னை தந்தையின் அன்பிலும் குடும்ப உறுப்பினர்களின் பாசத்திலும் திளைக்கும் குட்டிப்பையன் சந்தோஷ்.

 

 காதல் வானில் சுற்றும் பறவைகளாக ஜோஷ்னா-ரித்விக். 

 

காதல் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் அல்லாடும் ஷ்ரவன் அவன் காதலை காரணத்தோடு தவிர்க்கும் பூஜா என்று கதை வித்தியாசமான கோணத்தில் நகர்கிறது.

 

குடும்பம் அதில் எழும் பிரச்சனைகள் என்று சாதராணமாக பயணிக்கும் கதை ஜோஷ்னா ரித்விக் காதல் வீட்டுக்கு தெரியும் போது வேறு பரிமாணத்துக்கு வருகிறது. 

 

ரித்விகின் குடும்ப பின்னணி அவனை ஜோஷ்னா குடும்பத்துடன் சேர்த்ததா?

 

மிதுனின் உதாசீனங்கள் அதிதிக்கு எம்மாதிரி உணர்வுகளைக் கொடுத்தது?

 

ரித்விக்கின் தந்தை செய்யும் சூழ்ச்சிகள் என்ன? 

 

அதை எப்படி யார் முறியடித்தார்? 

 

பூஜா ஷ்ரவனை தவிக்க உண்மையான காரணம் என்ன? 

 

அது தெரியும் போது ஷ்ரவனின் முடிவு என்ன? என்று அழகாக பயணிக்கும் கதை.

 

கடைசியில் பல அதிரடி திருப்பங்கள், அதிதியின் அசத்தலான முடிவுகள், மிதுனின் மாற்றம், குடும்பத்திற்குள் நடக்கும் இயல்பான நிகழ்வுகள் என்று கதை நம்மை அதனுள் இழுத்துச் செல்கிறது.

 

கதையோட்டம் என்று சொல்வார்கள், பிரவீணா தங்கராஜின் கதையே ஒரு ஓட்டம் தான். அத்தனை வேகம் அவ்வெழுத்தில். 

 

ஆனாலும் நம்மை எங்கும் நகரவிடாமல் கட்டிப்போடும் அழகிய காட்சி அமைப்புகள்.

 

வாசிக்க வாசிக்க தெவிட்டாத அழகிய குடும்ப காதல் கதை.

 

அன்புடன்

ஜெயலட்சுமி கார்த்திக்

*-----*

   

     


   
ReplyQuote