ரைட்டர் அறிவுமதி விமர்சனம்- பிரம்மனின் கிறுக்கல்கள்
விமர்சனம் வழங்கியவர் : அறிவுமதி(ரைட்டர்) or வாசகி ரீடர்
அக்கா பிரம்மனின் கிறுக்கல்கள் படிச்சேன்...
சாக்லேட் மாதிரி கசப்பை அடிப்படையா கொண்ட இனிப்பா அழகா இருந்தது.
முதல்ல பாவனா ஆத்விக் பொண்ணு நினைச்சு பயந்தேன். ஏன்னா அப்படியிருக்க ப்ளாட் நிறைய படிச்சு ஒரு மாதிரி இருக்குமேன்னு யோசிச்சேன்.
பட் ரெண்டுபேருக்குமே பொதுவான குழந்தையா இருந்தது நிம்மதி. அதுதான் கதையை வித்தியாசமாவும் நிறுத்துச்சு. நார்மலா இருந்தா சஞ்சனா இறந்ததுக்கு பிரம்மனின் கிறுக்கல்கள் காரணம் இல்லை. எங்கக்கா பிரவீணாவின் மூளைதான் காரணம்ன்னு சொல்லிருப்பேன்.
பட் கொரானா ரியாலிட்டி நிஜமாவே பலபேரை காவு வாங்குன இடத்துல அப்படி காமடி பண்ண முடியல. ஆத்விக் காதல் இடம்மாறிருச்சுன்னு சொன்ன இடத்துல சஞ்சனா பாவம்னு லைட்டா பீல் ஆச்சு. ஆனா செத்தவங்களை விட உயிரோட இருக்கறவங்க முக்கியம் தானே.
நாவலை முடிவா முடிக்காம தொடக்கமா முடிச்சுருக்கது சிறப்பு. மொத்தத்துல அழகான கதை.
அங்கங்க டைப் எரர் பார்க்காம விட்டுருக்காங்கக்கா. லைக்
Paid guest pain guest
சஞ்சனா கதை முழுக்க சஞ்ஞனா சஞ்ஞனான்னு வந்துருக்கு. மத்தபடி குட்டியா க்யூட்டா இருக்கு.
And first time எங்கம்மா வழக்கமா வாங்குற ஒரு இதழ்ல்ல பழக்கமானவங்க ஒருத்தவங்களோட கதையைப் படிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. லேட்டாதான் போய் வாங்கினேன். வித்துருக்குமோன்னு பயந்துட்டே போனேன். பட் இருந்துச்சு 😍. வாங்கும்போதே
ஹாப்பி❤️❤️❤️

- 130 Forums
- 2,074 Topics
- 2,342 Posts
- 4 Online
- 975 Members