அருள்மொழி மணவாளனின் ரிவ்யூ -பிரம்மனின் கிறுக்கல்கள்
விமர்சனம் வழங்கியவர்: அருள்மொழிமணவாளன்
கொரோனாவின் கொடுமைகள்
பெற்றோரை இழந்த பிள்ளைகள்,
பிள்ளைகளை இழந்த பெற்றோர்,
கணவனை இழந்த மனைவியர்,
மனைவியை இழந்த கணவன்மார்கள்,
தாத்தா பாட்டி அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்காள் தங்கை நண்பன் நண்பி என்று ஒவ்வொருவரும் இழந்த சொந்தங்கள் ஏராளம்.
செய்தியாக படிக்கும் போதும் கேட்கும் போதும் ஏற்படும் வலியை விட நம் வீட்டில் நிகழும் போது ஏற்படும் வலி....
பிரம்மனின் கிறுக்கல்கள்
அருமையான கதை. ஆத்விக் - யஷ்வதி இருவரின் இழப்பு, அதிலிருந்து அவர்கள் மீள ஆத்விக்கின் தந்தை எடுக்கும் முயற்சி, ஆத்விக்கின் மாற்றம், என்று ஒவ்வொரு இடத்திலும் கதையின் போக்கு சுவாரசியமாக செல்கிறது.
யஷ்வதியிடம் இன்னொருவரின் மனைவி என்று வரும் கேள்வியின் போது சட்டென்று ஆத்விக்கிடம் ஓடி அவனின் பாதுகாப்பை தேடிய யஷ்வதியும் இவ் இல்வாழ்க்கையை இனிமையாக ஏற்றுக் கொள்வாள்.
குழந்தைக்கும் அருமையான பெற்றோர் கிடைத்தனர்.
மொத்தத்தில் பிரவீணா தங்கராஜின் பிரம்மனின் கிறுக்கல்கள் கொரோனாவின் கவலையில் இருந்து சிறிது விடுபட உதவும் அருமையான கதை.
சூப்பர் பிரவீணாமா....
😊😊😍😍.....
☆ _____☆
மிக்க மகிழ்ச்சி அக்கா. பிரதிலிபி செயலியை தாண்டி புத்தகம் வாங்கி படித்து என்னை எப்பவும் மகிழ்ச்சியை அடைய வைப்பிங்க. புரியலைனு நினைக்கிறேன்.
கடந்த முறை புத்தக கண்காட்சிக்கு போனப்ப இரண்டு ஸ்டால்ல ஒரு ஸ்டால்ல என் புத்தகமே இல்லை. என்னடா இது ஒரு புக் கூட இல்லை என்று கவலையா இருந்தேன்.
சக எழுத்தாளர் தோழிகள் அப்ப இங்க வந்த புக் சேல்ஸ் ஆகியிருக்கும் வீணா டோண்ட் பீல் என்று தேற்றினார்கள்.
ஓகே என்னவோ ஏதோ நமக்கு மட்டும் ஏதூவது ஒன்று மாற்றி ஒன்று மகிழ்ச்சியை தடுக்க வந்துடும் என்று அதனை மறந்து அந்த நொடிகளை ரசிக்க ஆரம்பிச்சேன்.
அடுத்த நாள் முகநூல்ல உங்க போட்டோவில் ரமணி அம்மாவோட நாவல்களுக்கு மத்தியில என் ஒரு புத்தகம் இருக்கவும் அத்தனை சந்தோஷம். ஐ பிரதிலிபி ரீடர் அக்கா வாங்கியிருக்காங்க என்று ஆனந்தப்பட்டேன். இந்த முறையும் பிரம்மனின் கிறுக்கல் படித்தை பகிர்ந்து கொண்டது மட்டற்ற மகிழ்வை தருது அக்கா.
என்றும் அன்பும் ஆதரவும் வேண்டி பிரவீணா தங்கராஜ்.
உங்களை போன்றோர்(கருத்தளிக்கும் வாசகரால்) ஆதரவில் தான் எழுதணும் என்ற உத்வேகம் அதிகமாகுது.
நன்றி😊🙏🏽
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi7 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan7 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்7 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ7 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review7 months ago
- 129 Forums
- 1,923 Topics
- 2,183 Posts
- 3 Online
- 876 Members