Skip to content

Jasmina Farveen review for அகலாதே ஆருயிரே

1 Posts
1 Users
0 Reactions
154 Views
Site-Admin
(@veenaraj)
Prominent Member
Joined: 1 year ago
Posts: 259
Topic starter  

#விமர்சன_வேட்டை 

கதையின் பெயர்: அகலாதே ஆருயிரே

எழுத்தாளர்: Jeya Lakshmi Karthik 

வருமையான குடும்ப சூழ்நிலையில் வாழும் பள்ளி மாணவனாய் நாயகன். பெண் பிள்ளைகளை மட்டும் போற்றி ஆண் பிள்ளையை கண்டுக்கொள்ளாத தகப்பனாய் நாயகனின் தந்தை. குடும்பத்தின் வருவாய்காக வேலை செய்து போராடும் தாயும் நாயகனும். திருமணம் செய்து குடுத்தும் பிறந்த வீட்டு சொத்தை சுரண்டும் நாயகனின் தமக்கையர். தாய் தந்தையர் படும் கஷ்டத்தை உணராது புரிந்து கொள்ளாது வாழும் துணை கதாநாயகன். நாயகனும் துணை நாயகனும் உற்ற நண்பன்கள். 

தாய் தந்தை தம்பி என்று ஒரு அழகான பாச கூட்டிற்குள் வாழும் பள்ளி மாணவியாய் நாயகி. பாசத்திற்கு ஏங்கும் பெண்ணாய் துணை கதாநாயகி. இருவரும் உற்ற தோழிகள்.  

இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னோருகிறார்கள். என்பதை நோக்கி பயணிக்கிறது கதை. நிதர்சனமான ஒரு வாழ்வியலை இக்கதையின் மூலம் காட்சி படுத்தி உள்ளார் எழுத்தாளர் 👏🏻👏🏻👏🏻👏🏻. இவர்களின் அனைத்து நாவலும் ஒவ்வொரு தனித்துவம் மிக்கவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


   
ReplyQuote