Skip to content

Zeenath Sabeeha review for சுடுகாட்டில் தென்றல் வீசினால்...

1 Posts
1 Users
0 Reactions
602 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 514
Member Admin
Topic starter
 
அறிவுமதி சிஸ்டர் எழுதிய "சுடுகாட்டில் தென்றல் வீசினால்"
 
வாவ் அருமையான கதை 👏👏🥰 ஒரு பெண் அருவமாக இருக்கும் ஒருவனை விரும்பினால் எப்படி இருக்கும் என்பதே கதை...
 
அமிழ்தா... மாவட்ட ஆட்சியாளராக ஒரு ஊருக்கு வரும் இவள் வந்த அன்றே பெரும் இன்னல்களை சந்திக்கிறாள் அப்போது அவளுக்கு உதவி செய்கிறான் அருவாமாக இருக்கும் அருளாளன் முன்னாள் ஆட்சியாளன்..
உதவியதற்கு நன்றி கூறி யார் அவன் என்று இவள் விசாரிக்க அவனோ தான் இறந்து விட்டதாக கூற இவளும் அதை விளையாட்டு கேலி என நினைத்துக் கொண்டு அவனை பேய் சார் மற்றும் கோஸ்ட் என அழைத்து அவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறாள் 
 
அருளாலனின் இறப்பும் அவனின் ஃபிளாஷ்பாக்கம் மனதை கனக்க செய்தது 😔 அவன் உயிரோடு இருந்திருக்கலாம் என ஒவ்வொரு நொடியும் மனதை பிசைந்தது😔😔 அமிழ்தா... அவளையும் அறியாமல் மிஸ்டர் கோஸ்டின் மேல் காதல் வயப்படுவதும் பின்பு மறுகுவதும் நெகிழ்வு 😔 அமிழ்தாவின் தங்கையாக சந்தனா இருவரும் அடிக்கும் லூட்டிகளும் இருவரின் பாசமும் அருமை 🥰
 
அருளாலனின் தம்பி தங்கைகளாக மேகலை மற்றும் விவேகன் இவர்கள் மூவருக்கும் இருக்கும் பாண்டிங்கும் அருமை 👏👏🥰 அண்ணனை நினைத்து விவேகன் கதறிய கதறலில் நமக்கும் கண்ணீர் வந்தது 😔 அமிழ்தா மற்றும் சக்தியின் நட்பும் சூப்பர் 👏🥰 பேய் கதையில் கூட நம்மை நன்றாக சிரிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர் 😀😀👏
 
விறுவிறுப்பாகும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை 👏👏 
Good luck dear 💐🥰❤️
Keep rocking 🥰💐🌹
 
Posted : August 6, 2024 10:50 am
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved