Skip to content
Share:
Notifications
Clear all

கடல் விடு தூது

3 Posts
3 Users
1 Reactions
484 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

கடல் விடு தூது 

கடலைப்பற்றியும் அதில் வாழும் உயிரினங்கள் தற்போது எவ்வாறு அழிக்கப்படுத்து பற்றியும் அழகாக அதிலிலும் காதல் நட்பு இரண்டையும் சேர்த்து எழுதியது சூப்பர். .. நித்திலாவின் காதல் தான் ஆராவை தேட வைத்தது ஆராவின் இறப்பு நித்திலா முன்னாடி நடந்தது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது பணத்திற்காக உயிரை எடுக்க நினைக்கும் மிஷ்ரா போன்ற ஆட்களுக்கு தீரன் செய்த மாதிரி செய்யனும்

ஆரா தீரன் நட்புக்கு இலக்கனும்

இறுதியில் தீரன் நித்திலா ஜோடி சேர்த்தது நைஸ்

 
Posted : October 1, 2024 2:19 pm
(@chitrasaraswathi)
Posts: 17
Eminent Member
 

கமலி எப்பொழுதும் புவியில் எல்லா உயிர்களும் வாழ உரிமை உண்டு என்று நம்பும் உயிர்களின் காதலி. ஆராவமுதன் ஒரு அதிகாரியாக தண்ணீர் விளையாட்டுகள் விளையாடும் மிகப்பெரிய பூங்காவினை அந்தமானில் அமைக்கும் மிஸ்ராவின் திட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதால் காணாமல் போகிறான். அவனைத் தேடி அவன் முனைவர் பட்டம் பெற படிக்கும் பொழுது அவனுடன் படித்த நித்திலா அதே பதவியுடன் அந்தமான் வருகிறாள். அங்கு மிஸ்ராவின் உதவியாளரும் ஆராவின் நண்பருமான தீரன் மூலம் ஆராவினைத் தேடுகிறாள். அவளின் தேடலுக்கு பதில் கிடைத்ததா என்பதை சிறிய கதையாகத் தந்திருக்கிறார். இந்தக் கதையில் கடல் வாழ் உயிரினங்களின் மீதான அவைகள் வாழ்க்கை முறையிலும் அவைகள் வாழத் தகுதியில்லாமல் கடலையும் மனிதர்களின் பேராசையால் மாசுப்படுத்துவது குறித்தான கதையை தந்திருக்கிறார்.  நேர்மின்மை காரணமாக விரிவாக கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். நல்ல விறுவிறுப்பான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். இன்னமும் விரிவாக கொடுத்திருக்கலாம் என்ற குறை மட்டுமே. வாழ்த்துகள் கமலி

 
Posted : October 13, 2024 11:25 pm
(@kamali-ayappa)
Posts: 14
Eminent Member
 

@kothaihariram Thank you so much ❤️

கதை எழுதும் போதும், உங்க comments பெரிய boost 😍

 
Posted : October 16, 2024 10:06 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved