டாக்டர் ரஜினிகாந்த்
வத்சலா ராகவனின் டாக்டர். ரஜினிகாந்த் எனது பார்வையில். கண் மருத்துவரான டாக்டர் ரஜினிகாந்த் தனது அம்மாவிற்கு சிகிச்சை அளித்த மகளிர் நல மருத்துவரான ஸ்ரீதேவி இருவரும் பார்த்துக் கொள்ளாமல் பொதுவான நபரான ரஜினிகாந்த்தின் அம்மாவின் சிகிச்சை மூலம் இருவரின் குணங்கள் தெரிந்து ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஆனால் திடீரென ஸ்ரீதேவி ஒதுங்கிவிடுகிறாள். எதற்காக இந்த ஒதுக்கம் என்று தெரியாமல் இருக்கும் பொழுது அவனின் தங்கை அரசியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வரும் முனைவர் புகழ் தனது தங்கை மருத்துவர் மீதியை திருமணம் செய்து கொள்ள கேட்கிறான் . தங்கை அரசிக்காக தனது காதலை விட்டுக் கொடுத்தானா இல்லை ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டானா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். ஸ்ரீதேவியின் அக்கா ஸ்ரீலேகா மற்றும் அவர்களது அம்மா சுமித்ரா கொஞ்சம் எதிர்மறையான கதாபாத்திரங்கள். ரஜினிகாந்த்தின் அப்பா, அம்மா மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கும் கதைக் களம். வாழ்த்துகள் மா.
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 3 Online
- 1,938 Members