மேகத்தின் மோனம்

நித்யா மாரியப்பனின் மேகத்தின் மோனம் எனது பார்வையில். தீவிரவாதிகளின் தாக்குதலால் விபத்தில் தனது அம்மா மற்றும் சகோதரியை இழந்துவிட அப்பாவும் அவளும் உயிர் பிழைக்கிறார்கள். அப்பாவை பற்றி நினைக்காமல் தற்கொலைக்கு முயல அங்கு வீடியோ எடுக்கும் யூ ட்யூப்பரான முகில் தனது வார்த்தைகளால் மேகவர்ஷினியின் தற்கொலை எண்ணத்தை கைவிட வைக்கிறான். இந்நிகழ்வால் முகில் மீது ஈர்ப்பு ஏற்பட அவனை காதலிக்கத் தொடங்குகிறாள். இருவரின் அப்பாக்களும் கல்லூரிக் காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பதால் முகிலின் விருப்பம் இன்றி நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வில் எப்படி மாற்றங்கள் செய்தது என்பதை யூ ட்யூப்பர்கள் வாழ்வில் வரும் யதார்த்தமான நிகழ்வுகள் மூலம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். இன்றைய தலைமுறையினரின் நேர்மறையான வாழ்வியல் முறையை முகில் மற்றும் மேகா மூலம் நமக்கு உணர வைத்திருக்கிறார்.
Leave a reply
- 142 Forums
- 2,308 Topics
- 2,678 Posts
- 24 Online
- 1,777 Members