நிழல் தேடும் நிலவே
Dhanakya Karthik ன் நிழல் தேடும் நிலவே எனது பார்வையில். கார்த்திக் மற்றும் ரஞ்சனி ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது காதலித்து திருமணம் நிச்சயம் நடக்கிறது. திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணிற்காக அலுவலக மேலாளரிடம் பிரச்சினை ஏற்படுவதால் கார்த்திக்கின் வேலை போய்விடுகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் திருமணம் வேலை இல்லை என்பதால் ரஞ்சனி மற்றும் அவளது அப்பா இருவரும் வேலை கிடைத்தால்தான் நிச்சயம் செய்த நாளில் திருமணம் நடக்கும் என்று சொல்லிவிடுவதால் திருமணம் தடைபடுகிறது. ரஞ்சனி யின் அத்தை மகன் சித்தார்த் அரசு வேலையில் இருப்பவன். அவன் காதலித்த பெண் மகாலட்சுமி வீட்டில் அவன் அம்மா அதிகம் வரதட்சணை கேட்பதால் திருமணத் தடை வருகிறது. சித்தார்த்தின் அம்மா மகனை மிரட்டி ரஞ்சனியை திருமணம் செய்து வைக்கிறார். கார்த்திக் மற்றும் மகாலட்சுமியின் அப்பா இருவரும் நண்பர்கள் என்பதால் இருவரும் சம்மந்தம் செய்ய நினைக்கும் அவர்களின் எண்ணம் நிறைவேறியதா என்பதை யதார்த்தமான நிகழ்வுகள் மூலம் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். கார்த்திக் மற்றும் மகா யதார்த்தமாக வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள சித்தார்த் மட்டும் பாவமாக இருக்கிறது. வாழ்த்துகள் மா.
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 13 Online
- 881 Members