தீயாகிய தீபம்
சுபஸ்ரீபிரேமா வின் தீயாகிய தீபம் எனது பார்வையில். விக்னேஸ்வரன் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். பெற்றோர் விருப்பப்படி பொறியியல் படிப்பை முடித்து சூழல் காரணமாக பணிக்கு செல்கிறான். இயக்குனர் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் இருக்கும் விக்கி பணியை விட்டு விலக எண்ணம் கொண்ட நேரம் திருமணம் செய்து வைக்க ருத்ராவை பெண் பார்க்க செல்கிறார்கள். ருத்ராவை பார்த்த பிறகு எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறான். திருமணத்தன்று விக்கி வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் ருத்ரா திருமணம் முடிந்த பிறகு அவனது காதல் பற்றி கேட்கிறாள். அதனால் மயக்கம் அடைகிறான் விக்கி . விக்கியின் காதல் என்னவாயிற்று வேறு பெண்ணை விரும்பியவன் ருத்ராவை ஏன் திருமணம் செய்து கொண்டான் என்பதை சில திருப்பங்களுடன் விறுவிறுப்பாக தந்திருக்கிறார். ருத்ரா செய்த தப்பினால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவளை உணர வைக்கும் விக்கியின் செயல் நியாயமானதா இல்லையா என்பதை படிப்பவர்கள் தான் அவரவர் எண்ணத்தைப் பொறுத்து தீர்மானிக்கலாம். தீபமாக இருந்தவள் தீயானதும் தீயாக சுட்டவும் தீபமாக மாறுவதும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று சொல்லலாம். வாழ்த்துகள் மா.
- 138 Forums
- 1,981 Topics
- 2,241 Posts
- 6 Online
- 881 Members