Skip to content
Share:
Notifications
Clear all

நெஞ்சை கொய்த வதுகை

1 Posts
1 Users
0 Reactions
82 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 956
Member Admin
Topic starter
 

நெஞ்சை கொய்த வதுகை 

நாயகன் : விகர்த்தனன்

நாயகி: சம்ருதி

   தான் காதலித்த கிருஷ்ணவுக்கு திருமணம் முடிந்ததில் கோபமுற்ற நாயகி சம்ருதி. கிருஷ்ணாவின் ரிசப்ஷனிற்கு செல்ல, தந்தையிடம் அனுமதி கேட்டு நிற்கின்றாள். 

  தன் வீட்டில்  இளவரசியாக வாழும் சம்ருதியை, தன் அக்கா மகனோடு அனுப்பி வைக்கின்றார் நாயகி தந்தை. ரிசப்ஷனில் கிருஷ்ணாவை சந்தித்து அடித்து, அவன் காதல் தன்னை பாதிக்கவில்லை என்று காட்டிவிட்டு திரும்புகின்றாள். வீட்டில் காதல் தோல்வி என்ற வார்த்தையில் சலிப்பு தட்ட சிங்கப்பூருக்கு தனியாக செல்ல தந்தையிடம் கொஞ்சி கேட்கின்றாள்‌.

  தந்தை தன் அக்கா மகன் மகள் இருவரோடு, மகள் காதல் தேல்வியை மறக்க அனுப்பி வைக்கின்றார். 

  விமானத்திற்குள் நாயகன் விகர்த்தனனை சந்திக்கிக்க நேர்கின்றது. அவனோடு பேச பழக வாய்ப்புகள் அமைகின்றது. சிங்கப்பூரிலிருந்து திரும்பும் போது, விகர்த்தனன் காதலை இதயத்தில் தாங்கி உண்மையான காதல் தோல்வியோடு திரும்புகின்றாள். 

  விகர்த்தனனோடு காதல் கைக்கூடுமா? விகர்த்தனன் யார்? விடைகளை அறிய நெஞ்சை கொய்த வதுகை வாசித்து அறியவும். 

குடும்ப நாவலிதழில் 9443868121 என்ற எண்ணிற்கு அழைத்து, விலாசம் மற்றும் ஆன்லைனில் பணத்தை கொரியர் சார்ஜுடன் அனுப்பி புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம். 

புத்தகத்தின் விலை :40/- 

கொரியர் சார்ஜ்👇🏻

தமிழ்நாடு - ரூ.30/  

வெளிமநிலங்கள்- ரூ50/

வாங்கி படிக்க ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி படிக்கலாம். அன்பும் ஆதரவும். 

நன்றி 

பிரவீணா தங்கராஜ்.

 

 
Posted : July 7, 2025 10:06 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved