பிராங்க்கும் காதலியும்
அது ஒரு பிரம்பாண்ட வணிக வளாகம், நகரங்களில் மட்டுமே காண கூடிய வணிக வளாகங்கள் இப்பொழுது ஊருக்கு ஊர் என்று வளர்ந்து வருகின்றன.... வார இறுதி என வந்துவிட்டால் மக்கள் நிறைந்து வழியும் பல இடங்களில் இதுவும் ஒன்று...
அங்கு தனது கேமரா மேன் சுரேஷுடன் நுழைந்தாள் மித்ரா.
மித்ரா சுரேஷ் இருவரும் யூ டியுப் சேனல் நடத்தி வருகின்றனர் .
சுரேஷ் ," இன்னைக்கு ஏதாவது பண்ணி ஒரு நல்ல கன்டென்ட் புடிச்சே ஆகணும். எவ்வளவு முயற்சி பண்ணியும் பாலோவர்ஸ் மட்டும் பத்தாயிரத்த தாண்ட மாட்டேங்குது ",
மித்ரா ,"அதுக்கு தான் நான் இன்னைக்கு ஒரு பிளானோட வந்துருக்கேன் ",
சுரேஷ் ," நீயும் பிளான் நல்லா போட்டுக்கிட்டு தான் இருக்க ...ஒன்னும் ஒர்க் அவுட் ஆகலையே",
மித்ரா ,"நான் இன்னைக்கு கண்டன்ட்டோட தான் வந்து இருக்கேன்",
சுரேஷ் ," என்ன கன்டென்ட் ?",
மித்ரா விவரமாக கூறவும் ,சுரேஷ் சற்று யோசித்தான்.
அவன் யோசனை முகத்தை பார்த்தவள் ," என்ன யோசிக்கிற ? வொர்க் அவுட் ஆகுமா? ஆகாதான்னா? ", என்று கேட்க
சுரேஷ் ," இல்ல ஏதும் பிரச்சனை வந்துடாதே ", என்று
மித்ரா ," அதெல்லாம் வராது . வா கேஃபிடேரியா போகலாம் ", என அழைத்து சென்றான்.
கேப்பிடேரியாவினுல் நுழைந்தவள் அங்கு இருக்கும் மக்கள் அனைவரையும் ஒரு நொடி கவனித்தாள். ஒரு சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர் .அங்கங்கே இரண்டு மூன்று ஆண்கள், நான்கு ஐந்து பெண்கள் என கூட்டமாக அமர்ந்திருந்தனர். ஒரு டேபிளில் ஒரு பெண் அமர்ந்திருக்க, அதற்கு நான்கு டேபிள் தள்ளி ஒரு ஆண் அமர்ந்து காபி குடித்துக் கொண்டே போனை பார்த்துக் கொண்டிருந்தான் . அவன் இந்தர் .
அவனை கண்ட மித்ரா," ஓகே இன்னைக்கு கண்டன்டுக்கு இவன் தான் சரி ", என்று முடிவெடுத்துக் கொண்டு
கோல்ட் காபி வாங்கிக் கொண்டு அவனை நோக்கி சென்றாள்.
நடந்து சென்றவள் அவனை நெருங்கிய சமயம் தடுமாறி விழுவது போல் அவன் பக்கம் சரிய சுதாரித்துக் கொண்டவன் எழுந்து எட்ட நகர்ந்து விட்டான் . இவள் கையில் இருந்த காபி அவன் மீது ஊற்றும் என எதிர்பார்த்தாள். அவன் கையில் இருந்த காபி அவன் இருந்த வாட்சில் விட அதை பார்த்தவன் அமைதியாக மற்றவர் இருக்கையில் மாறி அமர்ந்து கொண்டு மீண்டும் தனது போனை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அமைதியாக சென்று அமர்வதை பார்த்தவள் இவளே வலிய சென்று சாரி சார் என்று கேட்க
," நோ ப்ராப்ளம் ", என்று பேச்சை முடித்துக் கொண்டு மீண்டும் போனில் கவனமாக இருந்தான் . பாவம் அவனுக்கு அவன் பிரச்சனை . நான்கு டேபிள் தள்ளி கோபத்தில் கோபித்துக் கொண்டிருக்கும் தனது காதலியை சமாதானப்படுத்துவதே இப்பொழுது அவனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இதில் இவளுடன் இப்பொழுது சண்டை போடும் மூடில் அவன் இல்லை போல .
மித்ரா ,"இல்ல சார் சாரி என்னால தான் உங்க காபி கீழ கொட்டிடுச்சு . இந்தாங்க அதுக்கு பதிலா இதை எடுத்துக்கோங்க ",என்று தான் வாங்கி வந்த காபியை அவனிடம் நீட்ட ...
அவனும் ," இல்ல நோ நீட் ",என்று பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டு மீண்டும் போனில் கவனமாக இருந்தான்.
அவளோ," சார் உங்க வாட்ச் டயலை இருக்கு பாருங்க", என்றதும் அப்பொழுது தான் அதை கவனித்தவன் டிஷ்யூவை எடுத்து அதை துடைக்க போக
," குடுங்க சார் நானே கிளின் பண்றேன் . என்னால தானே ", என்று அவன் கையை தொட போக.....
," இல்ல ... விடுங்க வேண்டாம் நான் பாத்துக்குறேன் நோ நீட் ", என்ற அவன் பேச்சைக் கேட்காமல்
," பரவால்ல சார் .நானே பண்றேன்", என்று தனது தோளில் ஒரு பக்கம் தொங்கவிட்டு இருந்தது துப்பட்டாவின் முனையை எடுத்து அவனது வாட்ச் டயலை துடைத்துக் கொண்டிருந்தாள்.
இவனுக்கோ இருக்கிற பிரச்சினை போதாதுன்னு இது வேறயா என்று அவளிடம் கையை இழுக்க...
,"அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு சார் ",என்று நகர்ந்தவள் துப்பட்டாவிலிருந்து நூல் வாட்ச் சிக்கி அவள் துப்பட்டா அவள் தோளிலீ இருந்து அவன் கையில் விழுந்தது.
அதுவரை அவனிடம் மிகவும் அமைதியான குரலில் பேசிக் கொண்டிருந்தவள் ," என்ன சார் துப்பட்டாவை பிடித்து இழுத்து மிஸ் பிஹேவ் பண்றீங்க?", என்று சத்தமாக பேசவும் ,
," இவன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் .எக்ஸ்கியூஸ் மீ இந்தாங்க உங்க துப்பட்டா நான் புடிச்சு இழுக்கல ", என்று எடுத்துக் கொடுக்கவும் ,
,"என்ன ஆச்சு? என்ன பிரச்சனை? ", என்று அங்கு கூட்டம் கூடி விட்டது.
இவள் ," தெரியாம காபி கொட்டிடேனு சாரி சொன்னேன் . இவரு துப்பட்டாவ பிடிச்சு இழுத்து பிரச்சனை பண்றாரு . என்கவும் , இவன் அதிர்ந்து விட்டான்.
," நான் எதுவுமே பண்ணல ", என்று அவன் கூற
மித்ரா ,"இப்பவும் பாருங்க என் துப்பட்டா அவர் கையில தான் இருக்கு. எதுவுமே பண்ணலன்னு சொல்றாரு", என்றதும் அவன் துப்பட்டாவை டேபிள் மீது வைத்தவன் .
," கையில விழவும் பழக்க தோஷத்தில் பிடிச்சுட்டேன் . இந்தாங்க உங்க துப்பட்டா நான் ஒன்னும் உங்க கிட்ட மிஸ்பிகேவ் பண்ணல . என்றவர் வாட்சில் சிக்கிக் கொண்டிருந்த நூலை அத்து எடுத்து அந்த துப்பட்டாவை தூக்கி டேபிள் மீது வைத்தவுடன்.
சுத்தி இருந்த கூட்டமோ ," ஒரு பொது இடத்தில் ஒரு பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்கிறீங்க . இந்த காலத்துல பொறுக்கிங்க தொல்லை ரொம்ப அதிகமா போயிடுச்சு", என்று ஒரு பெண் ஒரு பக்கத்தில் இருந்து சொல்ல...
," போலீஸ்க்கு போன் பண்ணுங்க . இவங்களையெல்லாம் பிடிச்சு உள்ள வச்சா தான் புத்தி வரும்", என்று இன்னொரு குரல் வர...
இவன் சொல்வதை அங்க எவரும் கேட்பது போல் தெரியவில்லை .
உடனே மித்ரா,* மன்னிப்பு கேளுங்க உங்களை விட்டுவிடுகிறேன். மன்னிப்பு கேட்டுட்டு ஒழுங்கா இங்க இருந்து போங்க ", என்று கூறவும்....
," நான் தப்பே பண்ணலைன்னு சொல்றேன் . நீ என்னை மன்னிப்பு கேட்க சொல்ற? ", என இந்தர் கேட்க ...
அப்பொழுது புயல் வேகத்தில் கூட்டத்தை பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள் .
நொடியில் வந்தவள் நேராக மித்ராவை இழுத்து சட்டு சட்டு என கன்னத்தில் மாறி மாறி அறைய அனைவரும் திகைத்துப் போயினர்.
நடப்பதை சுதாரித்த இந்தர் அருந்ததி வேண்டாம் விடு என்று அவளை பிடித்து இழுக்க....
," இவளுக்கு என்ன தைரியம் உங்க மேல இப்படி ஒரு தப்பான பழியை போடுறதுக்கு . இங்கு நடந்தது எல்லாத்தையும் நான் உட்கார்ந்து பார்த்துகிட்டு தான் இருந்தேன். அவரு உன்னிடம் மிஸ் பேவ் பண்ணினாரா? என்றவள் மீண்டும் அறைய போக...
அவளது கையை பிடித்து வைத்துக் கொண்டான் அவன் .
பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருந்தால் சுற்றி இருப்போர் அனைவரும் இந்தரை குற்றம் சாட்டவும் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் வெகுண்டு எழுந்து விட்டாள்.
," ஏமா தப்பு பண்ணது அவர் .இந்த பொண்ண புடிச்சி அடிக்கிற ", என்று கேட்க ...
," யாரு தப்பு பண்ணா? சிசிடிவி செக் பண்ணலாமா ? என்று கேட்கவும்
மித்ரா சற்று சுதரித்துக்கொண்டு," இது ஜஸ்ட் ஒரு பிரான்க் மேடம் . அங்க பாருங்க கேமரா ", என்று காட்டவும் ....
மீண்டும் ஒரு அறை விட்டாள் கன்னத்திலேயே .
," உங்க யு டியுப் சேனலை ப்ரொமோட் பண்றதுக்கு இப்படி தான் மத்தவங்க கேரக்டரை தப்பா புரொஜெக்ட் பண்ணுவீங்களா ? ", என்று கேட்க,
மித்ராவை அறையவும் அவர்களை நோக்கி வந்த கேமராமேன்," இது ஜஸ்ட் ஒரு பிராங்க் ஷோ தான் ", என்று எடுத்துரைக்க....
மித்ரா ," ஒரு பொண்ணு பிரச்சனையில் இருக்கும் பொழுது பொது இடத்தில் மக்கள் அவளுக்காக நிக்கிறாங்களா ? அப்படின்றத தெரிஞ்சுக்கறதுக்காக நாங்க ஒரு பிராங் பண்ணோம் அவ்வளவுதான் மேம். ", என்றதும்
மொத்த கூட்டமும் ," இந்த மாதிரி ஆளுங்களுக்கு வேற வேலையே இல்ல", என்றபடி கலைந்து செல்ல ...
அருந்ததியும் இன்னும் கோபம் குறையாமல் தான் நின்றாள்.
அப்பொழுது மாலில் உள்ள செக்யூரிட்டி இரண்டு மூன்று பேர் இவர்களை நோக்கி வந்தனர் .
," என்ன மேடம் என்ன பிரச்சனை? இங்க ", என்றபடி வர...
அருந்ததியோ ,_ பிராங்க் பண்றேன்னு இங்க தேவை இல்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க. இவர் மேல மிஸ் பிஹே பண்ணாங்கன்னு அபாண்டமாக பழி போட்டு பப்ளிக் நியூஸ் கிரியேட் பண்றாங்க. என்ஜாய் பண்றதுக்கு தான் மாலுக்கு வரோம். வந்த இடத்துல இந்த மாதிரி பிரச்சனை .
இதுக்கெல்லாம் எப்படி நீங்க பர்மிஷன் கொடுக்குறீங்க? " , என்று இவள் செக்யூரிட்டியிடம் கோபமாக கேட்க ....
," அங்கு வந்த மால் மேனேஜர் .
நாங்கள் யாருக்கும் பர்மிஷன் கொடுக்கலை மேடம் ", என்றபடி
," உங்களுக்கு யார் பர்மிஷன் கொடுத்தது? ", என்று மித்ராவிடம் கேட்டவர்கள்
," உங்க மேல நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்க முடியும்.", என்று மால் மேனேஜர் கோபமாக கூறவும்...
இடை புகுந்த சுரேஷ் அவரை பார்த்து மன்னிப்பு கேட்டு பேசி சரிகட்டி இவர்களிடம் வந்து மன்னிப்பு கேட்டு ," இந்த ஃப்ராங்க நாங்க எங்க சேனல்ல போஸ்ட் பண்ணிக்கலாமா? ", என்று கேட்க...
ஏற்கனவே கோபம் குறையாமல் நின்று அருந்ததி," முடியாது எங்களுக்கு இதுல விருப்பமில்லை. இந்த விடியோவை டெலிட் பண்ணுங்க", என்றதும்
உடனே மித்ரா ," மேம் இப்போ இது தான் ட்ரெண்ட்ல போய்கிட்டு இருக்கு. நீங்க பிரபலமாவிங்க . நாங்க எங்களுடைய யூ டியூப் சேனல்ல உங்களோட இன்ஸ்டாகிராம் ஐடிய நாங்கள் பின் பண்றோம் .உங்களுக்கு பாலோவர்ஸ் கிடைப்பாங்க", என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீச ....
அதற்கு மயங்க அவர்கள் தயாராக இல்லை. இந்த ட்ரெண்ட் மோகத்தில் அவனுக்கு பெருசாக ஈடுபாடு இல்லை .
இந்தர் ," எங்களுக்கு எந்த ஒரு பப்ளிசிட்டியும் வேண்டாம் இந்த வீடியோல நீங்க என்னோட கேரக்டரை தப்பா சித்தரிச்சிட்டு கடைசில இவங்க நல்லவங்க பிராங்க் பண்ணனோம்னு நீங்க சொல்றத நாலு பேரு பார்த்து எங்களை பாலோவ் பண்ணனும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை இது ஒரு தேவையில்லாத வேலை என்ன பொறுத்தவரை . இது உங்களுக்கு ஒரு பாடமாக அமையனும் ", என்று கூறி மேனேஜரை அழைத்து ," இந்த வீடியோ அவங்க சேனல்ல வரக்கூடாது. அவங்கள இப்பவே எங்க கண் முன்னாடியே அதை டெலிட் பண்ண சொல்லுங்க", என்று கூறவும்
மால் மேனேஜரும்," வீடியோ டெலிட் பண்ணுங்க சார். இல்லன்னா கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ற மாதிரி இருக்கும்", என்றதும் வேறு வழியில்லாமல் வீடியோவை டெலிட் செய்தனர் . இனி இதுபோல பர்மிஷன் இல்லாம ப்ராப்ளம் கிரியேட் பண்ணி பண்ணாதீங்க என்று அவர்களை எச்சரிக்கை வழங்கி அனுப்பி வைத்தார்.
இன்று சமூகத்தில் நம் கண் முன்னே ஒருவர் பிரச்சனையில் இருக்கிறார் என்றால் உதவுபவரும் இருக்கின்றனர் உதவாமல் கண்டு கொள்ளாமல் செல்பவரும் இருக்கின்றனர் . கவலை கொள்ளாமல் ஒதுங்கி செல்பவரை பற்றி கவலை இல்லை . ஆனால் பிரச்சனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ முன்வரும் மக்கள் இதுபோன்ற ஏமாற்றங்களையும் பிராங்க் என்ற பெயரில் பொய்யையும் புரட்டையும் சந்திக்கும் பொழுது அடுத்த முறை பிரச்சனை என்று கூறுபவருக்கு உதவுவதற்கு தயக்கத்தை உருவாக்கி விடுகிறது. இதை ட்ரெண்ட் செய்து கொண்டு இருந்தாலும் இதில் சாதகங்கள் இருப்பது போல் தெரியவில்லை . ஆனால் இதில் உள்ள பாதகங்களை நாமே உணர்ந்து கொள்ளாத வரை இந்த ட்ரெண்ட் என்ற மோகத்திற்கு முற்றுப்புள்ளி இல்லை சிந்தித்து செயலாற்றுங்கள்.
-நித்ய யுவனி
Leave a reply
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 1 Online
- 1,938 Members