ருத்ரமாதேவி - 29
அத்தியாயம் 29
போர் முடிந்து மயூர தேசத்தையும் தங்கள் வேங்கை நாட்டின் கீழ் கொண்டு வந்தான் மகாதேவன்.
மயூர தேசத்து இளவரசி மயூரா தேவியின் மேல் உள்ள காதலால், அத்தேசத்தை தன் வேங்கை நாட்டின் நேரடி பொறுப்பின் கீழ் கொண்டு வந்தான்.
தங்கள் மன்னன் இறந்ததால் வெற்றி பெற்ற மன்னன் தங்களை அடிமையாக வைப்பானோ அல்லது சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் நிலை வருமோ என்று பயந்த மயூரதேச மக்கள், மகாதேவனின் நேரடி பொறுப்பின் கீழ் மயூரதேசம் இருப்பதால் தாங்கள் எப்போதும் போல் சுதந்திரமாக இருப்பதில் மகிழ்ந்தனர்.
மேலும் அங்கு இருந்த அமைச்சர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அரசாங்க பொறுப்பையும் அமைச்சர்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்தான். மேலும் அந்நாட்டு மக்கள் முன்னிலையிலும் அமைச்சர் பெருமக்கள் முன்னிலையிலும் மயூரா தேவியை தன் தாய் தந்தை ஆசியுடன் திருமணம் செய்து எங்கள் தேசத்து ராணியாக வளம்வரச் செய்வேன் என்று உறுதி மொழி கொடுத்தான்.
தங்கள் இளவரசி வேங்கை நாட்டில் மகாராணியாக வரப்போகும் செய்தி அமைச்சர் பெருமக்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை தந்து. அவனை வாழ்த்தி கோஷமிட்டனர்.
மூன்று நாட்கள் மயூர தேசத்திலிருந்து அனைத்து அரசியல் வேலைகளையும் முடித்து விட்டு, மயூரா தேவியை அழைத்துக்கொண்டு நான்காம் நாள் காலை தங்கள் வேங்கை நாட்டை நோக்கி பயணத்தை தொடங்கினான். மக்கள் வழிநெடுக தங்கள் இளவரசியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
மக்கள் நலமாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் தன் அண்ணனை கொன்றவன் என்று மகாதேவன் மேல் அவளுக்கு வெறுப்பு உண்டானது.
போருக்குச் சென்ற இளவரசன் போர் முடித்து வெற்றி வாகை சூடி, மயூரதேசத்து இளவரசி மயூரா தேவியை அழைத்துக் கொண்டு தங்கள் கோட்டைக்கு வந்து கொண்டு இருக்கும் செய்தியை ஒற்றன் மூலம் அறிந்த அரசனும் அரசியும் மிகவும் மகிழ்ந்து, அவர்களை வரவேற்க கோட்டை வாசலுக்கே வந்துவிட்டனர்.
மகாராணியே மயூரா தேவியை ஆரத்தி எடுத்து, எங்கள் வம்சத்தை வாழ வைக்க வந்த மருமகளே வருக வருக என்று வரவேற்றார். மகா தேவனின் மேல் உள்ள வெறுப்பு கொஞ்சமும் குறையாத வெறுப்பை மகாராணி மகாராஜா மீதும் இவ்வளவு நேரம் வைத்திருந்தாள் மயூரா தேவி.
ஆனால் இப்போது மகாராணியின் அன்பான பேச்சில் சிறிது மனமகிழ்ந்தாள். சிறிது புன்னகைத்து அவரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவரையும் மகாராஜாவையும் தலை வணங்கினாள்.
எங்கே தன் மேல் உள்ள வெறுப்பால் தன் தாய் தந்தையரை அவமதித்து விடுவாளோ என்று பயந்து கொண்டு இருந்த மகா தேவனுக்கு மயூராவின் இச்செயல் மகிழ்ச்சியை கொடுத்தது.
இருவரையும் அழைத்துக் கொண்டு நேராக சென்றது அவர்கள் குலதெய்வமான ருத்ரமாதேவியின் கோயிலுக்கு தான்.
ருத்ரமாதேவி கோயில் மலை மேல் உள்ள குகை கோயில் ஆகும். இரு நூறு படிகள் ஏறிச் சென்றால் பிரம்மாண்டமான குகை வாயில் தெரியும்.
மிக உயரமான பெரிய குகை. வாயில் பெரியதாக இருப்பதால் சூரிய ஒளி தாரளமாக உள்ளே சென்று பண்ணிரெண்டு அடி உயரமுள்ள ருத்ரமாதேவியின் உருவை தெளிவாக காட்டியது.
பண்ணிரு கைகள். ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதங்கள். அசுரனை சூலாயுதத்தால் குத்தி, அவன் மேல் ஒரு கால் வைத்து, நாக்கை துருத்திக் கொண்டு, ஒரு புறம் பார்க்க ருத்ரமாகவும், மறு புறம் பார்க்க சாந்தமாகவும் இருக்கும் ருத்ரமாதேவி, வேண்டியவர்களுக்கு வேண்டும் வரம் தரக் கூடியவள். அவளிடம் தன் மருமகளை காட்டிய பின்பே அரண்மனைக்கு அழைத்து வந்தார் மகாராணி.
சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தை மற்றும் தமையனுடனே வளர்ந்த மயூராவிற்கு மகாராணியின் தாய்மை பாசத்தில் நெகிழ்ந்து போனாள். நாட்கள் கடக்க மயூராவும் மகாராணியுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டாள். மகாராணியும் மயூரா தேவிக்கு தன் மகன் மேல் வெறுப்பு உள்ளது என்று உணர்ந்தாலும் காலம் அவளை மாற்றும் என்றும், மேலும் தன் மகனின் மனம் கவர்ந்த பெண் என்று மயூரா தேவி மேல் அதிக பாசம் வைக்க, இளைய ராணியோ போரில் வென்று உன் அண்ணனை கொன்று உன்னை அழைத்து வந்துள்ளான் மகாதேவன். ஆகவே நீ இந்நாட்டின் அடிமை என்று பொருள் படும்படி அடிக்கடி பேசிப்பேசி மகாதேவனின் மேல் உள்ள கோபம் அவளுக்கு குறையாதவாறு பார்த்துக் கொண்டார்.
மகாதேவனோ வெற்றி பெற்ற நாட்டின் அரசாங்க வேலைகளை எல்லாம் பொறுப்பாக செய்து கொண்டு இருந்தான்.
அனைவரும் கூடியிருக்கும் போது மகாதேவனுக்கும் மயூரா தேவிக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று அரசரிடம் தெரிவித்தார் மகாராணி. அப்படியே சகாதேவன் திருமணம் பற்றியும் பேச, சகாதேவன் முதலில் அண்ணன் திருமணம் முடியட்டும். சிறிது காலம் கழித்து நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று முடிவாக கூறிவிட்டான்.
அரசனும். மகா ராணியும் இரு மகன்களையும் ஒன்றாய் பார்க்க, அரசனை இரண்டாவது மணந்த சகாதேவனின் தாய், தன்மகன் எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக நினைத்து, தன் மகன் தனியே அரசாட்சி செய்ய விரும்பி, தனி நாடு வேண்டும், அதுவும் மகாதேவனின் திருமணத்திற்கு முன்பே வேண்டும் என்று கேட்டார்.
தன் தாயை முறைத்த சகாதேவன், தந்தையிடம் தனியாய் அரசாலும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை தந்தையே. என் உயிர் இருக்கும் வரை என் தமையனுக்கு தோளோடு தோள் நின்று இந்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். அப்படி நீங்கள் எனக்கு தனி தேசம் கொடுத்து ஆட்சி புரிய செய்தால் உயிரற்ற என் உடலே அவ்வரியணையில் அமரும் என்று உறுதியாக கூறி நிமிர்ந்து நின்றான்.
அவனின் பேச்சில் அவ்விடமே அதிர்ந்து அடங்கியது போல் ஓர் உணர்வு. விரைந்து வந்து தன் இளவலை ஆரத்தழுவினான் மகாதேவன்.
அவனை அணைத்தவாறே தன் சிற்றன்னை அருகில் சென்று உங்களுக்கு சிறிதும் சந்தேகம் வேண்டாம் அன்னையே. நாங்கள் இருவரும் இணைந்தே அரசாள்வோம். இவ்வரசாங்கம் எனக்கு என்ன மரியாதை தருகிறதோ அதே போல் என் தமையனுக்கும் கிடைக்கும். சூல் கொண்ட கருவறை வேறு வேறாக இருப்பினும் இவன் என் உடன் பிறந்தவனே. ஆகவே தாங்கள் எதற்கும் கலங்காமல் நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று கூறினான்.
அவன் கூறியது அவரை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாகவே அவருக்கு தோன்றியது. அவரும் உள்ளத்தில் வஞ்சத்தை வளர்ந்து கொண்டு வெளியே புன்னகையுடன் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்.
அடுத்து வந்த சுப தினத்தில் மகாதேவன் மயூரா தேவி திருமணம் கோலாகலமாக அவர்கள் குலதெய்வம் ருத்ரமாதேவியின் முன்னிலையில் சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 301 day ago
-
ருத்ரமாதேவி - 282 days ago
-
ருத்ரமாதேவி - 273 days ago
-
ருத்ரமாதேவி - 264 days ago
-
ருத்ரமாதேவி - 255 days ago
- 144 Forums
- 2,546 Topics
- 3,033 Posts
- 1 Online
- 2,076 Members
