ருத்ரமாதேவி - 32
அத்தியாயம் 32
குழப்பமான மனநிலையில் தன் மனைவியின் அறைக்குள் நுழைந்தான் மகாதேவன்.
அங்கு மயூரா குளித்து முடித்து தன்னை அலங்கரித்து கொண்டு இருந்தாள்.
மகாதேவன் உள்ளே நுழைந்ததும், தோழி பெண்கள் ஒவ்வொருவராக வெளியேற, அவர்கள் சென்றதை கவனிக்காமல் தன் ஈர கூந்தலை துவாளை கொண்டு உலர்த்திக் கொண்டு இருந்தாள் மயூரா.
பின்னர் வெள்ளி கண்ணாடி முன் அமர்ந்து, குங்குமத்தை எடுத்து நெற்றியில் திலகம் இட செல்ல, அவள் கையை பற்றி அவளுக்கு நெற்றித் திலகமிட்டான் மகாதேவன்.
திடீரென்று அவன் கை பற்றியதில் அதிர்ந்து எதிரில் இருக்கும் கண்ணாடியில் அவனை காண, அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரது நேந்திரமும் ஒன்றுடன் ஒன்று தரிசிக்க, அவனின் பார்வை வீச்சு அவளுக்குள் ஏதோ ஒரு அதிர்வு, ஒரு குறுகுறுப்பு தோன்றி மறைந்தது.
அதில் அவள் கன்னம் சூடாகி சிவந்தது. கண்ணாடியில் அவள் கன்னத்தின் சிகப்பு கண்டு காதல் போதை தலைக்கு ஏறியது மகாதேவனுக்கு.
தன்னை நோக்கி அவளை திருப்பி, தலை குனிந்து இருக்கும் அவளின் நாடி பற்றி தன் முகம் காண வைக்க, அவளோ வெட்கத்தில் மேலும் சிவந்தாள்.
மென்மையாக அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான். மென்மையாக இதழ் முத்தத்தில் இருவர் உடலும் சிலிர்த்தது. நடுங்கும் அவள் உடலை இறுக்கி அணைத்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டு அடுத்த செயலுக்கு அனுமதி கேட்டு அவள் விழி நோக்கினான்.
அவள் விழி மூடி அனுமதி வழங்கிய அடுத்த நொடி, திரைச்சீலைகளுக்கு விடுதலை அளித்து அறையை இருள் ஆக்கினான். அவள் உடைகளுக்கு விடுதலை அளித்து அவளை தனதாக்கினான்.
ஓர் ஆண்டு காத்திருப்பு அவளை வேகமாய் கையாண்டான். இனியும் அவனை கஷ்ட பட விரும்பாது அவளும் அவனுக்கு இசைந்தாள். இருவரும் சிறிதும் மோகம் குறையாமல் இரவு உணவையும் மறந்தனர்.
மீண்டும் மீண்டும் அவளை நாடி, அவளுள் தன் உயிரை விதைத்து விட்டு, விடியலில் கண்ணயர்ந்தான்.
மறுநாள் முதலில் கண் விழித்த மகாதேவன் தன் மார்பில் கண் உறங்கும் தன் மனைவியை கண்டு புன்னகைத்து, அவள் உச்சியில் முத்தம் இட்டு, உறக்கம் கலையா வண்ணம் அவளை மஞ்சத்தில் படுக்க வைத்துவிட்டு, குளிராத வண்ணம் போத்தி விட்டு, தன் காலை பணி செய்ய சென்றான்.
ஆயுத பயிற்சி கூடத்தில் தனக்கு முன்னே வந்த தம்பியை கண்டு புன்னகைத்தவாறே தன் பயிற்சியை தொடங்கினான்.
தன் தமையனின் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை கண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே தமையனை ஆராய, அவனின் முதுகில் இருக்கும் நகக் கீறல் தடம் அவனுக்கு உணர்த்தியது தமையனின் முகத்தில் இருக்கும் பிரகாசத்தின் காரணத்தை. புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
காலை உணவை மயூராவின் அறைக்கே கொண்டு வர உத்தரவிட்டு விட்டு, அவளை எழுப்பினான். சூரிய உதயம் வந்து ஒரு நாழிகை ஆகிவிட்டது. இன்னும் என்ன உறக்கம் என்று கொஞ்சிய படியே எழுப்ப, அவள் எழுந்து சோர்வாக அமர்ந்தாள்.
அமர்ந்த பிறகே தன்னிலை உணர, சட்டென்று வஸ்திரம் கொண்டு தன் உடல் மறைக்க, அவனே வஸ்திரமாகினான். மீண்டும் அவளை ஆண்ட பிறகே அவளை விட்டான். பிறகு குளித்து காலை உணவை முடித்துவிட்டு தன் தாயை காண அழைத்துச் சென்றான்.
தாய் தந்தை இருவரும் ஒன்றாக இருக்க, இருவரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்கள். அவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, பெரியவர்களுக்கு நிம்மதியை தந்தது. பின்னர் அனைவரும் ருத்ரமாதேவியை கண்டு வணங்கி ஆசி பெற்று வந்தார்கள்.
நாட்கள் கடக்க சகாதேவனும் தன் மனைவியுடன் மகிழ்வாக வாழ்ந்தான். தன் கணவன் தன்னுடன் வாழ தொடங்கியதில் மகிழ்ந்த உமையாள், தன் மாமியாரிடம் கூற, அவரின் வஞ்சக மூளை தன் மகன் மனைவியுடன் வாழத் தொடங்கியதில் மகிழ்ச்சி அடையாமல், மகாதேவன் மயூராவின் மகிழ்ச்சியை எப்படி கெடுப்பது என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது வாரிசு. தன் மகனின் வாரிசு தான் முதலில் தோன்ற வேண்டும். மயூரா தேவியின் தாதிப்பெண் ஒருவரை தன் கைக்குள் வைத்துக்கொண்டு அவளின் உணவில் கரு உருவாகாமல் இருக்க மருந்தை கலந்து கொடுக்க ஆரம்பித்தார்.
மயூரா அறியாமலேயே அவளின் முதல் குழந்தை இப்புவியில் ஜனிக்காமல் கலைந்தது. வயிற்று வலியில் துடித்த மயூராவை சோதித்த அரண்மனை வைத்தியர் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்து விட்டான்.
அவர்களின் குல வாரிசு கருவிலேயே கலைந்து விட்டது. அதற்கு காரணம் யாரோ செய்த சதி எனும் போது அவனின் உயிர் வரை வலி பரவியது.
செய்தது யார் என்று அடுத்த அரை நாழிகைக்குள் கண்டு பிடித்தும் விட்டான். அதை அறிந்ததில் இருந்து அவன் மனம் வேதனையில் துடித்தது. தன் தாயின் மடி தேடி ஓடினான்.
தாயை கண்டதும் மடைதிறந்த வெள்ளமாக அவன் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது.
தன் மகனின் அழுகையில் திகைத்த அவனின் தாய், "என்ன ஆயிற்று கண்ணா? ஏன் இப்படி அழுகிறாய்?" என்று அவன் தோள் தட்டி தலை கோதி விட, அவன் நடந்ததை கூறி தாயின் மடி சாய்ந்தான்.
அவன் கூறிய செய்தியை கேட்டதும் அவரின் ரத்தம் கொதிக்க, "அத்தாதிப் பெண்ணை சிறைசேதம் செய்து விடு" என்று கோபமாக உரைத்தார்.
"எய்தவன் இருக்க அம்பை நோவானேன்! தாயே" என்று கூறி, "இதை இப்படியே விட்டு விடுவோம். இச்செய்தி மட்டும் சகாதேவன் அறிந்தால் உயிரே விட்டு விடுவான். இச்செய்தி நம் இருவரை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாமலே போகட்டும்" என்று கூறி அமைதியாக அமர்ந்தான்.
தன் தமயனின் குழந்தை கருவிலேயே களைந்த செய்தி கேட்டு துடித்து தன் தமையனை காண விரைந்து வந்தான் சகாதேவன்.
தன் தம்பியிடம் என் குழந்தை இப்புவியை காணாமலேயே போய் விட்டது என்று மட்டும் கூறி வருந்தினான்.
தமையனின் முகத்திலிருந்த வருத்தத்தில் தானும் வருந்தி, "விடுங்கள் அண்ணா. சிறிது நாள் கழித்து மீண்டும் உங்கள் குழந்தை உங்கள் கையில் இருக்கும். கவலைப்படாதீர்கள்" என்று ஆறுதல் கூறி அணைத்தான்.
நாட்கள் கடக்க உமையாள் கருவுற்றாள்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 59
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 58
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 57
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 56
4 weeks ago
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 4 Online
- 2,160 Members
