மாண்புறு மங்கையே

பெயர் சொல்லி எழுதுபவர் - சித்ரா ஹரிதாஸின் மாண்புறு மங்கையே.
ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த பெண்ணின் கதை.
கலைச்சுடர் அழகான குடும்பத்தோடு அறிமுகமாகின்றாள். அவளின் குறும்பும் பேச்சும் ரசித்து கொண்டு இருக்கும் போதே, தன் அக்காவின் ஆப்ரேஷனுக்காக, கலைசுடரின் முகத்தில் ஆசிட் வீசுகின்றான் முத்து.
ஆசிட் அடிக்கப்பட்டப் பின்னே அவள் தான் காதலிக்கும் பெண் என்று தெரியவர பதறுகின்றான். துடிக்கின்றான்.
அவளை இப்படி செய்ய சொன்னவர்கள் யாரென்று தலைவனிடம் மல்லுக்கு நிற்க அவனோ உன் வேலை ஆசிட் அடிப்பது மட்டுமே. மற்றபடி யார் என்ன என்ற தகவல் கூற முடியாதென்று கூறி முத்துவை கொஞ்ச காலமாக தலைமறைவாக இருக்க கூறுகின்றான்.
இதற்கு நடுவில் தன்னை தங்கையாக மதித்த வதனாவின் கணவர் ரித்விக் வேறு கலைசுடரை விரும்புகின்றான். வந்தனா ரித்விக் தம்பதிக்கு குழந்தையில்லாத காரணத்தால் கலைசுடரை மணக்க விரும்புகின்றான் ரித்விக்.
கலைசுடரோ தன் அத்தை மகன் கார்த்திக்கோடு திருமண பேச்சு வார்த்தையில் அவனுக்கு தன் ஆசிட் வீச்சால் ஒருபக்கம் சிதைந்த முகத்தை ஏற்பானா என்று உடைந்து விடுகின்றாள்.
கலைச்சுடர் தன் முகத்தை சிதைத்த முத்துவையே மணப்பாளா? அல்லது வதனாவின் கணவன் ரித்விக் அவளுக்கு விவகாரத்து கொடுத்துவிட்டு கலைசுடரை மணப்பானா? இல்லை கலைசுடரை கார்த்திக்கே மணப்பானா? கலைசுடர் அழகு போனாலும் எவ்வாறு அதிலிருந்து மீண்டு வருகின்றாளென்ற கதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துகள் மா🎉
முழு லிங்க்👇🏻
%e0%ae%af%e0%af%87/
Leave a reply
-
நந்தினி சுகுமாரன்-தந்தை மண் முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
நர்மதா சுப்ரமணியம்-எனை நீங்காதிரு கதைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
அனுஷாடேவிட்-தீரா காதலே கதைக்கு வந்த முகநூலின் விமர்சன தொகுப்புகள்1 year ago
-
நித்யா மாரியப்பன்-கானல் பொய்கைக்கு வந்த முகநூல் விமர்சனங்களின் தொகுப்பு1 year ago
-
சுடரி இருளில் ஏங்காதே1 year ago
- 142 Forums
- 2,308 Topics
- 2,678 Posts
- 0 Online
- 1,777 Members