Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-24

Hello Miss எதிர்கட்சி-24

அத்தியாயம்-24

ஆராவமுதன் சற்றும் முன் சுரபி தட்டிவிட்ட கண்ணாடி சில்லை எடுத்து ஒரு தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாவில் சேகரித்து, குப்பை கூடையில் போட்டவன், அவளருகே  வந்தான்.

“இங்க பாருடி… உங்கப்பாவுக்கும் எங்கப்பாவுக்கும் அரசியலில் பிரச்சனை. ஒருத்தருக்கு ஒருத்தர் மதிப்பு தரலை, அது அவங்க பிரச்சனை. அவங்களை விட்டு தள்ளு… எந்த கல்யாணத்துல தான் சம்பந்திங்க ஒற்றுமையா சுத்திட்டு இருக்காங்க? ஏதாவது வில்லங்கம் இருக்க, இப்படி தான் முட்டிப்பாங்க, மோதிப்பாங்க. நண்பர்கள் எந்த நேரம் ஒன்னு கூடுவாங்கன்னு கூட தெரியாது. நாளைக்கே கட்சி கூட்டணி அமைச்சா நண்பானு மாற வாய்ப்பு உண்டு. அப்படியேயில்லைன்னாலும் ஆடு பகையாவே இருக்கட்டும்.

குட்டி நம்மளை பத்தி மட்டும் பேசுவோம். நீ என்னை விவரம் தெரியறதுக்கு முன்னவே விரும்பின. நான் உன்னை விலகினேன். அது அப்ப.
இப்ப நானும் உண்மையா விரும்பறேன்னு உனக்கு தெரியுது தானே?! உன்னை நிலச்சரிவுல அம்போனு விட்டுட்டு ஓடலையே. உயிர் போனா கூட பரவாயில்லைன்னு கூட இருந்தேன். நீயும் என்னை விரும்பறேன்னும் தெரியுது. இல்லைன்னா என்னை நம்பி உன்னை தந்திருக்க மாட்ட.

நடுவுல நமக்குள் நடந்த தந்திரம், திட்டத்தை ஒதுக்கு. அது அரசியல் ஆட்டத்தில் நிகழ்ந்தது.
எங்கப்பா கூடவே இருந்து, பிறகு தனிகட்சி உருவாக்கி வெளியேறியவர் நட்ராஜ் மாமா. அவரோட பொண்ணு நீ. உனக்கே அரசியலில் நிற்கணும் என்ற வேகம் இருக்கறப்ப, எங்கப்பா இதுக்கு முன்ன இரண்டு முறை முதல்வரா பதவில இருக்கார். அவரோட பையன் நான். எனக்கு நெப்போடிஸம்ல அரசியலில் கால் பதிக்கற ஆசை வராதா?

கொஞ்சம் யோசித்து பாரு… என் அப்பா போலீஸ், நானும் போலீஸ் ஆகணும் என்று ஒரு போலீஸ்காரன் பையன் கனவு காணலாம். எங்கப்பா ஆர்மி, நானும் ஆர்மில போகணும்னு ஒரு இராணுவ வீரன் நினைக்கலாம்.
என் அப்பா ஒரு நடிகர், நானும் புகழ்பெற்ற நடிகரா வரணும்னு படத்துல நடிக்கலாம், என் அப்பா ஐடில சாதாரண எம்பிளாயி, நான் அவரை விட, டீம் லீடரா இருக்கணும். இல்லையா ஒரு கம்பெனியை ரன் பண்ண என்ன செய்யணுமோ அதை செய்வேன் என்ற பிசினஸ் தாகம்.
இதெல்லாம் சொல்லி கொடுத்து வராது சுரபி.
அது போல தான். என் அப்பா அரசியல்வாதி. நானும் அரசியலில் நிற்க வந்துட்டேன். என்ன நடுவுல எனக்கு முன்ன நீ வந்திருக்க. சீனியாரிட்டி பார்த்தா என்னை விட நீ அரசியல் ஞானி தான்.

அதுக்காக என்னை அரசியலில் நுழைய கூடாதுன்னு நீ கண்டிஷன் போட்டது தப்பா? சரியா? நீயே சொல்லு.” என்றான்.

சுரபியோ அவன் பேசுவது சரியாக தோன்றினாலும், ஏற்க மறுத்தவளாக, “குழந்தையை பத்தி பேசறதா அழைத்த, அதோட டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடு. இப்ப கொடுத்தா சரியா ஒரு வருஷத்தில் மியூட்சுவல் விவாகரத்து கிடைக்கும்” என்றாள். அவள் பேச்சு ஊஞ்சலில் உள்ள மணியை கவனமாக பார்வையிட்டாள்.

“வீம்புக்கு பேசாத சுரபி. டிவோர்ஸ் வாங்கவா குருவாயூர் கோவில்ல கல்யாணம் செய்தது.
அதோட குழந்தையை பத்தி என்ன பேசணும்?

நம்ம குழந்தையை நல்லபடியா நாம வளர்க்கணும். நீ அம்மா, நான் அப்பானு அதுக்கான பாசத்தை சேர்ந்து காட்டணும். நீயும் உன்னை இழந்த நொடில, வஞ்சமில்லாம இருந்த. நானுமே அந்த நேரத்துல திட்டத்தோட உன்னை தீண்டலை சுரபி.
நான் ஏமாத்துவேனோ என்ற பயமில்லாம, நீ கற்பா, காதலானு யோசிக்காம, நிகழ்ந்த அற்புதமான நிமிடங்கள். உன்னை என்னை, ஏன் இந்த உலகத்தை மறந்த நிமிடங்கள் அது.
இணைந்தப்பிறகு நிலசரிவுல பாதிக்ககப்பட்ட மக்களை காப்பாத்தும் நோக்கத்தில் உன்னை அனுப்பிட்டு நான் திட்டம் போட்டேன்னு ஒத்துக்கறேன். ஆனா அப்ப எல்லாம் உன்னை கர்ப்பமாக்கி என்னிடம் உன்னை நிற்க வைக்கணும்னு யோசிக்கலை.

என்னயிருந்தாலும் என் சுரபியோட ஒன்னா கலந்துட்டேன்னு ஆனந்தப்பட்டேனே தவிர, கர்ப்பத்தை வச்சி அரசியல் பகடை உருட்டற அளவுக்கு நான் தரம் தாழ்ந்து யோசிக்கலை. ஆனா… அரசியலில் காலடி வைக்கும் போது நீ என் மேல கோபப்பட்டு, என்னை விட்டு போனா, அந்த நேரம் கர்ப்பம்னு இருந்தா எனக்கு என்னை விஞ்டு போகமாட்டயென்ற லீடிங் கிடைக்கும்னு நினைச்சேன்.

இரண்டு மாசம் எதுவும் நீ சொல்லாததும் உடனே குழந்தையை எதிர்பார்த்து ஏமாந்தேன்.
ஆனா நீ இப்ப குழந்தை உருவானதுனு சொல்லவும், அதே சமயம் நான் அரசியலில் காலடி பதித்தும், நீ என்னை விட்டு பிரியக்கூடாதுனு நினைக்கறேன். அதுக்கு குழந்தையை வச்சி தான் உன்னிடம் பேசறேன்.

என்னை விட்டு நீ போக மாட்டனு நம்பி தான், கார்ல இருக்க சொன்னேன். நமக்கு நம்ம அரசியலை விட குழந்தை முக்கியமில்லையா?
பட் இப்ப நீ என்னடானா விவாகரத்து பத்திரத்தை நீட்டற. ஏன் சுரபி…
சுரபி என்ற அட்சயபாத்திரம் இல்லைன்னா இந்த அமுதனே இல்லை டி.” என்று அவளருகே ஊஞ்சலில் அமர்ந்தான்.

“ஆக… அரசியலில் இருந்து விலக மாட்ட?” என்றதும், ஆராவமுதனோ, “எனக்கு நீயும் வேண்டும் குழந்தையும் வேண்டும் சுரபி. அதோட அரசியலிலும் நிற்கணும்.” என்றான்.

சுரபியோ ஏளனமாய் உதட்டை வளைத்து, “கூழுக்கும் ஆசை மீனுக்கும் ஆசையினு இருக்க கூடாது அமுதா. ஏதாவது ஒன்னு சொல்லு

நானும் குழந்தையும் வேண்டுமா? அரசியல், முதல்வர் பதவி வேண்டுமா?” என்றாள்.

ஆராவமுதனோ ”நான் உன்னை ட்ரூவா விரும்பறேன் சுரபி. இவ்ளோ நேரம் அதை தானே சொல்லறேன்.” என்றான்.

“ஏதாவது ஒன்னு… அதை தெளிவா சொல்லு.
பொதுவா கல்யாணமான பொண்ணுங்க வேலைக்கு போகணுமா வேண்டாமானு முடிவெடுத்தா, வேலையை விட்டு நின்றுடுவாங்க. அது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கற பொண்ணாயிருந்தாலும் முடிவு எடுத்து, கணவருக்காக சாக்ரபைஸ் பண்ணிப்பாங்க. அதை தான் நானும் கேட்கறேன். நான் வேண்டுமின்னா உனக்கு அரசியல் கூடவே கூடாது.

உனக்கு அரசியலில் சேர்ந்து முதல்வராகணும்னு எண்ணமிருந்தா, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடு. நான் வெளியே போறேன்.” என்றாள்.

ஆராவமுதனோ “அப்ப நான் அரசியலில் தான் கால் பதிப்பேன்னு நீயா முடிவெடுக்கற அப்படி தானே?” என்று கோபமாய் கேட்க, “உன் முடிவு அதை தான் வலியுறுத்துது.” என்றாள்.

“ஒரு கல்யாண வீட்டுக்கு போறோம். வெஜ்-நான்வெஜ் இரண்டும் இருக்கு விருப்பம் இருந்தா இரண்டையும் சாப்பிட கூடாதா?

துணிக்கடைக்கு போறோம் பார்மல் ஷர்ட்-டிஷர்ட் இரண்டும் பிடிச்சா இரண்டையும் வாங்க முடியாதா? ஒரு நாள் ஸ்வீட் சாப்பிடணும்னா அல்வா மட்டும் தான் கிளறணுமா? ஏன் இந்த ஜாமூன் கேசரி எதுவும் எக்ஸ்ட்ரா ஸ்வீட் சாப்பிட கூடாதா?

உலகத்துல நமக்குன்னு ஏற்கனவே வீடு இருந்தாலும், அவனவன் பீச் ஹவுஸ் பக்கம் வீடு வாங்கணும் என்ற கனவு இருந்தா அதையும் வாங்கறதில்லையா?
உன் பாஷையில் சொல்லணும்னா இரண்டு கண்ணுல எதைடி இழக்க?” என்று புரியவைத்திடும் நோக்கத்தில் திளைத்தான்.

“தேங்க்ஸ்… அப்ப அரசியலில் எதிர்கட்சியா சந்திக்கறேன். விரைவில் முதல்வரா நிற்பேன்‌” என்று நடக்க, அவள் கையை பற்றி ஆவேசமாய் இழுத்து, “என் குழந்தை எனக்கு வேண்டும்?” என்றான்.

இதுவரை கெஞ்சிய ஆராவமுதனாக இல்லாமல் முரட்டு பிடியாக அவளை பிடிக்க, “கையை விடு… அமுதா… கை வலிக்கு…” என்றாள்.

இவ்வளவு பேசியும் சுரபி துள்ளுவதால் “இதுலயும் திட்டம் ஏதாவது போட்டியா சுரபி?” என்று கர்ஜிக்க, “உனக்கு என் வயிற்றில் குழந்தை இருக்கா இல்லையானு சந்தேகமா?” என்று கையை உதறினாள்.

“சந்தேகம் இருந்தா உன்னை ஹாஸ்பிடலில் அழைச்சிட்டு போய் டெஸ்ட் எடுத்துயிருப்பேன் டி. எனக்கு கன்பார்மா தெரியும். உன் கண்ணுல நம்ம குழந்தைக்காக போராடற வேதனை தெரியுது. நான் அரசியலை மட்டும் தேர்ந்தெடுத்திடுவேனோனு தவிக்கற தவிப்பு… என்னால உணர முடியுது. நான் கேட்பது… நான் அரசியல்னு முடிவா இருந்தா குழந்தையை அழிக்க பிளான் பண்ணறியா?” என்றதும், சுரபி ஸ்தம்பித்தாள்.

“சொல்லு சுரபி… நான் அரசியல் தான் முடிவுன்னு சொன்னா, அடுத்த நிமிஷம் என் குழந்தையை அழிச்சிடுவ தானே? நானும் வேண்டாம், இந்த கல்யாணமும் தேவையற்று தூக்கி போட்டுடுவ தானே? என் குழந்தையை அழிச்சிட்டு நிவாஸை கல்யாணம் செய்துக்க போறியா? இல்லை உன்னிகிருஷ்ணனையா? இரண்டு பேருமா உனக்காக கல்யாணம் செய்ய தயங்காதவங்க என்பதால தானே என்னை மறக்கவும் பார்க்கற?” என்று மனம் வதைப்பட்டு, அவளையும் வதைத்து கேட்டான்.

ஆவேசமாய் அவன் கன்னத்தில்  அறைந்து முடித்து, கோபம் தணிய தன்னை சமன்படுத்தி, அப்படியே சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.

சுரபிக்கு ஆராவமுதன் எடுக்கும், இரண்டில் ஒன்று எடுக்கப்படும் முடிவு காயப்படுத்தும். அவன் குழந்தையை தனியாளாக வளர்க்க மாட்டாளா என்ன? அவளுக்கு அது பெரிய விஷயமில்லை. ஆனால் ஆராவமுதனும் வேண்டும். அவனை விட்டுதர மனமில்லை. சுரபிக்குமே அவனோடு வாழ வேண்டுமென்ற ஆசை கடலளவு உள்ளது. அப்படியிருக்க நிவாஸ், உன்னிகிருஷ்ணனை வைத்து இணைத்து பேசுவது சரியா?

இந்த அரசியல் தாகம் மட்டும் தனக்குள் இல்லாமல் போனால் அவளே அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பாள். ஆனால் சுரபிக்கும் முதல்வர் பதிவியில் இருந்து நிறைய மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை அடிமனதில் உள்ளது.

அவளது கனவுகள் கண்ணில் மின்ன, அடிவயிற்றில் தீண்டி, ‘குழந்தையை அழித்து இவனை மறப்பேன் என்று பேசுகின்றானே. எந்தவித ஏமாற்றத்தை ஆராவமுதன் தந்தாலும் அவனோடு இணைந்ததில் மகிழ்ந்தாளே மடந்தை.

அப்படியிருக்க என்ன வார்த்தையை தன்னை பார்த்து வீசிவிட்டான்.‌

“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?” என்று கேட்டாள்.

“பேச கூப்பிட்டா விவாகரத்து பத்திரம் நீட்டினா நான் என்னனு எடுத்துக்கறது” என்று பதிலுக்கு வாதம் செய்தான்.

-தொடரும்.




13 thoughts on “Hello Miss எதிர்கட்சி-24”

  1. Super sis semma epi romba interesting ah pogudhu story 👌👍😍 pombalainga dhan eppovum vittu kudukanuma endha aambalainga mattum avanga edha vittu thara maatanga amudhan um appdi dhan yosikiran🙄 edhuku enna dhan mudivu parpom 🧐

  2. Amudhan surabi oda aasai thappu illa aana inga surabi oda condition mattum than thappu ah poguthu kadhal na anbu than irukan um conditions illa avan kettathu thappu ah therinchalum andha vatham vandha thuku karanam surabi than avanga rendu per ku naduvula unni nivas nu iva izhuthathu thappu than ah

  3. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 24)

    இவன் பேசறதைப் பார்த்தா அவ என்னமோ தன்னோட கர்பத்தை அபார்ட் பண்ண முடிவெடுத்த மாதிரியே பேசுறானே…?
    ஏன், ஆனானப்பட்ட அரசியல் களத்துலயே இறங்கி குத்து டான்ஸ் போட்டு கொட்டையை போட்டவளால, ஒரு குழந்தையை வளர்க்க முடியாதா என்ன…? சிங்கிளா பெத்தெடுத்து வளர்த்தா அந்த குழந்தை என்ன வளரமாட்டேன்னு சொல்லப் போகுதா…? பேச வந்துட்டான் பெருசா..குழந்தையையே அவ தான் பெத்தெடுக்கப் போறா, இதுல குழந்தையை கொடுத்தவனுக்கு
    எங்க நோவுதாமாம். போடா, போடா…. எந்த வலியையும் தாங்குற அயர்ன் லேடீஸ் டா…?
    நோகாம நோன்பு நோக்குறது எப்படின்னு இவன் வந்து அவளுக்கு அ’னா ஆ’வன்ன அரிச்சுவடி புதுசா வந்து கத்து தர மாதிரி பெரிசா வெட்டிப் பேச்சு பேச வந்துட்டான் பாருங்க..!

    😀😀😀
    CRVS (or) CRVS2797

  4. Kalidevi

    nee ena pesura amutha surabi venum kolanthaium venum arasiyal um venum na eppadi ava theliva kekura nan illa arasiyal thathu onu than mudiva sollu apo kolanthaiya vachi avala vida kudathunu tha ninaikira

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *