Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-29

Hello Miss எதிர்கட்சி-29

அத்தியாயம்-29

Thank you for reading this post, don't forget to subscribe!

   தேர்தல் களம் என்பது கிட்டதட்ட பரீட்சைக்கு மாணவன் தன்னை தயார்படுத்தி கொள்வது போல தான்.
  தான் செய்த நல்லது கெட்டது மட்டுமே தேர்வில் எழுதப்படும் விடைகளாக மக்கள் மனதில் பதியப்படும்.

பெரும்பாலும் மக்களின் மனதில் தேர்தல் பிறகு எவ்வித வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டாலும், அது அரியராக காட்சியளிக்கும், இந்த கடைசி ஒரு வருடத்தில் தலைவர்களின் சமூக சேவைகள் உதவிகள், வாக்குறுதிகளில் சில எல்லாம் செயல்படுத்தப்பட்டு, அரியரை க்ளியர் செய்வது போல மனதில் பளிங்காக பதிந்திடும்.

   அப்படி தான் இலக்கியன் செய்த உதவிகளை காட்டிலும் ஆராவமுதன் செய்த உதவிகள் பேசப்பட்டது.

  சுரபியும் மக்களுக்காக நிறைய நல்லது செய்தாலும், அவளின் அனல் தெறிக்கும் பேச்சும் குடத்தில் விழுந்த தங்க கட்டிகளாக, மாறியது.

  இவ்வாறான காலக்கட்டத்திலும் சுரபியை அவளது அம்மா வீட்டுக்கு அனுப்ப மறுத்தான்.

“நீ என் கூடவே இருக்கணும். எனக்கு அதுவே பாதி பலம்” என்று உண்மையை கூறுவான்.

சுரபியும் ஆராவமுதனின் அன்பு தொல்லையாலும் நட்ராஜின் முகத்திருப்புதல் காரணத்தாலும், அன்னை வீட்டுக்கு செல்லவில்லை. நட்ராஜ் ஆராவமுதனை மணக்க முன் சென்றதிலிருந்து தந்தை தன்னை மகளாக கருதாமல் ஒரு கட்சியில் பெண் பதவியில் வசிப்பவள் என்றே நடத்தினார்.

  அதனாலும் சுரபி தந்தை வீட்டை நாடவில்லை. அதற்கு பதிலாக பல்லவியை தன் வீட்டுக்கு அழைத்து கொண்டாள். அதற்கு நட்ராஜ் போக வேண்டாமென்று கூறவில்லை‌. இந்த விஷயத்தில் பல்லவிசொன்னாலும் கேட்கமாட்டாரென அவரும் அறிவார்.

  புள்ளத்தாச்சி பொண்ணு கூட பெரியவங்க இருக்கணும் என்று கண்ணும் கருத்துமாய் மகளை மருமகன் வீட்டில் வந்து தங்கி கவனித்தார்.

  பல்லவிக்கு என்று தனி அறையும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

  இந்த வீட்டிலும் சமையல் இதை செய் அதை செய் ஏவி மகளுக்கு இந்த நேரம் இதை கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயாரித்து கொடுத்தார்.

  இதில் மருமகனது விருப்பமான உணவுகளை கேட்டு அதையும் செய்து அசத்தினார்.‌

   அதை சுரபி கூட கேலி செய்வாள். “நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் போகுது” என்று பழமொழியை உதாரணம் காட்டி பேசுவாள். அதாவது சுரபகயை கவனிக்க வந்து ஆராவமுதனுக்கும் அறுசுவை உணவு கிடைக்கின்றதாம்.
 
  “அத்தை… இவளுக்கு பேச யார் சொல்லி கொடுத்தா. எந்த டாபிக் தந்தாலும் பழமொழி, கதை கவிதை, மேற்கோள் இப்படி உதாரணம் காட்டி ரசிக்கும் படி பேசறா. சில நேரம் சட்டமன்றத்தில் இவ பேச்சை நானே ரசித்துடுவேன், நைஸா சிதம்பரம் அங்கிள் உலுக்குவார்னா பார்த்துக்கோங்க” என்று பெருமையாக கூறினான்.

  சுரபி கலகலவென சிரித்து, “யார்கிட்ட கேட்கற பாரு.. எங்கம்மா தான் ஒவ்வொன்னுக்கு ஒரு கதையும் பழமொழியும் சொல்வாங்க. இந்த மேற்கோள் நிவாஸ் கற்றுக்கொடுத்தார்.” என்பாள்.
பல்லவி நெளிய, ஆராவமுதனோ “அதானா… தாயை போல பிள்ளை நூலை போல சேலை.. நீங்க ரைட் அத்தை… அந்த நிவாஸை தான் என்ன செய்தும் ஒழிக்க முடியலை. கடைசில கரப்பான் பூச்சி போல திரும்ப வந்துட்டான்.” என்று கூற, சுரபி விழுவிழுந்து சிரித்தாள்‌.

  கரப்பான் பூச்சி’ என்ற உதாரணம் பேச, சிரிக்காமல் எப்படி? ஆனாலும் நிவாஸ் மீண்டும்‌ வந்து சேர்ந்ததில் ஆராவமுதனுக்கு பிடிக்கவில்லை. நிவாஸ் மனதில் காதலை அழித்து விட்டதாகவும், கட்சிக்காக கட்சியில் மட்டும் இனி‌ கவனம் வகிப்பேன் என்றெல்லாம் பேசினார்.

  என்னை கடத்தியதில் உங்க பங்கு இல்லைன்னு எனக்கு தெரிந்துடுச்சு நிவாஸ்‌ அதனால் நீங்க எப்பவும் போல கூடயிருங்க” என்று கூறினாள். அவளுக்கு தானே தெரியும் தன்னை கருணாகரன் மூலமாக தானே கடத்தி போக திட்டம் போட்டது. அதை நிவாஸுக்கு யாரும் கூறப்போவதில்லை. ஆராவமுதனை தவிர. ஆராவமுதன் நிச்சயம் இதெல்லாம் நிவாஸிடம் பேச தேவையில்லை. நிவாஸை மறந்து பல்லவி அத்தையால் சுவைத்து தன் மனையாளின் வளர்பிறை வயிற்றை ரசித்தவனாக ஆராவமுதன் இருந்தான்.

  தேர்தல் நேரமென்றாலும் அடிக்கடி வாக்கு சேகரிப்பு, தேர்தல் பிரச்ஞாரம் மாநாட்டு விழா, தொகுதியில் வீடு தேடி மக்களை சென்று ஓட்டு சேகரிப்பு, இருந்தாலும் நடுவில் இப்படி அழகாக சிரித்து சந்தோஷமாக வீட்டில் சென்றது.

    மீடியாக்களும் பத்திரிக்கைத்துறையும் போட்டி போட்டுக்கொண்டு, ஆர்வமுதனுக்கு இந்த தேர்தலில் வெற்றி சாத்தியமா? அல்லது சுரபிக்கு வெற்றி சாத்தியமா என்று பேச்சு சென்றது. இதில் புள்ளிவிவரம் எடுக்க சுரபிக்கு நாற்பத்தி ஐந்து சதமும், ஆராவமுதனுக்கு ஐம்பத்தி ஐந்து சதமும் வெற்றி வாய்ப்பு உண்டு என்றது தான் வெளியானது.

  இலக்கியன் நட்ராஜ் என்ற போட்டியை விட, இந்த எதிரெதிர் ஆட்களை வைத்து சூடுபறக்க விவாதம் நிகழ்த்த பிடிக்காமலா? அதோடு கணவன் மனைவி இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் மைக்கை எடுத்து கொண்டு கடற்கரையில் இருந்தவர்களை ஒன்றுவிடாமல் கேட்க ஆளாளுக்கு கருத்து தெரிவித்தனர்.
  
  ஓரளவு ஆராவமுதன் முன்னிலையில் இருக்க, தேர்தலும் நெருங்க, அந்த காணோளி வெளியே கசிந்தது.
  
   அனைத்து பத்திரிகைத்துறையும் ஊடகமும், சோஷியல் மீடியாவும், என்று எங்கு திரும்பினாலும் வேகவேகமாய் அந்த காணோளி தான் வைரலாகியது. இதில் இளைஞர்கள் வேறு அடிக்கடி தங்கழ் பக்கத்தில் இன்ஸ்டாவில் யூடுயுப்பில் என்று பதிவேற்றி வைரஸை விட அதிகமாய் பரப்பினார்கள்.
 
   ஆராவமுதன் அவனது கட்சி அலுவலகத்தில் இருந்த நேரம்.
  அந்த காணொளி வெளியாக, நெற்றி சுருங்கி, யோசனைவயப்பட்டவனாய் சூடானான்.

  இந்த பேச்சு சுரபியோடு பேசிய பொழுது எடுத்தது. அப்படியெனில்… இதை அவள் தான் வெளியிட்டு இருக்க வேண்டும்.

   கழுத்து நரம்புகள் புடைக்க, சினம் ஏறியது‌. என்ன சார் இது?” என்று சிதம்பரம் பதட்டமாய் கேட்க, “உங்களுக்கு இதுல சம்பந்தம் இருக்கா?” என்று தான் முதல் வார்த்தை கேட்டான்.

  “தம்பி சந்தேகத்தோட என்னை அப்படி பார்க்காதிங்க. முன்ன என்றால் இருக்கலாம். இப்ப நான் விசுவாசமா இருப்பது தமிழக எழுச்சி கட்சிக்கு தான். தவிர, ஜனநாயக விடியல் கட்சிக்கு இல்லை.” என்றார்.‌

  “இது எப்ப பேசினிங்க தம்பி?” என்று கேட்க, “சுரபியோட தனியா இருந்தப்ப” என்றான்.‌

   “அரசியலில் காலம் நேரம் பார்க்காம முழ்கிய பொண்ணு தம்பி. விசுக்குன்னு உங்களை தற்காலிக முதல்வரா பார்த்தும் எந்த வில்லங்கமும் பண்ணாம இருந்தப்பவே சந்தேகப்பட்டேன். ஒருவேளை புருஷன் என்றதும் வகட்டு கொடுத்துடுச்சோனா கூட நினைச்சேன். அந்த பொண்ணு அரசியலை, யாருக்காகவும் விட்டு தரலை தம்பி. அதுக்கு உதாரணம் இந்த காணொளி. என்ன சொல்லறதுன்னு தெரியலை. வாயும் வயிறுமா இருக்கு. இந்த நேரம் உங்கஹை பகைச்சிக்க எப்படி முடிந்ததோ? ஆனா சுரபி செய்திருப்பா தம்பி. சின்னதுல இருந்து பார்க்கறேன். ஒவ்வொரு காயும் அதுக்கு ஏற்றார் போல தான் போட்டுக்கும்.  எனக்கென்னவோ இது உங்களுக்கான சறுக்கலா மாறும்.” என்று வருத்தமாய் உரைத்தார்.

   அதே நேரம் நட்ராஜ் ஜனநாயக விடியல் கட்சி அலுவலகத்தில் மகள் தோரணையாக அமர்ந்து பெரிய ஸ்கீரினில் ஆராவமுதனின் காணொளியை ரசிக்க, அவளருகே வந்து, “இ..இது உன்னோட வேலையா?” என்று கேட்டார்.

  சுரபி யாருமில்லாத காரணத்தால், “இந்த கேள்வி உங்களுக்கு வந்ததே தப்பு அப்பா.
  ஆனா என்ன செய்ய? உங்க மக, அவளோட குறிக்கோளை தாண்டி, அவ ஆசைப்பட்ட காதலனை கல்யாணம் செய்துட்டானு தப்பா எடுத்துக்கிட்டவர் தானே நீங்க.
   ஏன் இந்த கர்ப்பம் கூட உங்களுக்கு முழு சந்தோஷம் தந்ததா? இல்லையே… மக அவனோட வசியத்தில் மயங்கிட்டான்னு தானே நினைச்சிங்க.

   எனக்கு கல்யாணம் என்றது கானல் நீரா நினைச்சேன். ஏன்னா ஆராவமுதனை தவிர யாரும் என்னை நெருங்குவதா கற்பனை பண்ண முடியாது.
  அந்தளவு அவனை நேசித்தேன். அவனா வந்து பழகும் வாய்ப்பு கிடைக்கவும் அதே நேசத்தை தோண்டி எடுத்தேன். அவனோட உண்மையான காதலும் என்னோட காதலும் தான் எங்களை இணைத்தது.
மத்தபடி இரண்டு பேரோட அரசியல் சதுரங்கம் அந்த நேரம் நாங்க யோசிக்கலை. ஆனா அவன் என்னை வழியனுப்பி வச்சி அரசியலை துவங்கியதும், நான் பதிலுக்கு செய்யாம இருக்க மாட்டேன்னு அவனும் எதிர்பார்த்திருக்க மாட்டான். நீங்களும் எதிர்பார்க்கலை இல்லைப்பா.

  ஆப்ட்ரால் பொண்ணு தானே? ஆராவமுதன் ஆம்பள அவனிடம் மயங்கி, நார்மல் இல்லத்தரசியா போனதா வெதுப்பிட்டிங்க தானே?
 
  தற்காலிக முதல்வரா வந்தது நான் எதிர்பாராத ஒன்னு தான். ஆனா அடுத்த இந்த தேர்தலில் முதல்வரா அவனை வரவிடமாட்டேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போச்சுல. இப்ப நம்புவிங்கன்னு நினைக்கறேன். நான் பொண்ணா பிறந்தாலும் உங்க அரசியலில் நான் தான் வாரிசா நிரந்தர இடம் பிடிப்பேன்னு புரிந்ததா?” என்று கேட்க நட்ராஜனோ கண்ணீர் மழையோடு மகளருகே வந்தார்.

“அங்கயே நில்லுங்க. இனி நமக்குள்ள அப்பா மகள் என்ற உறவு பட்டும்‌படாமலும் இருக்கும். இந்த அரசியல் உங்க பொண்ணை தூர நிறுத்திடுச்சுல்ல? உங்களுக்கு பேவரா நான் ஏதாவது செய்தா தான் உங்க மக. உங்க அரசியல் வாரிசு.
  இல்லைன்னா என்னை ஏற்க பிடிக்காம நகை பணம் கொடுத்து வெட்டி விட பார்த்தவரு தானே நீங்க” என்றதும் “அதில்லை சுரபி. இலக்கியன் என்னை” என்று ஆரம்பித்தவரிடம், இடைவெட்டும்படியாக, “அவராவது பரவாயில்லப்பா…. இதுக்கு முன்னயும் நான் எவ்ளோ பேசினாலும் பொறுத்து போய் தெரிந்த பொண்ணை சீண்டிட்டோம். அதுக்கு தான் பலன் அனுபவிக்கறோம்னு நிதானமா என் பேச்சை ஏற்றுக்கொள்வார்.
   இதோ இப்ப மருமகளா முன்ன நின்றப்பவும், அரசியலை இழுக்கலை. குடும்பத்தையும் அரசியலையும் குழப்பி அன்பை பகிராம உறவை துண்டாக்கிக்கலை.

  நீங்க… என்னை என் குழந்தையை, உதாசினப்படுத்தினிங்க. நான் கர்ப்பமா இருக்கவும் நீங்க சந்தோஷப்பட்டிங்களா? இல்லயே… இதோ இப்ப ஆராவமுதனுக்கு எதிரா வீடியோ எடிட் செய்து போட்டதும் மகள் என்ற பாசம் பொங்குதோ?!” என்றாள்.

   நட்ராஜ் தவறை உணர்ந்தவராய் பேசயியலாமல் நின்றான்.

  சுரபியை பற்றி அறிந்ததால் இனி மன்னிப்பு கேட்கவும் இயலாது.
  ஆம் அவள் தெரியாமல் செய்த தப்பு என்றால் மன்னிப்பாள். இதெல்லாம் தெரிந்த செய்த தப்பு. சுரபியின் நியாயதராசில் மன்னிப்பு கிடையாது.

இதை ஒரு தந்தையாக, அவள் ஆராவமுதனை முன்பு மன்னிக்காமல் வெறுத்த பொழுது அறிந்ததே.

  சுரபி, “நல்லா ரசிச்சிக்கோங்க. ஆராவமுதன் சறுக்கிடுவார் அடுத்த முதல்வர் யார்னு தேர்தல் முடிவு சொல்லும்” என்று நடையிட்டாள்.
  
   சுரபி நடையிட்டது காரை நோக்கியே. எப்படியும் மாலை வரவும் ஆராவமுதனை சந்திக்க வேண்டும். வீட்டில் எரிமலையில் குளித்தவன் போல இருப்பான். அவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டுமோ? ஆனால் அவன் முன்பு செய்ததுக்கு, இந்த பதில் செயல் தான் சரியானதே.’ என்றதில் தெளிவுப்பிறக்க ஆராவமுதனை காண புறப்பட்டாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
 

18 thoughts on “Hello Miss எதிர்கட்சி-29”

  1. Wow Sema twist. But in that video what is there? Eagerly waiting for the next episode sis. Surabhi you will be thre next CM. No doubt.

  2. Surabi apadi enna video ah va post panni iruku ah ava wife ah Amudhan ah accept panni iruka ah but oru politician ah avan seiyuthathuku bathil ku seiyatha ah indha video ah va viral panni iruku ah

  3. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 29)

    ஆனா, எனக்கென்னவோ அவ என்ன செயதிருந்தாலும் அவளை இழக்க அமுதன் சம்மதிக்கவே மாட்டான்னு தோணுது. ஏன்னா, இவனும் அரசியலுக்கு வரமாட்டேன்னு வாக்கு கொடுத்துட்டு அதை மீறினது நிசம் தானே..? ஆனாலும், சுரபி அதை ஏத்துண்டு அவன் கூட வாழலையா….? அதே மாதிரி இவனும் ஃபாலோ பண்ணுவான்னு தோணுது.
    ஏன்னா, சுரபிக்கு அரசியல்ல எவ்வளவு செல்வாக்கு இருக்குது, எத்தனை ஞானம் இருக்குதுன்னு அவனுக்கும் தெரியும் தானே..? தவிர, அவ அவனை விட சீனியர் என்ற முறையில இன்னை வரைக்கும் அவளோட வழிகளைத் தானே பின்பற்றுரான், வழிகாட்டியாகவும் அவளையே நினைக்கிறான். ஸோ… இந்த தடவை சுரபி ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டாளும்
    இவன் பொறிமையா அடுத்த ஐந்தாண்டுகளுக்காக காத்திருப்பதோட மட்டுமின்றி
    தனக்கான பாதையயும் வகுத்துட்டு, அதை ஸ்ட்ராங்காக்க என்ன வழியோ அதையும் செய்வான்னு தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Kalidevi

    POCHI surabi ena video va potu vita ippadi trending pani vitu irukiye crt ah election timing kita nerungum pothu ippadi release panitiye ma amutha ena pana porano but unaku avan kovama irupan therinjum thairiyama vara paru paka great surabi. appa va ponnu mrg pani kittathaium ethukala natraj ponnu pregnant num santhosa padama ipo amuthanuku ethira etho pani iruka therinjathum pesa vararu but athellam venanu thalliye nikura paru surabi thats suberb .

    VERY VERY INTERESTING LY GOING

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *