அத்தியாயம்-5
சேலையை காய்ந்து விட்டதா என்று பால்கனி பக்கம் சென்றவளுக்கு அதை சரியாக போடாததால் ஈரம் இருப்பதை பார்த்து நன்றாக காயப்போட முனைந்தாள்.
வொயிட் ஃபுல்ஹாண்ட் ஷர்ட், டார்க் மெரூன் ஷார்ட்ஸ் அணிந்திருக்க, தன்னை தானே கண்ணாடியில் ரசித்தாள்.
அரசியலில் புடவை உடுத்த வேண்டுமென்று முடிவெடுத்தப்பின், மாடர்ன் உடைகளை அறவே தவிர்த்துவிட்டாள்.
அதுவும் சேலையில் கூட காட்டர்ன் உடை, ப்ளவுஸ் எல்லாம் காலர் வைத்தது அல்லது முக்கால் வாசி கழுத்தை மூடி முதுகு தெரியாத அளவிற்கும், கைகள் ஹாப்ஹெண்ட் வைத்து தைத்திருப்பாள்.
இன்று தன் கல்லூரி நாட்களுக்கு சென்றது போல உடையை ரசித்தாள். அது ஆரவமுதன் உடை என்றது கூடுதலாக பித்தமேறியது.
பழைய காதலை எல்லாம் நினைவுப்படுத்தி மீட்டெடுக்கும் விதமாக கனவுகளில் மூழ்கினாள்.
ஆராவமுதனிடம் காதலை பகிர்ந்த பொழுது பத்தாவது படிக்கும் பெண்.
அந்த வயதில் தன்னை விட மூன்று வயது பெரியவனிடம், அதுவும் கல்லூரியில் அடியெடுத்து வைத்தவனிடம் காதலை பகிர்ந்தது இன்று மடத்தனமாக தோன்றியது. இதே வேறு யாராவது என்றால் காதலை ஏற்பது போல நாடகமாடி, அந்த வயதில் பல கலவிகளை நிகழ்த்திருக்க வாய்ப்புண்டு.
தன்னிடம் சின்ன பெண் படிக்கற வழியை பாரு, நீயெல்லாம் என்னிடம் காதலை சொல்லற? என்று பேசியது பொதுவானதாக அமைந்தால், நான் முதல்வர் பையன் நீயெல்லாம் காதலிக்க அப்ளிக்கேஷன் போடற என்று நகைத்தது தான் அவளுக்குள் காதல் வலியை தந்தது.
அதோடு தந்தைக்கும் இலக்கியனுக்கும் நடந்த சண்டைகள் எல்லாம் பெரிதாக விரிசலிட்டு விட்டது.
ஆராவமுதன் தனக்கு வேண்டாம், தன் மனம் முழுக்க அரசியல் என்று பரவி, இலக்கியனை பழிவாங்க நிறைய நல்லதை செய்தாள்.
மக்கள் மனதில் ஓரளவு நட்ராஜனை விட அதிகளவு உள்ளே புகுந்துவிட்டாள். இலக்கியனை சாய்க்க ஏதேனும் ஒரு பகடை இருந்தால் கூட அடுத்த தேர்தலில் வெற்றி சுரபிக்கே.
ஆராவமுதனை வைத்து தான் அந்த இலக்கியனை சாய்க்க முடியுமென விதி எழுதிவிட்டதா? என்று யோசித்தாள்.
ஆனால் இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்க தயாராக இருப்பது போல அல்லவா ஆராவமுதன் திகழ்கின்றான்.
முன்பு போல ஏளனம் உதாசினம் இல்லை, கண்ணில் தன்னை காணும் ஆர்வம் இதை ஆராவமுதனிடம் சுரபி எதிர்பார்க்கவேயில்லை.
தன் உடையை மொத்தமாய் மாற்றியது அவன். பிறகு ஆர்வம் வராதா? வழவழப்பான கால்கள், முன்னழகு வேறு, மாடர்ன் உடையில் நடிகைகள் தோற்றுப்போகும் விதமாக தன் மேனியிருக்க, ஆராவமுதன் ஆர்வம் காட்டத்தான் செய்வான்.
லேசான அதிருப்தி உருவானது. காதல் இல்லாத காமம் கண்ணில், என்று முகவாட்டத்துடன் சிகையை அள்ளி முடித்தாள்.
சேலை காய்ந்துவிட்டால் அணிந்து கொண்டு நடையை கட்ட வேண்டும். மின்சாரத்தை சோதித்து பார்ப்பது எல்லாம் விஷப்பரிட்சையே.
ஆராவமுதன் தன் உடையை மாற்றியதற்கு கோபப்படாமல், இப்பொழுது வரை அவன் கூறிய, காரணத்தால் இயல்பாக எடுத்துக் கொள்வது போல தோன்றினாலும் இதெல்லாம் வீரியமிக்க காரியமே.
தன்னை போட்டோ எடுத்து வைத்திருந்தால் கூட தெரியாது, என்று நினைக்கும் பொழுதே, பகீரென்றது.
வேக வேகமாய் ஆராவமுதனிடம், “உ..உன் போன் எங்க?” என்று கேட்க, ஷார்ட்ஸ் பெக்கெட்டில் கைவைக்க, வெடுக்கென்று அவன் கையை தட்டிவிட்டு உரிமையாக அவன் பேக்கெட்டில் கைவிட்டு போனை எடுத்து, “பாஸ்வோர்ட் போட்டு ரிலீஸ் பண்ணி தா” என்று அவசரம் காட்டினாள்.
அவள் எதற்கு இத்தனை அவசரம் காட்டி தன் போனை இம்சை தருகின்றாளென்று அறிந்தாலும் பாஸ்வோர்ட் போட்டு திறந்து தந்தான்.
அவசரமாய் கேலரிக்கு சென்று புகைப்படத்தை பார்த்தாள்.
தனித்து விதவிதமாக எடுத்த புகைப்படம் நிறைய இருந்தது.
ஒவ்வொன்றாய் காணவும், எதற்கு ஓபன் செய்தால் என்று கூட மறந்து அவன் புகைப்படத்தினுள் நுழைந்தாள்.
சிலது ஒர்க்கவுட் செய்த இடத்தில் எடுத்திருக்க படிக்கட்டு தேகம் அவளை வாய் பிளக்க வைத்தது.
இதில் அங்கங்கே மாடலை போல நின்றிருந்தவனை கண்டு, விழிவிரிய, தரிசிக்க, “ஓய்… உன் போட்டோ ஏதாவது தப்பா எடுத்திருக்கேனானு செக் பண்ணு. அதைவிட்டு என்னுடைய போட்டோஸை சைட் அடிக்கற?” என்று கேட்டு காதல் அம்பை வீசினான்.
“ஓ… நான் எதுக்கா பார்க்கறேன்னு தெரியுதா? அப்ப ஏதாவது டெலீட் பண்ணிட்டியா?” என்று குறுக்கு விசாரணையை துவங்கினாள்.
ஆராவமுதனோ ”வர்ற கோபத்துக்கு செவுள்லயே விட தோணுது. என்ன பண்ணறது எதிர்கட்சி தலைவரோட பொண்ணு, கூடவே இளைஞர் அணி தலைவி வேற, அதை விட முக்கியமான போஸ்டிங்… என்னுடைய சுரபி டி நீ.” என்று உரிமைக் கொண்டாட முடியாத இடத்தில் நின்றவனாக சலிப்புடன் மூச்சுவிட்டான்.
அவன் உரைத்த ‘என்னுடைய சுரபி டி நீ’ என்றதை கேட்டும் போனில் அவளுக்கு இவன் உடைமாற்றிய நேரம் ஏதேனும் போட்டோவை எடுத்திருப்பானென தேடினாள்.
“ஏய் லூசு பெண்ணே… போட்டோனு ஒன்னு எடுத்தா தான்டி இருக்கும். இல்லாத போட்டோவை எவ்வளோ நேரம் தேடுவ? ஒரு வேளை ஹீரோ, கேட்வாக் மாடலிங் மாதிரி இருக்கேனு என் போட்டோவை தான் ரசிக்கறியா?” என்று போனை பிடுங்காமல் கேட்டான்.
“நீ ஏதாவது அனுப்பிட்டு போன்ல டெலீட் பண்ணிருப்ப?” என்று பெரும் பழியை சாதாரணமாய் தூக்கி போட்டாள்.
ஆராவமுதன் அவளை மேலும் கீழும் பார்த்து, அவளருகே வந்து, அவளது கையிலிருந்த தனது போனில் இருவரும் சேர்ந்து நின்றபடி செல்ஃபி எடுத்தான்.
”இ..இப்ப.. எதுக்கு இப்படி போட்டோ எடுத்த?” என்று அவன் நெருக்கத்தில் திணறினாள்.
“உன் போட்டோவை தான் என் போன்ல தேடறியே. உன் நம்பிக்கையை ஏன் பாழ்பண்ணுவானே… இப்ப இருக்கு பாரு. உன் போட்டோ என் மொபைல்ல” என்றவன், “போட்டோ எல்லாம் இந்த போன்ல எடுக்கலை” என்றதும் வேகமாய் அதானே பார்த்தேன்” என்று அவசரமாய் அவனை தள்ளி விட்டு வீட்டில் வேறு ஏதாவது ஹேண்ட் கேமிரா உள்ளதா என்று தேடினாள்.
ஆராவமுதன் நகைக்க, அவளோ வீடு முழுக்க கப்போர்டை ஆராய்ந்தாள்.
அங்கிருந்த மூன்று அறையிலும் கப்போர்ட் மெத்தை சில அலங்கார பொருட்கள் என்றிருக்க, அதில் எல்லாம் தேட, எங்கும் எந்த கேமிரா இருப்பதாக இல்லை என்று புரிய, கூடுதலாக லேசாக சோர்வு அடைந்தவளின் தாடையை பற்றி அவன் விழிகளை காண வைத்து, “இந்த ரூம்ல, லைட் அணைச்சிட்டு இருட்ல மாத்தினேன். லேசா இந்த கண்ணுக்குள்ள அறையும் குறையுமா உன் அங்கம் பதிவாகியிருக்கும். இந்த கண்ணை வேண்டும்னா நோண்டி எடுத்துடு” என்று அவள் கண்ணில் ஊடுருவி பேசினான்.
முன்னாள் காதலன் என்று ஆராவமுதனை சொல்லிட முடியாது. அவன் இருந்த இதயத்தில் வேறு நபர் இன்னமும் குடிவரவில்லை. சொல்லப்போனால் அவனை இன்னமும் இதயத்திலிருந்து வெளியேற்றவில்லை சுரபி.
அதன் காரணமாக அவனது நெருக்கம், பேச்சு, அவனோடு இந்த அறையில் அவளுக்குள் ரசவாதம் நிகழ ஆரம்பித்தது.
மெலிதான பூகம்பம் அவன் நெருக்கத்தால் அடிக்கடி உண்டானது.
“நான் போறேன்” என்று இங்கிருந்தால் காதல் வெளிப்பட்டு, மீண்டும் அவனை விரும்புவதை உரைத்திடுவோமோ என்று அஞ்சினாள்.
அவள் அஞ்சியதற்கு சற்றும் குறையாமல் ஆராவமுதன், “முன்ன விரும்பினேன்னு என் முன்ன பயந்து பயந்து சொன்ன. நான் இக்னோர் பண்ணிட்டேன். இப்ப நீ தைரியசாலியா நிறைய இடத்துல பேசற, ஆனா என் முன்ன அதே காதல் இருப்பதா சொல்ல தயங்கற, நீ தயங்கலாம்… மறுபடியும் உன் காதல் நிராகரிக்கப்பட்டு அசிங்கப்படுமோனு, எனக்கு அசிங்கப்படறதுல எந்த அவமானமும் இல்லை.” என்றவன் சற்று மௌனம் காத்து, இரு நொடிகள் இஞைவெளியிட்டு, “சுரபி… நான் உன்னை விரும்பறேன்.” என்றான்.
இப்படி ஆராவமுதன் கைக்குள் நெருக்கமாய் காதலை கேட்டதும், பேச்சரசி சுரபிக்கு, கண்ணில் அருவி கொட்டியது.
”கண் முன்ன செக்ஸியா நிற்கறதால் வந்த காதலா?” என்று கேட்க, நொடியும் தாமதிக்காமல், “மேபீ ஆனா.” என்றவனை தள்ளி விட்டு பால்கனி செல்ல முயன்றாள். உலர வைத்த உடையை அணிந்து புறப்படுவதற்கு ஆயத்தமாக.
ஆனால் ஆராவமுதன் விட்டால் தானே, “முழுசா சொல்ல விடு” என்று பிடித்து நிறுத்த, “எதுவும் சொல்ல தேவையில்லை. நான் எதுவும் கேட்க தயாராயில்லை.” என்று காதை மூடினாள்.
ஆராவமுதன், இடுப்பில் கையை ஊன்றி அவளை பார்த்தவன், காதை இறுக மூடி இமையும் இறுக மூடி தான் பேச வந்ததை தடுக்கும் விதமாக நின்றவளின் கன்னம் பற்றி இதழை நெருங்கி முத்தமிட்டான்.
அடுத்த நொடி விசுக்கென்று இமை படபடவென அடித்து திறந்து அவனை கண்டவள், இரு கையையும் வைத்து அவனை தள்ள முயன்றாள்.
ஆராவமுதனை இம்மியும் பின்னடையாமல், காரியத்தில் குறியாக இருந்தான்.
ஆராவமுதனை தள்ள முடியாத காரணத்தால் அடுத்து அடிக்க ஆரம்பித்தாள். அடியெல்லாம் தடுக்காமல் பெற்றுக்கொண்டான். மலரால் அடித்தால் வலிக்குமா? அப்படி தான் அவன் நினைப்பு.
அடுத்து சிகைக்குள் கையை நுழைத்து அவளது இடையை வளைத்து நின்றதும், அவனை தள்ளி விடமுடியாத சோர்விலும் முத்தம் அவளுக்குள் விதைவிட்டு பழைய சுரபியை வெளிவர வைத்ததோ, அவன் அடைமழை முத்தத்தினை விரும்பி ஏற்றாள்.
நிமிடங்கள் மணியாக, இதழை விடுவித்து, ”அடுத்த லெவலுக்கு போனாலும், நீ என்னை தடுக்க மாட்ட, தடுத்தாலும், உன்னை அடையணும்னு முடிவெடுத்தா என்னை தடுக்கவும் உன்னால முடியாது.
அதுக்காக தனியா இருக்கற பொண்ணிடம் வரம்பு மீறுவது ஆம்பளை தனமில்லை.
அதோட நான் நியாயமான வளர்ச்சியில் முன்னுக்கு வந்த முதலமைச்சர் இலக்கியனோட பையன் ஆராவமுதன்.
எதிர்கட்சி அமைச்சர் நட்ராஜனோட மகள் இளைஞர் அணி தலைவியோட காதல் என்று கிசுகிசுக்கப்பட்டா சந்தோஷப்படுவேனே தவிர, வேற எந்த செய்தியையும் கசிய விடமாட்டேன்.
என் அப்பாவோட அரசியலுக்கு எந்த இழுக்கையும் வரவைக்க மாட்டேன். வரவும் விடமாட்டேன்” என்றுரைத்தான்.
சுரபி தன் குட்டு கண்டறிந்து விட்டானா? என்று முழித்தாள். அடுத்த நிமிடமே நாம எந்த திட்டமும் இப்பவரை செய்யலையே. பிறகு ஏன் முழிக்கணும்?
இவனோட எந்த உறவும் வேண்டாம், பகையும் வேண்டாம். இங்கிருந்து கிளம்பறது நல்லது என்று பால்கனியில் இருந்த தன் உடைகளை அள்ளி எடுத்தாள்.
அங்கிருந்த உடைமாற்றும் இடத்தில் திரைச்சீலையை இழுத்து விட்டு மடமடவென உடையை மாற்றினாள்.
அவள் உடைமாற்றுவதை அவன் தடுக்கவில்லை. பின்னே தன் ஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்திருந்தாலும், தன்னை கவரும் விதமாக அவள் அழகு இருக்க, மனதோடு சலனப்பட்டு நேரத்தை நகர்த்த இயலாது, அவள் உடை மாற்றவும் அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
ஆம் வரிவடிவாக அவளது நிழல் திரைச்சீலை உபயத்தில் தெரிந்தது. சேலைக்கு ப்ளீட்ஸ் வைத்து முடித்திருந்தாள்.
அவள் அழகாய் சேலை கட்டி, “சேப்டி பின் எங்க?” என்றாள்.
தன் ஷார்ட்ஸ் பேண்டிலிருந்து எடுத்து தந்தான்.
அதை குத்தி முடித்தவள் ஆராவமுதனை காணாமல், “நான் விமான நிலையத்துக்கோ இல்லை, இங்கிருக்கற கட்சி ஆபிஸுக்கோ, போகறதுக்கு, எனக்கு ஒரு கார் மட்டும் அரேஞ் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்.
“என்ன விளையாடறியா? ஏன் போற? இங்க இருப்பதா தானே சொன்ன. யார் கிட்னாப் பண்ண முயன்றதை தெரிந்துக்கிட்டு போறதா சொன்ன” என்றான்.
“நான் இங்க இருக்க விரும்பலை” என்றாள். நடந்து நடந்து பால்கனி பக்கம் வந்து, இயற்கையை பார்த்தபடி “ஏன் நான் கிஸ் பண்ணியதால இங்க இருக்க கூடாதுனு முடிவெடுத்திட்டியா? சுரபி அடுத்த எல்லைக்குள் போக மாட்டேன். இட்ஸ் எ பிராமிஸ்” என்றான்.
“திரும்ப நீ முத்தமிட்டா நான் என் கண்ட்ரோலை இழந்துடுவேன். இப்ப இருக்கற சுரபியை நீ இளக வைக்கற. எனக்கு அது பிடிக்கலை” என்றாள்.
“ஸ்டில் யூ லவ் மீ கரெக்டா?” என்றான்.
சுரபி கண்கள் அதிர்ச்சியடைந்து, விரிந்து “அமுதா” என்று அவன் புறம் திரும்ப, அவனுமே அவளது பேரதிர்ச்சிக்கு காரணம் அறியும் பொருட்டு அவள் வெறித்த திக்கற்ற திசையை கண்டவன், “சுரபி” என்று அவள் நீட்டிய கையை பற்றினான்.
-தொடரும்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍😍
Enna sollalam la engalum nega pattuku surabi amudha nu per ah mattum sollitu poita nanga eppudi therinchikirathu
Super. Intresting
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 5)
இவங்க ரெண்டு பேருக்குள்ள இப்ப என்ன பிரச்சினைன்னு
காதலை தவிர்க்கப் பார்க்கிறாங்க….? ஒருவேளை, அரசியல்ல எதிரெதிர் அணியோட தலைவர்களோட பசங்க என்கிறதாலயா…? இல்லை, சின்ன வயசுல தன்னை இக்னோர் பண்ண கோபமா..? இல்லை, அவனோட அதிகப்படியான அலட்சியப் பேச்சா…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Ena nadanthathu waiting for nxt epi
❤️❤️❤️
INTERESTING………………….. WAITING FOR THE NEXT…………………
Superb 👌👍💯 Interesting 💥🥰😍🎉
very interesting . intha situation la nithanama iruka mudiyathu than athuvum love panavanaiye pathu avan kan la kadhala kamikirapo mudiuma ena . atha antha nimishatha eduthukittan ena tha dress mathi vitalum athula oru kanniyam vachiirunthan
Interesting😍😍