அத்தியாயம்-13
“என்ன சார் வேண்டும் உங்களுக்கெல்லாம்? அரசியல்வாதி சினிமாக்காரன், தொழிலதிபர், எவனாவது மீடியால செய்தில பரபரப்பா பேசப்படணும். அதை வச்சி ஒரு இரண்டு மாசம் மூனு மாசம் உங்க டிஆர்பி ஏத்தி, கல்லா கட்டுவிங்க. அப்படி தானே?
கேவலமா இல்லை… செலிபிரிட்டிக்கும் பெர்ஸனல் லைப் இருக்கு சார். ஒவ்வொன்னும் உங்களுக்கு அனவுன்ஸ் பண்ணிட்டு உட்காரணும்னு அவசியமில்லை.” என்று சுரபி கல்யாணத்திற்கு சம்மதிக்காத கோபத்தை இவர்களிடம் காட்டினான்.
“சார் நீங்க ஒரு பொறுப்பான பிரஜை என்பதை மறந்துட்டு பேசறிங்க. மீடியா ஒவ்வொரு தகவலையும் சேகரிக்கறது தான் அதோட வேலை.
சோஷியல் மீடியால உங்க அந்தரங்கம் வரக்கூடாதுன்னா நீங்க தான் போட்டோ லீக் ஆகாம பார்த்துக்கணும்.
லீக் ஆனப்பிறகு மீடியா குடைய தான் செய்வோம் சார். அதுவும் நீங்க முதலமைச்சர் மகன். உங்க கூடயிருந்தது எதிர்கட்சி தலைவரோட பொண்ணு, இளைஞர் அணி தலைவி சுரபி. அதனால் எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க.” என்று இளைஞன் ஒருவன் துடுக்காய் வந்து கேட்டான்.
“இப்ப என்ன தெரியணும்?” என்று இடையில் கைவைத்து கேட்டான்.
“உங்களுக்கும் சுரபிக்கும் என்ன உறவு சார்?” என்று கேட்டதில், மொத்த மீடியாவையும் பார்வையிட, அது நேரடி காணொளியாக ஆராவமுதனை உள்வாங்கியது.
நேரடி ஒளிபரப்பு மூலமாக, சுரபி வீட்டிலும் ஆராவமுதன் பதிலுக்கு காத்திருக்க, சுரபியுமே இமை கொட்டாமல் கவனித்தாள்.
“முதலமைச்சர் இலக்கியன் அதாவது என் அப்பா, எதிர்கட்சி தலைவர் நட்ராஜு பால்ய நண்பர்கள், இது தமிழகத்துக்கு தெரிந்திருக்கும். இளைஜர் அணி தலைவி சுரபி என்னோட சின்ன வயசுல இருந்தே பழகனவங்க. எங்கப்பா தான் அவளுக்கு பெயர் சூட்டியதே. அது தெரியுமா?
சின்ன வயசுலயே நானும் சுரபியும் நிறைய போட்டோஸ் இதே போல சேர்ந்து எடுத்திருக்கோம். சோஷியல் மீடியால அப்டேட் செய்யவா?
சொல்லப்போனா அந்த வயதில் சொல்லப்படாத காதல் எங்களுக்கு இருந்தது.
ரீசண்ட் டேஸ்ல நேர்ல சந்திக்கற வாய்ப்பு அமைந்தது. எங்க எதிர்காலத்தை பத்தி நிறைய பேச வேண்டியது இருந்தது. அப்ப பேசப்பட்ட பொழுது ஜஸ்ட் க்ளிக் செய்து எடுத்த புகைப்படம் அது” என்று முடிக்கும் முன், “குட்டிய ஷார்ட்ஸ்… செக்ஸியா வெள்ளை சட்டை அணிந்து தான் பேசுவாங்களா சார்” என்ற நகைப்பொலி கேட்டது.
ஆராவமுதனோ சளைக்காமல் “இந்த உடை தான், இந்தயிந்த நேரத்துல பெண்கள் உடுத்தணும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா? என்னோட பேசவந்த பொழுது சுரபி ஜஸ்ட் என்னுடைய பிரெண்ட். அப்படியிருக்க அவ எந்த உடை அணிந்தா உங்களுக்கு என்ன? நாளைக்கு எனக்கும் சுரபிக்கும் கல்யாணமாப்பின்ன இதே மாதிரி ஒரு போட்டோ எடுத்து போட்டா கூட ஏன் போட்டிங்க எதுக்கு போட்டிங்கன்னு பெட்ரூமுக்கு வந்துடுவிங்களா?” என்று ஆக்ரோசமாக கத்தினான்.
“சார் அப்ப கல்யாணம் செய்ய போறிங்களா?” என்று அடுத்த வினாவை எடுக்கவும், “ஷட் அப்… அரசியல்வாதின்னா… தொகுதிக்கு என்ன செய்யலை, ஏன் செய்யலை, மக்களுக்கு என்ன செய்தன்னு கேளுங்க. அதை தாண்டி பெர்ஸனல எந்த டிரஸ் போடணும், என்ன சாப்பிடணும், யாரோட பழகணும்னு கேட்க கூடாது.
நானும் சுரபியும் கல்யாணம் செய்வதை பத்தி நாங்க இன்னும் முடிவெடுக்கலை. பட் அவளை விரும்பறேன். ஐ லவ் சுரபி” என்றான். சுரபி கண்ணில் முனுக்கென்ற கண்ணீர் துளிகள் கன்னத்தை நிறைத்தது.
பல்லவி அவள் தோளைத்தீண்ட, நட்ராஜனோ, மகளை வாஞ்சையாக பார்த்தார்.
”சார்… கல்யாணம் எப்ப?” என்று கேட்டதும், “இன்னும் எங்கப்பாவிடம் கூட நான் பேசலை சார். சுரபியுமே அவ பேரண்ட்ஸை கன்வின்ஸ் செய்ய வேண்டி இருக்கலாம். எல்லா லவுக்கும் சாதி, மதம் பணம் அதுயிதுனு குறுக்கே நிற்கும். எங்களுக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சினு இருக்கு… சம்மதம் வாங்க தலைகீழா தண்ணி குடிக்கணும். முதல்ல சாதாரண சந்திப்பு வச்சி கல்யாணம் வரை நீங்களா முடிவெடுக்காதிங்க. எனக்கு இன்னும் யோசிக்க நிறைய இருக்கு. இதுல பெர்ஸனலை கூட முதல்ல உங்களுக்கு தான் சொல்ல வேண்டியதா இருக்கு. இப்ப சந்தோஷமா… நான் எங்கப்பாவிடம் பேசலாமா? இல்லை… முதலமைச்சர் பையன் எதிர்கட்சி பொண்ணை காதலிக்க கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் வச்சி பிரிக்க பார்ப்பிங்களா?” என்று பேசி முடிக்க அவனது திண்ம தோள்கள் ஆக்ரோஷத்தில் ஏறியிறங்க, அடுத்த கேள்வி கேட்க தயங்கினார்கள்.
பத்திரிக்கை துறையில் இருந்துக்கொண்டு தயக்கம் இருக்குமா?
“சார் ஒன் மோர் குவெஸ்டின். இது உங்க பெர்ஸனல் இல்லை.” என்றதும் “கேளுங்க” என்று கையிலிருந்த பிரேஸ்லேட்டை ஒதுக்கி வைத்தான்.
“நிலசரிவில் உதவி செய்திங்க, நீங்க அரசியலில் வருவிங்களா? நாங்க அடுத்த முதல்வரா உங்களை எதிர்பார்க்கலாமா?” என்றதும் ஆராவமுதன் கேமிரா பக்கம் முகத்தை திருப்பினான்.
டிவியில் பார்த்துக்கொண்டிருந்த சுரபியோ பதில் அறிய ஆவலாக, “என் வாயிலருந்து பெர்ஸனலை பிடுங்கிட்டிங்கள்ல, இந்த குவெஸ்டினுக்கு இப்ப ஆன்சர் பண்ண முடியாது. உங்க யூகத்துக்கு நீங்க இஸ்டத்துக்கு எழுதிக்கோங்க. ஆனா உதவி செய்தது மனிதாபிமான அடிப்படையில்.. தேங்க்யூ” என்று வீட்டுக்குள் செல்ல, சிதம்பரமோ ஆராவமுதன் பேசியதில் ஆடிப்போயிருந்தார்.
ஆராவமுதன் சுரபியை விரும்புவது அவருக்கு ஆச்சரியமே. முதல்வர் இலக்கியனை இஷ்டத்துக்கு மேடையில் விளாசி தள்ளுவாளே. ஊரில் கூட ஆராவமுதனிடம் சுரபியை திட்டியிருந்தான்.
“என்ன சார் கடைசியா கேட்டதுக்கு பதில் சொல்லாம போறார்” என்று நிருபர் ஒருவர் கேட்க, “ஏம்பா அவர் நின்னு இவ்ளோ பதில் கொடுத்தது போதாதா? அரசியலுக்கு வந்தா உங்களுக்கு தெரியாம செய்வாரா. டீ காபி கொடுப்பாங்க குடிச்சிட்டு உங்களால் என்னலாம் கொளுத்தி போட முடியுமோ பண்ணுங்க” என்று அனுப்ப கூட்டம் கலைந்தது.
அதோடு, நிருபர் ஏதோ பேசி முடிக்கும் வீடியோ தொலைக்காட்சியில் சென்றது.
சுரபிக்கு தன்னை காதலிப்பதை ஊரறிய ஒப்புக்கொண்டான். அரசியலை உதறுவானா? அதை மட்டும் ஏன் கூறவில்லை.
காதலிப்பதை உரைத்தான் திருமணம் செய்வதாக பேச்சு இன்னமும் முடிவாகவில்லை. அரசியலில் குதிக்காமல் இருந்தால் தானே திருமணம். இப்பொழுது மீடியா, செய்தியாளர்கள், கட்சி ஆட்களுக்கு நான் பதில் சொல்லணும்.
“என்னடி அந்த தம்பி என்னயென்னவோ சொல்லறார்.” என்று பல்லவி உலுக்க, ”அம்மா… நான் விரும்பியது உங்களுக்கு தான் தெரியும்ல. அந்த வயசுல என்னடி காதல் கத்திரிக்காய்னு என்னை அடி வெளுத்திங்க.
இப்ப அமுதன் என்னை விரும்பறதா சொல்லறார். அதுக்கு நான் என்ன செய்யறது.” என்றாள்.
“இப்ப நீ விரும்பாம தான் அவரோட குட்டி ஷார்ட்ஸ் போட்டுபக்கத்துல நின்னியா?” என்றதும், தந்தையிருக்கும் திசையை பார்க்க திரணியின்றி தவித்தாள்.
“அப்பாவா நான் என்னம்மா செய்யணும்? கட்சி ஆட்களிடம் என்ன சொல்லறது?” என்று கேட்டார். சுரபிக்கு கட்சி இருபிரிவாக பிரியும். ஏற்கனவே நிவாஸால் இரண்டு விதமாக மாறியது. தற்போது மூன்றாக பிரிவுற்றாலும் ஆச்சரியமில்லை. அவளது அரசியல் அறிவு அதை யூகித்து விட்டது.
ஆனால் ஆராவமுதன் கட்சியில் காலடியே எடுத்து வைக்காமலா தன்னை மணக்க சம்மதித்தால் அவனுக்காக தான் ஒரடி எடுத்து வைப்பதில் தவறில்லை.
“மீடியாவில் தானேப்பா அமுதன் சொன்னார். நேர்ல வந்தா பார்க்கலாம். அதுவரை திருமணம் உறுதியில்லாதது” என்று கூறினாள்.
நட்ராஜ் ஆமோதிப்பாய் தலையசைத்து, “சரிம்மா நாளைக்கு பத்து மணிக்கு கட்சி கூட்டம் கூட்டுவோம். அப்ப உன் முடிவை, நீ தயங்காம சொல்லு. கட்சி தலைவரா, உன் அப்பாவா எந்த முடிவுக்கும் நான் குறுக்க நிற்க மாட்டேன். ஏன்னா… எனக்கு நீ தான் முக்கியம்” என்று கூற தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள்.
“உங்களை தமிழ்நாட்டு தலைவரா மாற்றாம நான் ஓயமாட்டேன்ப்பா. இலக்கியனோட போட்ட சபதத்தை நான் விளையாட்டா நினைக்கலை. இதுக்கு நடுவுல ஆராவமுதனே வந்தாலும் நான் விட்டுத்தர மாட்டேன்” என்று ஏழு வருடத்திற்கு முன் போட்ட சபதத்தை போலவே இன்றும் அழுத்தமாய் கூறியவளை திகைப்பாக பார்த்தார்.
சுரபிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆராவமுதன் கல்லூரியில் முதல் வருடம் படித்த காலமது. இலக்கியனும் நட்ராஜனும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதால் உண்டான பழக்கத்தால் நட்ராஜ் சுரபி இருவரும், அடிக்கடி இலக்கியன் வீட்டுக்கு வந்து செல்வார்கள். சுரபி ஆராவமுதனை காணவே அழகாக வருவாள்.
அப்பொழுது இலக்கியனும் நட்ராஜனும் கொள்கைகளில் ஒன்றாக இணைந்ததால் ஒரே கட்சியில் இருந்தனர்.
அன்று கல்லூரிக்கு சென்று விடுமுறைக்கு வந்த ஆராவமுதனை காண வந்தார் நட்ராஜ். கூடவே பல்லவி செய்து கொடுத்த பலகாரங்கள் அள்ளிக்கொண்டு சுரபி துணைக்கு வந்தாள்.
அன்று தான் தந்தையர்களின் நட்பை வைத்து சிறுமியான அவள் காதலிப்பதாக ஆராவமுதனிடம் உரைத்தது. ஆராவமுதன் மறுத்ததும் இல்லாமல், தந்தையன் இலக்கியனிடமும் நட்ராஜனுடனும், அதனை போட்டு கொடுத்துவிட்டான்.
“அங்கிள் உங்க பொண்ணு என்னிடம் சொன்னது போல ஸ்கூல்ல யாரிடமாவது சொல்லி வைக்க போறா. அப்பறம் ப்ரின்சிபால் வரை போகும்” என்று சிரித்தான்.
இலக்கியன் நட்ராஜனிடம் “சின்னப்பிள்ளை தெரியாம பேசியிருப்பா. அதையெல்லாம் பெருசா எடுத்துக்காத. பெரியவளானா நானே மருமகளாக எங்க வீட்டுக்கு அழைச்சிக்கறேன்” என்று தான் தெரிவித்தார்.
நட்ராஜுக்கு நண்பன் தவறாக எடுத்துக்கவில்லை என்றதிலேயே சற்று நிம்மதி. ஆனால் வீட்டில் பல்லவியிடம் தெரிவித்ததும் பல்லவி அடி வெளுத்துவிட்டார்.
அதன் பின் ஆராவமுதன் பக்கம் மூச்சுவிடவில்லை.
இலக்கியன் வீட்டுக்கும் செல்லவில்லை. இப்படியாக இரண்டு வருடம் செல்ல, மூன்று முறை நிலசரிவு ஏற்பட்ட கெஸ்ட் ஹவுஸிற்கு வந்தாள்.
அதன்பின் ஒரு நாள் கட்சியில் இலக்கியனால் சில அதிருப்தியான செயல்கள் உண்டாக, இரண்டு அணிகளாக மாறியது. அந்த நேரம் நட்ராஜ் தன் கருத்தை முன் மொழிந்த நேரம், வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நொடி இலக்கியனுக்கு தன்னிடம் யார் கருத்து சொன்னாலும் கண்மூடித்தனமாக வார்த்தையை வீசினார்.
‘இந்த கட்சி நான் யார் இல்லையென்றாலும் தானாக தனக்காக வெற்றி வாகையை சூடும்.’ என்று. அதில் சிலர் வெளியேற, நட்ராஜ் முடிந்தளவு நண்பனுடன் துணையிருந்தார்.
ஆனால் அன்று கட்சி கூட்டத்தில் மதுவின் வாசம் அதிகமாக, வாக்குவாதம் நடைப்பெறும் சமயம், “எனக்கு பிறகு அரசியல் வாரிசா ஆராவமுதன் இருக்கான். உனக்கு யார் இருக்கா நட்ராஜ்.
உன்னை விட எனக்கு தான் அரசியலோட வளைவு நெளிவு தெரியும். முதல்ல உன் பொண்ணை ஒழுங்கா வளர்க்க பாரு. பெத்த பொண்ணையே ஒழுங்கா வளர்க்க தெரியாது. நீயெல்லாம் கட்சியை வழிநடத்த அட்வைஸ் பண்ணற” என்று கேலி செய்ய நட்ராஜுக்கு அங்கிருந்த வேலைக்காரர்கள் முன்னிலையிலும் போதை ஆசாமிகள் முன்னிலையிலும் அவமானமாக போக, இலக்கியனை நண்பன் என்ற பார்வையிலிருந்து காணாது சுரபியின் தந்தை என்ற இடத்திலிருந்து அவரும் பேசினார்.
அப்பொழுது ‘என்னையே எதிர்த்து பேசறியா? வெளியே போடா” என்று தள்ள, நட்ராஜ் அந்த ஆவேசத்தில் வெளியே வந்தார். வீட்டுக்கு வந்ததும் பல்லவியிடம் அதை கூறி வருத்தப்பட, சுரபி தந்தை கண்ணீரை துடைத்துவிட்டு, இந்த ஐந்து வருஷம் இலக்கியன் முதல்வரா இருக்கலாம். அடுத்த தேர்தல்ல நம்ம தான்பா ஜெயிப்போம். நம்ம கட்சிக்கு புது பெயரிடுங்க. அரசியல்ல வாரிசு இல்லைன்னை உங்களை பார்த்து சொன்ன இலக்கியனுக்கு பதிலடியா, நான் அரசியல் வாரிசா மாறி காட்டறேன்” என்று சபதமிட்டாள்.
ஏதோ தன் கண்ணீரை துடைக்க விளையாட்டாய் பேசியதாக தான் நட்ராஜ் நினைத்தார்.
ஆனால் சுரபி அதற்கான படிப்பில் முனைப்பாக தன்னை பொருத்திக் கொண்டு பேச்சிலும் செயலிலும் தைரியத்தை வரவழைத்து துணிச்சலாக, இலக்கியனை மேடையில் விளாசுவாள்.
இலக்கியனுக்கு தன் தவறு கொஞ்ச காலத்திலேயே புரிந்தாலும் நட்ராஜிடம் மன்னிப்பு கேட்கவோ, தானாக பேசவோ கௌரவம் தடுத்தது.
ஆராவமுதன் கல்லூரி படிக்க வெளிநாட்டுக்கு சென்று வந்த காலத்தில் சுரபி இங்கே தந்தைக்கு மந்திரியாக அரசியல் வாரிசாக மாறினாள்.
மேற்படிப்பு முடிந்து வந்த ஆராவமுதனுக்கு சுரபியின் தோற்றம் நடை உடை பாவணை என்று வெகுவாக ஈர்த்தது. ஆனால் தன்னிடம் காதலை சொல்லி கேலிக்கு ஆளான பெண்ணாக அவளை காணவும் முடியவில்லை.
தானாக அவளை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் பார்க்கலாமென்ற மிதப்பில் இருக்க, தனது சொந்த ஊரில் கெஸ்ட்அவுஸில், தங்க வந்த நாளில் மாநாட்டை ஒரு மாதம் முன் பேச போவதாக அறிவித்ததும் ஆராவமுதன் கண்ணில்பட்டது.
அப்படி தான் சந்திப்பு அமைந்தது. ஆனால் சுரபியை காப்பாற்றி உடைமாற்றி உரிமை கொள்வோமென ஆராவமுதனும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் உரிமையாக தான் அனைத்தும் செய்தான்.
அதே போல அவனிடம் வெட்கமின்றி அவனுடையில் நின்ற சுரபிக்கு இதெல்லாம் வெளிநாட்டில் சாதாரணம், ஆராவமுதனுக்கு பெரிய விஷயமில்லை. அதோடு தன் உடை தான் ஈரத்தில் உள்ளதே. ஆனால் அவர்களே அறியாதது, இருவரும் தனிமையாக காட்டில் மாட்டிய தருணம் குளிரில், ஒருவருக்கொருவர் போர்வையாக மாறியதே.
ஈருடல் ஓருயிர் என்றான போதும் அங்கே அவர்களுக்குள் நடந்த சம்பவத்தை பற்றி அலசாமல்,அவரவர் இருப்பிடம் செல்வதில் ஆர்வமாக இருப்பது போல தங்களையே ஏமாற்றி கொண்டார்கள்.
நிலசரிவு நடந்த இடத்தில் உதவியது எல்லாம் மனமார்ந்த சமூக சேவையாக இருந்தாலும், அரசியலில் நுழைய துருப்பு சீட்டாக தான் ஆராவமுதன் மாற்றிட எண்ணியது. அந்த எண்ணத்திற்கு தான் சுரபி நிறுத்தற்குறியீட்டை போட்டது.
ஆராவமுதன் அரசியலுக்கு வருவானா? தொடர் புள்ளி வைத்து நீள்வானா?
-தொடரும்.
Super😍 interesting
Story padikka padikka romba aarvama irukku sis…moving very excellent…🤝👌👌👌👌❤️❤️💕
very interesting epi iniku . amuthan oru ? vachitu poitane ippadi personal pathi taknu sollitu arasiyal la varuvana matana yosika mudilaye illa athukum oru plan panni surabi mela thirupi vitruvana
Spr going….. interesting
Amudhan innum oru question mark vachitu than poi irukan ah yen surabi yum mae ava appa ah aaka amudha ah va yum thalli than vaipen nu sollura ah la yae
Superb 👌👌👌💯👏💥🔥💥🥰 interesting 💥🥰 😍👏👍👍💯🔥
Wonderful narration. Sema twist. Intresting
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 13)
இதுக்குத்தான் எதை பேசறதா இருந்தாலும் யோசிச்சு பேசணும்ங்கிறது. இலக்கியன் அரசியல் வாரிசு இருக்கான்னு யோசிக்காம வார்த்தையை விட, அமுதன் நான் முதல்வர் பையன், நீயெல்லாம் எனக்கு தகுதியானவளான்னு இவன் ஒரு பக்கம் யோசிக்காம வார்த்தையை விட்டு, இப்ப ஒட்டுமொத்தமா அப்பனும் மகனும் அவ கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்களா, இல்லையா..?
இது இவங்களுக்குத் தேவையா..?
அது சரி, இப்ப அமுதன் அரசியலுக்கு வருவானா ? இல்லையா ?
😀😀😀
CRVS (or( CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 amudhan enna eppdi badhil sollama poitan enna nadakumo parpom 🧐
Pakalam thalaivar yenna decision yedukka porarnu