Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-23

Hello Miss எதிர்கட்சி-23

அத்தியாயம்-23

ஆராவமுதனோ மடமடவென ஷவரில் நனைந்தபடி, ‘சொன்ன மாதிரியே விவாகரத்து பத்திரம் எல்லாம் எடுத்துட்டு வந்துயிருக்கா, ஓ மை காட். என்னை திட்டம் போட்டு தூக்கிட்டு திமிரா வேற உட்கார்ந்திருக்கா.’ என்று சோப்பு நுரையை உடலில் தேய்த்து, தலைக்கு ஷாம்பு போட்டு ஹாஸ்பிடல் வாசம் போக குளித்தவனுக்கு, ‘நேத்து கல்யாணம் ஆன ஜோடி மாதிரியா இருக்கேன். தனியா குளிச்சிட்டு, தனியா புலம்பிட்டு, இதுல விவாகரத்து பத்திரம் வேற வச்சிட்டு சுத்தறா.’ என்று தலைக்கு ஜெல் தடவி, டார்க் ப்ளு ஜீன், வெள்ளை சட்டையை அணிந்தான்.

  படிக்கட்டில் வெள்ளை சட்டையின் கைபட்டனை மாட்டிக்கொண்டு இறங்கி வந்தான்.

  ஊஞ்சலில் அமர்ந்து ஏறெடுத்து பார்த்தவளுக்கு ஆராவமுதனின் கம்பீரமான, அழகான தோற்றம் மனதில் பதிந்தது.

  காதல் மனதை அதட்டிவிட்டு, அரசியல் சுரபியாக முகத்தை தூக்கி திரும்பிக் கொண்டாள்.
அப்படியிருந்தும் அவன் பெர்ஃப்யூம் வாசம், ஜெல் நறுமணம், அவன் உபயோகித்த ஷாம்பு, சோப்பு நறுமணம் என்று அவ்விடத்தையே கிளர்ச்சிக்குள் தள்ளியது.
 
   “ஏதாவது சாப்பிட்டியா?” என்று கேட்க, பதில் தராமல் அவனை உறுத்திவிட்டு திரும்ப, ”பிள்ளை வயிற்றுக்காரி ஏதாவது ஹெல்தியா சாப்பிட்டுட்டே இருக்கணும் சுரபி.” என்று கிச்சனுக்குள் நுழைந்தான்.
 
  பெரும்பாலும் ஆண் வேலைக்காரர்கள் உண்டு. ஆனால் சுரபி வந்ததும் அவர்கள் வெளியேறி விட்டார்கள். ஆராவமுதன் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டான்.
 
  இங்கே பேசப்படும் விஷயம் சாதகமோ பாதகமோ, அது இருவருக்குள் மட்டும் புதைந்திட நினைத்தான்.

  ஆப்பிள் எடுத்து பழச்சாறு தயாரித்தவன், சுரபியிடம் நீட்டினான்.
 
  “தினமும் ஆப்பிள் சாப்பிட்டா டாக்டரே தேவைப்படாதுனு சொல்வாங்க. இப்ப இருந்தே ஆப்பிள் ஜூஸ் குடி சுரபி. நம்ம குழந்தை ஆரோக்கியமா இருக்கும்” என்று கூறியதும் கண்ணாடி டம்ளரை தட்டி விட்டாள்.

கண்ணாடி உடைந்து, சிதறி கீழே ஆப்பிள் ஜூஸ் கொட்டியது.
   சுரபியின் கோபம் புரிந்தாலும், நிதானத்தை இழக்காமல் ஆராவமுதன் நின்றான்.

  “இங்க ஜூஸ் குடிக்க வரலை.” என்றாள் சுரபி.

   “நானும் ஜூஸ் கொடுக்க உன்னை வரச்சொல்லலை. நம்ம குழந்தையை பத்தி பேசணும்” என்றான்.‌

  சுரபிக்கு வந்த கோபத்தில், “என்னடா குழந்தை குழந்தை குழந்தைன்னு அதை வச்சியே பேசி மடக்கலாம்னு பிளானா? இந்த குழந்தை வருவதற்கு முன்ன நமக்குள் என்ன பேசினோமோ, அதை பத்தி பேசி முடிச்சிட்டு குழந்தைக்கு வருவோம்.” என்றாள்.

  ஆராவமுதனோ அவள் எதிரே இருந்த நீளமான சோபாவில் அமர்ந்து இருபக்கமும் கையை விரித்து ராஜாளி பறவை போல தோரணையோடு, சற்று குரலை உயர்த்தி கோபமாக “என்ன பேசணும்? ஆரம்பத்துலயிருந்து என்னை பிளான் பண்ணி உன் வலையில் விழவச்சியிருக்க. ஹேய்… என்னமோ நான் ஸ்கெட்ச் போட்டு, உன்னை இக்கட்டுல தள்ளியதா என்னை குற்றம் சுமத்துற நோக்கத்தில் பார்க்கற. நான் பிளான் போட்டேன். உன்னை உன் அரசியல் சாம்ராஜியத்துல தடைப்போடும் விதமாக, சிதம்பரம் மூலமா எல்லாம் செய்தது நான் தான், ஆனா சிதம்பரத்தையே கைக்குள் போட்டு என் பிளானை தெரிந்து தானே நீயும் காய் நகர்த்தியிருக்க” என்றான்.‌

  சுரபியோ ஆராவமுதனின் ஆவேசமான முகத்தை கண்ட திருப்தியில், வெற்றி மிதப்பில் புன்னகைத்தாள்.

   “இது இன்னிக்கு நேத்து போட்ட பிளான் இல்லை அமுதா.
  என்னைக்கு நீயும் உங்கப்பா இலக்கியனும், என்னை கேலி செய்து பேசினிங்களோ, அப்ப முடிவு செய்தது. 

   பத்தாம் படிக்கும் போது உன்னிடம் பிரப்போஸ் செய்தது மட்டும் தான் உனக்கு தெரியும். நீ கேலி செய்து எங்கப்பா அம்மாவிடம் மாட்டிவிட்டுட்டு போயிட்ட. அம்மா அடி வெளுத்தாங்க. எங்கப்பா அப்பக்கூட என்னை திட்டலை. ஏன் தெரியுமா? இலக்கியன் அங்கிள் வாய் வார்த்தையா என்னை மருமகளேனு கூப்பிட்ட ஒரு சொல்லுக்காக. ஆனா அதே வாய், எங்கப்பா அவரை கேள்வி கேட்டதும், உனக்கென்ன தெரியும், நீ வெளியே நில்லுனு அனுப்பிட்டு, மத்திய அரசாங்கத்திலிருந்த வந்த அரசியல்வாதியிடம் மரியாதையா பேசி அனுப்பினப்ப, எங்கப்பாவை எந்த இடத்துல இலக்கியன் வச்சிருந்தார்னு தெரியப்படுத்திட்டார்.
  கட்சி தொண்டர், நண்பன்னு அறிமுகப்படுத்தியிருந்தா கூட, அப்பா மனசு தாங்கியிருக்கும். ஆனா எடுப்புடினு சொல்லிட்டார்.

இதுல எங்கப்பா வந்து இலக்கியனிடம் பேசினப்ப, ‘எடுபிடி என்றதில் என்ன தப்பு. உன்‌மகளோட நான் என்ன சம்பந்தமா பேசியிருக்கேன். சரிக்கு சமமா உறவாடி மரியாதை தர, பொம்பள பிள்ளையை ஒழுங்கா வளர்க்க தெரியாதவன் எல்லாம் என்னிடம் அரசியல் தந்திரத்தை பேசக்கூடாது. நாளைக்கே உன்னோட இந்த அரசியல் சமுத்திரம் வற்றிடும். உனக்கென்ன என்னை மாதிரி ஆண் வாரிசா? வாழையடி வாழையா அரசியலில் காலூன்றி நீங்காத இடம் பிடிக்க எனக்கு மத்திய அரசாங்கத்து உதவியும் தேவைன்னு, அந்த நேரத்துல பேசியது உங்கப்பா தானே.” என்று மூக்கு விடைக்க பேசவும், “ஏய் அப்பா அன்னைக்கு மூக்கு முட்ட குடிச்சிருந்தார். குடிக்கறப்ப என்ன பேசினார்‌, ஏது பேசினார்னு அவருக்கே தெரியாது. இது முடிந்து பல வருஷமாகி இன்னமும் அதையே பேசினா அந்த சம்பவத்துக்கு வேல்யூ இல்லை சுரபி.” என்றான்.

  சுரபியோ “ஓ… அப்ப குடிச்சிட்டு என்னவேண்ணா பேசலாம். அப்படின்னா நாளைக்கு நான் டிரிங் பண்ணிட்டு உன்னை இழிவா பேசவா? சொல்லு அமுதா. ஏன் இங்கயே இருக்கே மதுபாட்டில்.” என்று எடுக்க செல்ல, “சுரபி.. நீ கன்சீவா இருக்க. முதல்ல உட்காரு.” என்றான் அதட்டலாய்.

  “உன் குழந்தை… என் வயிற்றுல வளருது என்றதும் துடிக்கற. இப்படி தானே எங்கப்பாவுக்கும் இருக்கும்.
  உன்னிடம் காதலை சொல்லி அடிவாங்கி, அடுத்த நாள் மன்னிப்பு கேட்க ரோஷமேயில்லாம வந்தேன். ஆனா உன் பிரெண்ட்ஸிடம் நீ என்னை கீழ்த்தரமா பேசி சிரித்ததை நான் கேட்டேன். என்ன செய்தாலும் விரட்டிட்டு வர்றா. ஏதாவது செய்து அனுப்பணும்னு சொன்னியா??” என்றாள்.

  ஆராவமுதனுக்குள் சுரபி காதலித்த சில நாள் பேசியதை நினைவுக்கு கொண்டு வந்தான்.

‘சேசே.. அந்த குட்டி பொண்ணு எல்லாம் என் லவ்வரா? என்ன விரட்டினாலும் ஒளிந்து ஒளிந்து பின்னாடியே வர்றா. ஏதாவது செய்து அடியோட விரட்டணும்.” என்று கூறிவிட்டு தந்தையிடம் ஏதோ பேச சென்றான். அந்த நேரம் அவன் நண்பர்கள் மட்டுமே உணவை உண்ணவும், பார்ட்டியில் எல்லா வசதியும் செய்து விட்டு இருபது நிமிடம் சென்றான்.

  அவன் வரும் பொழுது அவ்விடமே கலவரமாக மாறியிருந்தது. நண்பர்களிடம் கேட்டதுக்கு, யார் பெயரையோ கூறி ஓவரா குடிச்சி இடத்தை இப்படி செய்ததாக கூறியிருந்தார்கள். அன்று சுரபி வந்தாளா? என்று ஆச்சரியத்தோடு அவளை காண, “ஏன் அமுதா.. அப்படி சொன்ன? நீ போனதும் அந்த இடத்துக்கு வந்த என்னை, உன் பிரெண்ட்ஸ் என்ன செய்தாங்க தெரியுமா?” என்றவள் முகத்தை அருவருப்பாக திருப்பி கொண்டாள்.
  
  ”இங்க பாரு.. நீ வந்ததே தெரியாதுன்னு சொல்லறேன். அங்க நடந்தது எப்படி தெரியும். நேத்து நான் சிதம்பரம் அங்கிள் சொன்னார்.” என்று தலைகவிழ்ந்தான்.

  “ஓ… ஏன் துரோகியா இருந்திங்கன்னு அவரை போட்டு உலுக்கிட்டியா? சிதம்பரம் அங்கிள் சொன்னாரா? ஏன் சொல்ல மாட்டார், அவர் பேத்தியை டிரைவரால் வன்புணர்வு செய்து லைவ் டெலிகாஸ்ட் பண்ணவானு மிரட்டி கேட்டா பாவம் வயசானவர் என்ன செய்வார்?
  உன் பிரெண்ட்ஸ் புத்தி தானே உனக்கும்.
உன் பிரெண்ட்ஸ் என்னை கூப்பிட்டு வச்சி, ஆராவமுதனை விரும்பறியா? ஏன்மா? நான் வேண்டுமென்றால் உதவவா?னு கேட்டு என் கைப்பிடிச்சி நடுவுல நிற்க வச்சி, ஆளாளுக்கு என் உடலை தொட்டு, “அவனிடம் என்ன பார்த்து மயங்கின, அவன் தான் வேண்டுமா? நான் அவன் பிரெண்ட் தான்‌. வேண்டுமின்னா என்னை விரும்புனு என் இடுப்பை பிடிச்சி நெருக்கி டான்ஸ் பண்ண முயன்றதும், என் மார்பத்தை தீண்ட வந்து, முத்தமிட வந்தவங்களை ஆக்ரோஷமா தாக்கிட்டு தள்ளிவிட்டு, ஓடிவந்தேன். அப்பவும் என் காலை பிடித்து இழுத்து, என் ஸ்கர்ட் விலகவும் என் தொடையில் கைவைத்து, அழுத்திய உன் பிரெண்ட்ஸால் அலறாத குறையா கத்தி அழுததை சொன்னாரா?

  என் வாயை மூடி, என் கன்னத்துல அறைந்து, என்னை அடக்க பார்த்து, நான் மிரண்டு போனதை சொன்னாரா? சொல்லு டா சொன்னாரா?

  அதுக்கு மேல ஒருத்தன் என் காது கிட்ட வந்து, இனியும் ஆராவமுதன் வேண்டும்னு வந்த… உன்னை கூட்டமா சேர்ந்து மொத்தமா சிதைச்சிடுவோம்னு மிரட்டி, என் காதையும் எவனோவொருத்தன் மோகத்தில் கடிச்சானே… அதை சொன்னாரா?

அவசர அவசரமா என் அலறலை கேட்டு ஓடி வந்த சிதம்பரம் அங்கிள், உன் பாரின் பிரெண்ட்ஸை தள்ளிவிட்டு, என்னை எழுந்துக்க சொல்லி, கையோட பாதுகாப்பா அழைச்சிட்டு போனாரே அதை சொன்னாரா?

  ‘தேங்க்ஸ் அங்கிள்’ என்று சொல்லும் போது எந்தளவு நான் பயந்தவளா இருந்தேன்னு அவரிடம் கேட்டுப்பாரு.

அன்னைக்கு அவர் வரலைன்னா நான் அந்த கூட்டத்தில் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தா கூட ஆச்சரியமில்லை.” என்றதும் ஆராவமுதன் பேசயியலாத வலியில் நின்றான்.

   அவ்விடம் களைந்து கலவரபூமியாக மாறியதை கண்டவனுக்கு அன்று நடந்ததை சிதம்பரம் நேற்று தானே விலாவரியாக உரைத்தார்.

  அன்றும் என்னென்னவோ சொல்ல வந்தார்.

‘நம்ம நட்ராஜோட பொண்ணு சுரபி வந்தா தம்பி. உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. அந்த பொண்ணு பயந்துப்போயிட்டா” என்று சொல்ல தயங்கி கூறினார்.
அதற்கு ஆராவமுதனோ, அங்கிள்… என் பிரெண்ட்ஸ் எல்லாருமே அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இங்க வந்ததே என்னுடைய அழைப்பிற்காக. அங்கயே வளர்ந்து ஆளானவங்க ஏதாவது தொட்டு பேசி கேலி செய்திருக்கலாம்‌. இந்த முட்டாள்… தொட்டு பேசியதை எல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தியிருப்பா. சரியான நாடகக்காரி அங்கிள்‌. அவளை விட்டுதள்ளுங்க’ என்று முடித்து விட்டது இன்று தவறாக தோன்றியது.

  ஆராவமுதன் மெதுவாக அவள் கையை தீண்டி “இங்க பாரு அன்னைக்கு நடந்தது எனக்கு இப்ப தெரிய வந்தது. இதே அந்த பிரெண்ட்ஸ் கூட டச்ல இருந்தா, நிச்சயம் எல்லாரையும் இங்க வரவச்சி மன்னிப்பு கேட்டிருப்பேன். அவங்க அமெரிக்க சிட்டிசன்ஸ். கண்டிப்பா இன்னொரு நாள் இங்க வரவச்சி மன்னிப்பு கேட்க வைக்கிறேன்.” என்றான்.

சுரபி கையை உதறி, “ம்ம் எதுக்கு? நான் ஏன் மன்னிக்கணும்? உன்னையே மன்னிக்காதவ நான். காலம் போன வேகத்தில் அவனுங்க  முகத்தை நான் மறந்துட்டேன். ஆனா அவனுங்க செய்த ஒவ்வொரு விஷயமும் நீ செய்ததா தான் எனக்குள் பதிவாகியிருந்தது.

இலக்கியன் வேற ஆண் வாரிசு தான் தமிழகத்தை ஆளும். உன்னோட இந்த அரசியல் முடிந்திடும்னு எங்கப்பாவை சொன்னார்ல, இப்ப அதே வாயை திறக்க சொல்லு பார்க்கலாம். அடுத்த தேர்தல்ல நான் உங்கப்பாவுக்கு எதிரா நின்று ஜெயித்து காட்டுவேன்.” என்றாள். ஏதோ செய்த தவறு எல்லாம் இவன் ஒருவன் என்ற குற்றம் சாட்டும் விதமிருந்தது.

   “ஃபைன்… ஆல் தி பெஸ்ட். பட் நீ எதிர்க்க நினைக்கிறது என் அப்பாவை இல்லை. என்னை. உனக்கு போட்டியா நிற்க போறது நான் தான்” என்றான் திமிராக.

  அலட்சியமாக பார்வையிட்டு, என்னை கல்யாணம் செய்வதா இருந்தா அரசியலில் நிற்க மாட்டேன்னு சொன்ன?” என்றாள் எள்ளலாய்.
 
  ஆராவமுதனோ, “மக்களுக்கு பல சத்தியம் சேய்யறோம். அதெல்லாம் நிறை வேத்தறோமா என்ன? கட்சிக்கு எது தேவையோ மக்களில் எது செய்தா, என்னை பற்றி பேசுவாங்களோ அதை மட்டும் செய்தா போதும்னு நினைப்பதில்லை. அது போல தான்‌ கல்யாணத்துக்கு முன்ன அரசியலில் நிற்க மாட்டேன்னு வாக்கு தந்தேன் சுரபி. இப்ப தான் கல்யாணமே முடிந்ததே. இனி தாராளமா நிற்கலாம் அதோட நான் இப்ப முதலமைச்சராக போறேன். பாவம் சுரபி நீ, எத்தனை மேடை, எத்தன உணர்ச்சிகரமான பேச்சு. எல்லாமே வேஸ்ட்ல” என்று கேலியாக சிரித்தான்‌.

  “முதல்வரா பதவி ஏற்பதில் என்ன அமுதா கிக்கு இருக்கு. ஒரு பொண்ணிடம் ஏமாந்து நிற்கறியே.

நீ அமெரிக்காவுல படிக்கும் போது சிதம்பரம் அங்கிள் மூலமாக அடிக்கடி என் பெயரை நினைவுப்படுத்திட்டே இருந்து, இங்க வந்ததும் என்னுடைய மேடை பேச்சு, வீடியோவா காட்டி உனக்குள் என்னை பதிய வச்சது எதுக்கு? நீயும் நானும் கல்யாணம் செய்யவா?

  உன்னை என் வலையில் விழ வைக்க. பாரு… அன்னைக்கு மேடையில் பேசிட்டு திரும்பும் போது, சிதம்பரம் அங்கிள் மூலமாக, இவளை ஏதாவது செய்யணும் தம்பினு உன் மனசுல பதிய வச்சேன். ஏன் நீ என்னை உன் பின்னால் காதலிக்க வைக்கறதா நினைச்சியா?
  நெவர், அந்த கருணாகரண் பிளான் பண்ணி நீ வரும் போது என்னை வழிமறைத்து அடிக்க சொன்னேன். காரை நொறுக்க சொன்னேன். அவனும் என்னை அடிக்க ஹாக்கி ஸ்டிக் எல்லாம் கொண்டு வந்து காரை நொறுக்க, நீ ஹீரோ எண்ட்ரியா வந்து அவனை அடிச்சி, என்னை காப்பாத்தி உன்னோட தூக்கிட்டு வந்த. நீ தூக்கிட்டு வரும் போது நான் மயங்கியிருந்தேன்னு நினைச்சியா? கருணாகரனை நீ காரில் தள்ளி டோரை லாக் செய்து நடக்கவும், ‘எப்படியாவது கதவை திறந்து வந்துடறதா அவர் கைகாட்டினார்.

என்ன..‌ இந்த நிலசரிவு வந்து தப்பிக்க முடியாம இறந்துட்டார். என்றவள் உச்சுக்கொட்டி, “ஆனா நீ ரொம்ப நல்ல பையன் ஆராவமுதன். என்னை ரூமுக்கு கூட்டிட்டு வந்து படுக்க வச்சி ரசிச்சியே தவிர, தப்பான அர்த்தத்தில் பார்க்கலை. ரூம் லைட்டை அணைச்சிட்டு, கண்ணுல துணியை கட்டிட்டு எனக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டியே. ரியலி ஐ அம் இம்பிரஸ்டு.
  
   இந்தளவு நீ ஒழுக்கமானவன்னு அப்ப தான் தெரிந்தது. லேசா குற்றவுணர்வு கூட வந்துச்சு. 
  அதனால் தான் நீ முத்தமிட்டப்ப அதை ரசித்து ஏற்றேன். சொல்லப்போனா அந்த நேரம் அரசியல்வாதி என்ற அடையாளத்தை மறந்து உன்னோட பேசி பழகினேன்.

  அதனால் தான் என்னாலயும் உன்னிடம் உண்மையா இருக்க முடிந்தது.

  நிலசரிவுல நீயும் நானும் மாட்டிக்கிட்டு உயிர் பிழைக்க தவிச்சப்ப, நீ மட்டுமாவது உயிரோட இருன்னு துரத்தினேன். நீ அப்ப உன்னை விட்டு நான் எப்படி போகனு என் உயிரையும் காப்பாற்றி கைப்பிடிச்சி நடந்து கூட்டுட்டு போனியே…. அப்ப.. அப்ப தான் இந்த உலகம் எதுவும் என் கண்ணுக்கு தெரியலை.
   இரவில் நீயும் நானும் ஈருடல் ஒர் உயிரா இணைந்தப்ப, உன்னை காதலிச்ச முட்டாள் சுரபியா தான் என்னை இழந்து உன்னை ஏற்றது.” என்று கூறும் நேரம் கண்ணீர் துளிர்க்க, அதை துடைத்து கொண்டாள்.

  காதல் ஜெயிக்கறதோ தோற்கறதோ, இந்த அரசியல் விளையாட்டு எதுவரை போகுதோ அதுவரை நானும் உன்னை போலவே பதிலடி தர முடிவெடுத்தேன்.

  என்னை அம்மாவோட உடல்நிலையை காட்டி அனுப்பினப்ப, உன் தந்திரம் கண்டறியாம தான் கார்ல ஏறினேன்.

நீ சிதம்பரம் அங்கிளிடம், ‘சுரபியை அனுப்பிட்டு நாம இங்க உதவி செய்யணும் அங்கிள். அப்ப தான் முதல்வராக அடுத்து நான் நின்றா, எனக்கான விசிறிகள் இருப்பாங்கன்னு களத்துல உதவினப்பாரு. அப்ப தான்டா உன்னை விரும்பியது தப்பா சரியானு முடிவெடுக்குற குழப்பத்தில் நின்றேன்.

  நீ இந்த பதவிக்கு இந்தளவு என்னை ஏமாற்ற தயாராயிருக்கும் பொழுது, நான் ஏன் உனக்கு விட்டுதரணும்னு நானும் உன்னை திரும்ப தந்திரமா ஏமாற்ற முடிவெடுத்தேன்.

தேர்தல்ல நீ நிற்க கூடாதுன்னு சொன்னேன். காதலா அரசியலா என்று நீ எனக்கு மறைமுகமா ஆப்ஷனை தந்த. நான் உனக்கு நேரிடையாகவே இடியை தூக்கி போட்டேன்.

  நிச்சயம் இடைப்பட்ட நாளில் நீ இதை யோசித்து துடிச்சிருப்ப தானே?! என்றதும் ஆராவமுதன் அங்கிருந்த பூஜாடியை பார்வையிட்டான். அவனுக்கு தான் அந்த துடிப்பு இருந்ததே. இவளையும் விடக்கூடாது, அரசியலும் வேண்டும் என்று திட்டம் இயற்றியது.

    “உனக்கே தெரியும்.. நிவாஸ் என்னை விரும்பறார், உன்னிகிருஷ்ணன் வேற என்‌ பின்னாலயே சுத்தறான். நீ இல்லையென்றால் அடுத்து நான் இருவரை மணந்து உன்‌ முகத்துல கரிபூசுவேன்னு தானே, அவசரமா கல்யாணம் செய்த? இப்பவும்… நான் நினைச்சா….” என்றவள் வார்த்தையினை தொடராமல் நிறுத்தினாள். அதில் இந்த நொடியும் கூட இருவரை மணக்க தயார் என்றால் அவர்கள் மணக்க முன் வருவார்கள் என்ற அர்த்தம் எஞ்சியிருந்தது.

ஆராவமுதனோ கெத்து மாறாமல் “ஏ.. எதிர்கட்சி… என்னை வீழ்த்தியது நீ தான். அதை பகிரங்கமா ஒத்துக்கறேன். இப்ப… குழந்தையை பத்தி பேசுவோமா?” என்றான். காதலென்ற ஆயுதம் போல குழந்தையையும் முன் வைப்பானோ என்று சுரபி பார்வையிட்டாள்.

-தொடரும்

13 thoughts on “Hello Miss எதிர்கட்சி-23”

  1. Wow fantastic narration. Politics tricks awesome narration sis. Surabhi too smart. Very eagerly waiting for next episode sis.

  2. Surabi amudhan rendu perumae avanga arasiyal aatathula love life ah gelli porul ah mathitanga .
    Surabi ku nadantha incident la amudhan ku endha pangum illa aana ava appa kita sonnathu pola arasiyal ah amudhan ah vandha arasiyal than choose pannuvaen nu sonna atha than ava seiyuthu iruku ah aana iva amudhan rendu perum love ah vachi than game ah start panni irukaga aana avan ippo varaikkum iva love ah ezhaka virumbala athu onnu than ivalukkum avanukum vithiyasam

  3. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 23)

    ரெண்டு பேரும் கட்டம் கட்டி தூக்குன திட்டமெல்லாம் ஓகே தான். ஆனா, இப்ப ரெண்டு பேர்ல யாரோவொருத்தர் தானே முதல்வராகணும்…
    அது யாரு…? இவளா ? அவனா ?
    போகட்டும் காதல் தான் ஊத்திக்கிச்சு, கல்யாணம்..
    ஒண்ணுமில்லாமலே போயிடுச்சு. அப்ப குழந்தை…?
    குழந்தையை வைச்சு என்ன பண்ணப் போறாங்க…?
    எப்படியும் அந்த குழந்தை பிறந்து, வளர்ந்து பெரியவளாகற வரைக்கும்..
    தாயோட நிழல்ல தான் இருக்கணும்ன்னு சட்டம் சொல்லப் போகுது. அப்ப ஆராவமுதன் என்ன பண்ணுவான்…? ஒருவேளை, இந்த குழந்தையை கலைச்சிடுவேன்ங்கிற ஆயுதத்தை வைச்சு அவனை முதல்வராகாம தடுப்பாளோ இந்த சுரபி..? இருக்கும், இருக்கும்… யார் கண்டா…? அரசில்ல இதெல்லாம் சகஜம்ப்பா..!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Sis, the way of your narration is too good 👍👍👍 interesting 💥🥰😍🥳, vera level 💥🔥👍🥳😍

  5. Sis, the way of your narration is too good 👍👍👍 interesting 💥🥰😍🥳, vera level 💥🔥👍🥳😍… Surabhi excellent plan

  6. Sis, the way of your narration is too good 👍👍👍 interesting 💥🥰😍🥳, vera level 💥🔥👍🥳😍… Surabhi excellent plan … Waiting for next ud

  7. Happaaaaaa rendum sariyanaaa sanda kozhi thaan pa…. Surabi….. Powerpack performance pa… Thalaivar yenna solla porar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *