Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-25

Hello Miss எதிர்கட்சி-25

அத்தியாயம்-25

   ஆராவமுதன் தாடையை தேய்த்து அடியை வாங்கி, நிதானமாய் சுரபியை ஏறிட்டு, “குழந்தையை அப்ப அழிக்க மாட்ட. தேங்கஸ்… நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து பின் வாங்க போறதில்லை. நீயும் எதிர்கட்சியா நிற்க தான் போற.
   கணவன் மனைவி ஒரே ஆபீஸ்ல வேலை செய்வதை கேள்விப்பட்டிருக்கியா? ஒரே காலேஜில் வேலை செய்வதில்லையா? அப்படியிருக்க, அரசியலில் எதிரெதிர் இருக்க முடியாதா?

       நான் எங்கப்பா இலக்கியன் வீட்ல இருக்கப் போறதில்லை. நீ உங்கப்பா  நட்ராஜ் வீட்ல இருக்கப்போறதில்லை. நம்ம தங்கப்போறது இங்க தான்.
 
   இந்த வீட்ல இரண்டு வாசல் இருக்கு.  நான் என் வேலையை பார்க்கறேன், நீ உன் வேலையை பாரு. நம்ம மோதல் கோட்டையில். நம்ம காதல் இந்த வீட்ல” என்றவன் அவளை பூங்கொத்து போல அள்ளிக் கொண்டான்.

சுரபியோ “அமுதா என்ன செய்யற இறக்கி விடு” என்று திமிர, “நேத்து கல்யாணம் ஆனா ஜோடி டி. ஹாஸ்பிடல், மீடியா, கட்சிஆட்கள்னு படுத்தி எடுத்துட்டாங்க‌. புதுசா கல்யாணமான ஜோடியா கொஞ்சமாவது இருக்க முடியுதா? இந்த நேரம் உன்னை விடறதா இல்லை. நமக்குள் எல்லாம் பேசி முடிச்சாச்சு…. உனக்கு நான் போட்ட திட்டம் எனக்கு நீ போட்ட திட்டம் இரண்டுமே அரசியலில் எப்படியோ? இந்த காதல்ல சரியா காய் நகர்த்தியாச்சு. இதுல போதாதற்கு என்னை அடிச்சிட்ட, எவர்திங் ஓவர்.” என்று மாடியில் உள்ள அறைக்கு செல்லும் முடிவோடு படிக்கட்டில் அவளை தூக்கி நடந்தான்.

  “ஏ..‌‌. கீழே போட்டுட போற. அமுதா விளையாடாத கீழே விடு. அதெப்படி ஒரே வீட்ல… தொண்டர்கள் மதிக்க மாட்டாங்க, சந்தேகப்படுவாங்க. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் உண்மையா இருக்க மாட்டாங்க” என்று, அலற, “நோ பேபி, தொண்டர்கள் கட்சிகள் எல்லாம் இந்த ரூமுக்குள் கொண்டு வராதே. மத்தவங்களுக்காக நம்ம காதலும் நாமளும் பிரிய முடியாது.

  இந்த ரூமை கண்ணை மூடி பீல் பண்ணு. இந்த குளிர், மழை, சில்லுனு காற்று, இலையில் விழுந்த தண்ணீர் சத்தம், சின்ன சின்ன பூச்சிகளோட ரிங்காரங்கள், இதுக்கு நடுவுல தந்தியடிச்ச உன் உதடுகள் என்னை என்னனென்னவோ செய்தது. இப்ப அதே அட்மாஸ்பியரை இந்த வீட்லயே நமக்காக உருவாக்கி வச்சியிருக்கேன். நீ அதை தான் பீல் பண்ணணும்.” என்று விளக்கை போட்டு உடனடியாக அணைத்துவிட, அவ்விடமே இருட்டில் காட்டில் இருப்பது போல அமைந்திருந்தது.
   அதோடு ஆங்கங்கே சப்தம், அவள் அங்கு நிலசரிவில் நடந்து வந்த காட்டில் கேட்டது போலவே இருந்தது. ஆச்சரியம் விலகாமல் வீட்டின் அமைப்பை பார்வையிட்டாள்.

  “எப்படியிருக்கு” என்று செவிமடலில் கிசுகிசுக்க, “அமுதா நான் வீட்டுக்கு போகணும். உன்னிடம் பேச வந்தேன் என்னை அம்மா தேடுவாங்க” என்று திரும்ப, “என்ன விளையாடறியா? இவ்ளோ பேசியும் போகணுமா? ஊரறியா லவ் சொன்னவன். ஊரறிய கல்யாணமும் செய்தாச்சு. இனி ஊரறிய உன்னோட வாழணும். அத்தைக்கு போன் பண்ணி சொல்லிக்கலாம்.” என்று மெத்தையில் அவளிடையை பற்றி மெதுவாக காரியம் சாதிக்க முனைந்தான்.

  என்னென்னவோ மறுப்பு கூற வாய் எடுத்தாலும், இமை மூடியவளின் மனதில் காட்சியாக தங்கள் உலகம் மட்டுமே தெரிந்தது.

“அமுதா” என்ற செல்ல சிணுங்கலில், சுரபியிடம் தன் அமுதத்தை பருக துவங்கியவனுக்கு, முடிக்கும் மனமே இல்லாமல் இரவை நீடிக்க வைத்தான்.

கீழே சுரபியின் போன் ஊஞ்சலில் இருக்க, பல்லவி அழைத்து அது எடுக்கப்படாமல், அலறி அடித்து கேட்பாரற்று கிடந்தது. ஆராவமுதனின் போனுக்குமே பல்லவி அழைப்பை தொடுக்க, அதுவே எடுக்கயியலாது இருந்தது.

  அடுத்த நாள் அதிகாலை கதிரவன் தலைக்காட்ட, உடலை முறுக்கி சோம்பல் முறித்தான் நாயகன்.

பிறந்த குழந்தைகளின் உடையை அணிந்திருந்த இருவரும் இறுக்கமாய் பின்னி பிணைந்ததில், ஆராவமுதனே, முதலில் எழுந்தான்.‌

தன்னை சுத்தப்படுத்தி குளித்து முடித்து, காபி மேக்கரில் காபி தயாரித்து மேல சுரபியை காணவந்தான்.

  சூடான காபியை பருகி அவளது முதுகில் முத்தம் வைக்க,”அமுதா..” என்று திரும்பினாள்.

“குட்மார்னிங். ஹேவ் எ நைஸ் டே” என்றவன் காபி கோப்பையை நீட்டினான்.

   “பிரஷ் பண்ணணும்” என்றாள்.

  “பாத்ரூம்ல இருக்கு.” என்று கூற, எழுவதற்கு சலித்து, தலையணையில் புதைந்தாள்.

“ஏய்… ஆர் யூ ஓகே.” என்றான்.

  ‘ம்ம்ம்” என்றவள் அருகே மீண்டும் பூனை போல குழைந்து படுத்துக் கொண்டு “ஹாட்டா இருக்க எதிர்கட்சி” என்றான்.

  “பச்… சேலையெல்லாம் பிடுங்கி எங்க வீசின. எடுத்து தா.” என்றவள் இடத்தை சுற்றிமுற்றி பார்வையிட்டாள்.

   மிக அழகான இன்டிரியர் டிசைனிங். சமீபத்தில் மாற்றி வைத்த சுவடு தெரிந்தது. ஆக தன்னோடு வாழ வேண்டி, ஆராவமுதன் அதிகம் மெனக்கெட்டு கனவு கண்டதை சுட்டிக்காட்டியது.

“நேத்து பதமா தானே நடந்துக்கிட்டேன். ஏதும் காயப்படுத்தலையே?” என்று குழந்தை வேறு சுமந்தவளை படுத்தியெடுத்திருக்க, மோகம் முக்தியடைந்தப்பின் இந்த நிமிடம் அமுதன் கேட்க,  இல்லையென்றாள்.

  அதன்பின் குளிக்க சென்றவளுக்கு, ஆடைகளை கப்போர்ட் நிறைய வாங்கி வைத்திருந்தான். எப்படியும் நம்பிக்கையாக தன்னோடு வாழ்வதற்கு செய்ததை எண்ணி வியந்தாள்.

  குளித்து முடித்து மார்பிலிருந்து தொடை வரை பூந்தூவலை வைத்து கட்டி கொண்டு வந்து, முடியை ஹர்டிரையரில் உலர்த்தி அதன்பின்னே உடையை அணிந்தாள்.
  அதற்குள் ஆராவமுதன் அவளது அழகை பார்வையால் பருகி, வெளியே செல்லும் விதமாக தயாராகியிருந்தான்.

  சுரபியோ ‘எங்க கிளம்பிட்ட’ என்று அவனிடம் கேட்க வாய் திறக்கவில்லை. அவனாக கூறவேண்டுமென இல்லத்தரசியாக எண்ணினாள்.

  அவன் கூற நேரமெடுக்க, “நான் அப்பாவை பார்க்க போகணும்” என்று படியில் இறங்கினாள் சுரபி.

  ”நானும் எங்கப்பாவை பார்க்க போகணும்‌.” என்று அமுதனும் பின்னாலே வந்தான்.

சுரபியோ ப்ரிட்ஜ் திறந்து டின்  பழச்சாற்றை திறந்து, “ஹாஸ்பிடலில் ஆக்டிங் தானே? தந்திரமா வந்ததும் வராததும் முதல்வர் பதவிக்கு வந்துட்ட. கேடி டா நீ” என்றாள். இப்பொழுது சுரபிக்கு பொறாமை புகைச்சல் இருந்தது.

“ஆக்டிங்… ம்ம்… நல்ல யூத்திருக்க. முதல்ல அப்பாவை ஆக்டிங் தான் பண்ண சொன்னேன். ஆனா நேத்து நீ காரோட திரும்ப உங்க வீட்டுக்கு போயிட்ட, இதுல விவாகரத்து பத்திரம் எல்லாம் பேசினியா. அப்பாவுக்கு முதல் முறை பயம் வந்துடுச்சு. சிதம்பரத்தை வேற நிற்க வச்சி பேசவும், உனக்கும் உங்கப்பாவுகாகு நடந்தவையை வச்சி, எங்க என் வாழ்க்கை எதுவுமில்லாம மாறுமோனு கலங்கினார்… அதுவும் நான் உன்னை விரும்பறேன்னு அவருக்கு தெரியுது. மனசுக்கு பிடிச்ச பொண்ணோட வாழ்வான்னு பார்த்தா விவாகரத்து என்றதும், நிஜமாவே நைட் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு சுரபி.

  நேத்து காலையில் முழுக்க முழுக்க அப்பா ஐசியூல தான் போராடினார்.

  பொய்யா ஆரம்பிச்சது… நிஜமாவே முதல் ஹார்ட்அட்டாக் வந்ததும் கர்மா இஸ் பூமராங்னு எடுத்துக்க வேண்டியதா போச்சு. சுரபி அப்பா கண்ணை திறந்தார்… என்னை பத்தியும் உன்னை பத்தியும் விசாரித்தார்.
  நான் சுரபியோட வாழ்வேனே தவிர பிரிய மாட்டேன்னு சொல்லியும், நம்ம லைப் பத்தி கவலைப்படறார்.

  அவரை நீயும் பார்க்க வரணும்னு நினைக்கறார். சொல்லப்போனா, சுரபியை கையோட அழைச்சிட்டு வா, அவளை பார்த்தா தான் திருப்தின்னு சொல்லறார். ஒருவேளை உயிர் பயத்துல பார்க்க விரும்பறாரோ என்னவோ” என்றதும் சுரபி நம்ப முடியாத பார்வை பதிக்க, “ஏய்… பொய் சொல்லலை. உண்மையை தான் சொல்லறேன். வேண்டும்னா சிதம்பரம் அங்கிளை கேளு.

  நீ வரலை என்றாலும் வற்புறுத்த மாட்டேன். நம்ம ஒன்னா வாழ்வோம் சொல்லியதை செய்து காட்டுவேன்.

சுரபி… அப்பாவிடம் நீ கன்சீவா ஆனதை சொல்லலை.” என்றான். 

  அவன் பேசியதை கேட்டு இருந்தவள் “ஏ..ஏன்?” என்றாள்.

   “உனை தப்பா எடுத்துப்பாரோனு தவிர்க்க நினைச்சேன். நம்ம இரண்டு பேரும் இணைந்தது எதிர்பாராதது. ஆனா அதை ஒழுக்கத்தை வச்சி பேசிட்டா. நம்ம இணைந்ததுக்கு அர்த்தம் மாறிடும். அதனால் சொல்ல விரும்பலை.” என்றான்.

  சுரபி ஆராவமுதனை தவிப்பாய் பார்த்து, “சாரி… அம்மா கண்டுபிடிச்சிட்டாங்க அமுதா, இப்ப அப்பாவுக்கும் தெரிந்துடுச்சு. வீட்டுக்கு வேற போகலை. அதனால் அவங்களிடம் அதுக்கு ஏற்றது போல பேசிக்கோ. ம்ம்ம என் போன் எங்க?” என்று தேடினாள்.

  ஊஞ்சலிலே இருக்க, அதனை எடுத்து பல்லவிக்கு அழைத்தாள்.

  “எங்கடியிருக்க? எத்தனை போன்? உங்கப்பா அமுதனை பார்க்க போனதா சொன்னார்.” என்று பதட்டமாய் கேட்டதும், “அம்மா நா..நான் அவர் கூட தான் இருக்கேன். நான்‌‌..‌. இலக்கியன் மாமாவை பார்த்துட்டு அங்க அமுதனை கூட்டிட்டு வர்றேன். அப்பாவிடம் சொல்லுங்க…” என்றாள்.

  ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்டதும், தந்தை கோபமாக இருப்பதை யூகித்து கொண்டாள்.

     பல்லவியோ “நிஜமா தானே சொல்லற. ஒன்னா இருக்கியா?” என்று கேட்க, “என் புருஷன் கூட தான் இருக்கேன். நான் அமுதனை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் அவரிடமே கேளுங்க” என்று அணைத்தாள்.
பல்லவிக்கு அதன்பின் நிறைவு உண்டானது. நட்ராஜ் மட்டும் கோபமாய் திரிந்தார்.

  ஆராவமுதன் சுரபி இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர். நான்கு கார் வரிசையாக சீறிபாய்ந்தது. அதில் சுரபி காரும் பின்னால் தொடர்ந்தது.
 
  “என்னுடைய பெர்சனல் யூஸேஜுக்கும், அரசியலுக்கு என்னுடைய கார் தான் உபயோகப்படுத்துவேன். இப்ப உன் மனைவியா மாமனாரை பார்க்க வருவதால் உன் கார்ல வர்றேன். ஏதாவது மாத்தி கித்தி நியூஸ் கிரியேட் பண்ணாத. ஓகேவா.
 
   மீடியாயாட்கள் கேட்டா, பெர்சனலை அரசியலில் நுழைக்க மாட்டோம்னு தெளிவா சொல்லணும்.” என்று ரத்தின சுருக்கமா சொன்னாள்.

‘என்ன சொன்னாலும் அவனவன் டிஆர்பி ஏத்தறதுக்கு இஷ்டக்கூந்தலுக்கு எழுதுவானுங்க. இதுல யூடியூப்காரனுங்க வேற’ என்று முனங்கினான்.

  “அப்பறம் சும்மா சும்மா உன்னோட வர்றப்ப, என்னை உன் கட்சி ஆட்கள் ஏதாவது பேசினா, உன் கூட வருவதை தவிர்த்திடுவேன்.” என்று கட்டளையை அடுக்கினாள்.

   “பார்டா… இல்லத்தரசி சொல்லிட்டா அப்பீல் ஏது” என்று சிரிக்க, மருத்துவமனை வந்ததும், மீடியா, தொண்டர்களை தாண்டி அமுதனும், சுரபியமும் இறங்கினார்கள்.

  பலரும் கிசுகிசுக்க ஆரம்பித்திட, “உன் கட்சியிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் வரப்போகுது.” என்று சுரபி சத்தமின்றி, துளி உணர்ச்சியும் முகத்தில் வெளிப்படுத்தி கொள்ளாமல் ஆராவமுதனோடு அதே நேர்கொண்ட பார்வையில் எல்லாரையும் தவிர்த்து நடந்தாள்.
 
     தனி ப்ளோர் வரவும், நெருங்கிய தொண்டர்கள் சத்தமாகவே பேசினார்கள்.
 
  ஏற்கனவே ஆராவமுதன் நேற்று ஒரு தொண்டனை அடித்திருந்தான். இதில் எதிர்கட்சி பெண்ணையே மணந்து, இலக்கியனை காண வரவும், அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

  சிதம்பரம் வேகமாய் வந்து, “கொஞ்ச நேரத்துக்கு முன்ன சுரபி வந்துட்டாளானு கேட்டார்.” என்று அதே குணத்தோடு அருகே வந்து பேசினார்.

  “சொல்ல வேண்டியது தானே. அவளை கூட்டிட்டு வர்றேன்னு வாக்கு தந்தேனே” என்று ஆராவமுதன் இயல்பாய் தான் உரைத்தான்.

“சாரிம்மா.” என்றார் சிதம்பரம்.
 
   “இட்ஸ் ஓகே அங்கிள். போன்லயே சாரி கேட்டிங்களே. உங்க சிட்வேஷன் புரியுது.” என்றாள்.

  அதன்பின் சிதம்பரம் முகம் தெளிவானது.

   ஐசியூ அறைக்குள் செல்ல அதற்குண்டான உடையை அணிந்து மாஸ்க் அணிந்தாள்.

   ஒரே நாளில் துவண்டவராய் நாறாய் கிடந்தார்.

  “இமை மூடி மூடி திறக்க கடினப்பட்டார்.

-தொடரும்.

11 thoughts on “Hello Miss எதிர்கட்சி-25”

  1. Super sis semma epi 👍👌😍 nejamave heartattack vandhuducha🤔 one ah erundhu opposite party la eruka mudiyuma parpom election la yaaru jeyikuranga nu🧐 surabi appa ku ponnu vazkhai ya vida katchi dhan mukkiyam 😕

  2. Wow super. Fantabulous narration. Two opposite party together in their life. Very very different concept. You take away this is in a unimaginable way sis. Keep rocking sis. Cute love, action, sentiment, romance. Full commercial aspect with different story line. Excellent sis.

  3. Wow wow really super sis ruling party opposite party onnu ah husband and wife ah ore veetula vazhuraga .
    Illakiyan avar natraj vida better than thonuthu yen na natraj avarukku surabi oda happiness ah vida politics than perusu annaikku pallavi sonnaga athu unmai nu thonuthu

  4. Kalidevi

    sonna poi innaiku unmaiya aeiduchi ilakkiyan ku aana avar paiyan virumbina mari rendu perum onna sernthu vazhanumnu tha aasai patu irukaru ipo surabi intha problem nala divorce panrenu sonnathum unmaiya udambu mudiyama aeitu irukaru. ithuvum nalla iruku opposite party hsband and wife ah ore veetla irukanga athula avanga velaiya kondu varala . velaiya pakum pothu athu thani prachanaiya pathu pana poranga . nice . eppadiyo rendu onna irukurathu illakiyan and pallavi santhosa padranga intha natraj tha akmark arasiyal vathiyave irukaru politics kaga ponnu vazhkaiya kuda pagadaiya use panraru

  5. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 25)

    அச்சோ..! சொன்ன பொய் இவங்களுக்கே எதிரிடையா மாறிடுச்சா..? அது சரி, ரெண்டு பேருமே எதிரெதிர் துருவங்கள் மாதிரி எதிரெதிர் கட்சியில இருக்காங்க. இதுல எப்படி செய்தியாளர்கள், யூட்யூப்காரர்கள், மீடியாவை மீறி இவங்க தனிப்பட்ட வாழ்க்கைன்னு வாழ்ந்துட முடியும்…? அதுவும் அரசியல்ல, எதிரெதிர் கட்சி வேற…?
    நிறைய போராடணும், நிதைக்கும் பத்திரிகையில தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் இணைச்சு வைச்சு டெய்லி ஒரு செய்தி வரும், டெய்லி சொல்லடியும், கல்லடியும் படணும். நிறைய காயப்படணும்,.. தனிப்பட்ட வுயேட்சையான வாழ்க்கையிலயே புருசன் பொண்டாட்டியை பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசி குழப்பிடுவாங்க,
    கும்மியடிச்சிடுவாங்க. இவங்களோடது பொது வாழ்க்கை வேற..? என்ன பண்ணி வைக்கப் போறாங்களோ..?

    அமுதனும் சுரபியும் சொல்றதும் பேசறதும் வேணுமின்னா சுலபமா இருக்கலாம், ஆனா நடைமுறைக்கு சுத்தமா ஒத்து வராது. ஒரு சின்ன நெருப்பு பொறி போதும், பத்திக்கிட்டு எரிள. அது மாதிரி ஒரு சின்ன ஈகோ போதும், பெருசா clash ஆக.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *