அத்தியாயம்-31
இலக்கியன் சிதம்பரத்திடம் “ஆராவமுதன் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னமும் சில ஏரியாவை கவர் பண்ணாம இருப்பதா பேசிக்கறாங்களே? ஏன் போகலை?” என்று விசாரித்தார். இலக்கியனிடம் சில தனிப்பட்ட அமைச்சர்கள் காதில் போட்டு வைத்தனர். அதன் காரணமாக கேட்டார்.
சிதம்பரம் தயக்கமாய் பதில் தராமல் கையை பிசைய, “என்ன சிதம்பரம் எனக்கு உடம்பு தான் சரியாகிடுச்சே. எதுனாலும் சொல்லுங்க.” என்ற பொழுதும் அமைதிக்காத்தார்.
“ஆராவமுதன் மக்களை குறைவா பேசிய வீடியோவால் பிரச்சாரம் செய்வதுக்கு யோசிக்கறானா?” என்று கேட்டார்.
சிதம்பரம் “தெரியலைங்கய்யா.. தம்பிக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனா தம்பி சுரபியை உண்மையா நேசித்தும் இப்படி பண்ணிட்டதால…” என்று இழுத்து கூறவும், “ஆராவமுதனை வரசொல்லு” என்றார். ஆராவமுதனிடம் பேசிவிட்டு சுரபி அன்றே பல்லவியை அழைத்துக் கொண்டு அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள்.
தன்னந்தனியாக ஆராவமுதன் சுரபியின் நினைவில் தவித்து, தந்தை இலக்கியனை காண வந்துவிட்டான். அதனால் இலக்கியன் வீட்டில் வாசம் இருந்ததால் ஆராவமுதனை அழைத்து வரக்கூறினான்.
அதற்குபின் இருபது நிமிடம் கழித்து, ஆராவமுதன் வந்து சேர்ந்தான்.
“என்னடா…. பிரச்சாரத்துக்கு முன்ன போன அளவு இப்ப எங்கயும் போகலையா?” என்று கேட்டதும், “நைன்டி பிரசன்டேஜ் பிரச்சாரம் முடிந்தது.” என்றான்.
இலக்கியனோ சிதம்பரத்தை பார்த்து, “அப்ப மீதி பத்து சதம்? என்ன சிதம்பரம் இப்படி பேசறான். அரசியல் என்பது விருப்பு வெறுப்பை துறந்த இடம்.
நீ தேர்தல் பிரச்சாரத்துக்கு போகலைன்னா, நம்ம கட்சி ஆட்கள் தொண்டர்கள் எல்லாம் தமிழக எழுச்சி கட்சியை கேள்வி கேட்பாங்க. நம்மளை நம்பி, நமக்கு பின்னால எத்தனை பேர் இருக்காங்க.
அப்பறம் சரியான பதில் இல்லைன்னா ஒவ்வொருத்தரா கட்சியிலிருந்து நீங்கிடுவாங்க.
மக்களுக்காக மட்டும் நாம இந்த இடத்துல வர்றதில்லைன்ற உண்மை மக்களுக்கே தெரியும். பலரும் பதவி, பணம், கொஞ்சம் சமூக சேவை, இதெல்லாம் பார்க்கவும் வர்றாங்க.” என்று இலக்கியன் கூற ஆராவமுதன் சலித்து கொண்டு தந்தையருகே வந்தான்.
“பச் நான் என்ன மீடியாவை பார்த்தோ, இல்லை பத்திரிக்கையாட்களை பார்த்தோ, தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் ஏதாவது கேட்டுடுவாங்கன்னு பயந்து போகாம இல்லை.
இதே மீடியா முன்னாடி தான் நானும் நல்லது செய்திருக்கேன். சுரபியை விரும்பறதா பகிரங்கமா சொல்லிருக்கேன்.
ஏன் அவளை கல்யாணம் செய்து தற்காலிக முதல்வரா பதவில இருந்தேன்.
பிரச்சாரத்துக்கு இந்த நொடி போனாலும் என்னால மக்கள் கேட்கற கேள்விக்கும், பத்திரிக்கை மீடியா, எவன் எது கேட்டாலும் பதில் சொல்ல முடியும். அதோட இது பெரிய விஷயமில்லை.” என்றான்.
இலக்கியனோ, “பிறகு… ஏன் போகலை” என்றதற்கு பதில் சொல்லாமல், “போவேன்.” என்று வெறுப்பாய் கூறினான்.
“எப்ப தேர்தல் முடிந்தப்பிறகா?” என்று கேட்க, ஆராவமுதன் தந்தையை முறைத்தான்.
“நான் சொன்னேனே… அவ உன்னை விரும்பிய சுரபி இல்லைனு. நீ தான் அவளை எல்லாம் வசப்படுத்துவது ரொம்ப சுலபம்னு சொன்ன” என்றதும் பல்லை கடித்தான் ஆராவமுதன்.
“நான் கிளம்பறேன்” என்று எழுந்துக்கொள்ள, “எங்க?” என்றார்.
“நான் ஒன்னும் வீட்டுக்குள்ளயே அடைந்துக்கிடக்க மாட்டேன். ஆப்ட்ரால் இந்த விஷயம் எல்லாம் தேர்தலில் மாற்றத்தை தந்திடாது. அவனவன் டிரக்ஸ், பொம்பள விஷயம், மதுக்கடை, போக்சா சட்டம் இதிலெல்லாம் மாட்டியே வெளியே வந்து மக்களை சந்திக்கறாங்க. நான் கொலை குற்றம் பண்ணலையே. சிதம்பரம் அங்கிள் பிரச்சாரத்துக்கு எங்க எந்த தொகுதியை சந்திக்கணும். என்னோட அப்பாயிண்மெண்டை திரும்ப சொல்லுங்க” என்றான்.
அதன்பின் அசுர வேகத்தில் மக்களை சந்திக்க கிளம்பினான்.
கத்தை கத்தையாக நோட்டுக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு கரைந்தது.
அதிலும் கட்அவுட் சில இடத்தில் மட்டும் வைக்க அனுமதி அளித்திருக்க, அங்கெல்லாம் பெரிய பெரிய புகைப்படங்கள் ஆரவமுதன் நிலசரிவு மக்களுக்கு உதவுவது போலவும், ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவன் அனாதை ஆசிரமத்தில் துணிமணி, உணவு வழங்குவது, மாற்று திறனாளிக்கு மூன்றுசக்கர சைக்கிள் வண்டி வழங்கியதல், முதியவர்களுக்கு கண்ணாடி, இலவச மருத்துவ முகாம் என்று முன்பு எடுத்த புகைப்படங்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் முன் மீடியாவிடம் “அது நான் பேசியது தான் ஏஐ எல்லாம் இல்லை. ஆனா பேசியதை துண்டு துண்டா கட் பண்ணி பதிவு பண்ணியதால் நான் என்ன பேசினேன்னு முழுமையா மக்ககளுக்கு தெரியாம போச்சு. இட்ஸ் ஓகே… மக்களுக்கு என்னை பத்தி தெரியும்.” என்று பேசிவிட்டு நிற்காமல் கடந்தான்.
சுரபியோ அதையெல்லாம் அவளும் ஊடகத்தின் மூலமாக பார்வையிட்டு, “கரெக்ட் தான், பெரிய பெரிய தப்பு செய்தவனை எல்லாம் மறந்துடறவங்க தான் மக்கள். யூ ஆர் ரைட் ஆராவமுதன்’ என்றாள்.
நிவாஸோ, “மேம்… தொகுதிக்கு போகற நேரம் வந்துடுச்சு” என்று கூற, வர்றேன் நிவாஸ்” என்று வயிற்றை பிடித்து நடந்து வந்தாள்.
”இந்த நிலைமையில் கஷ்டமாயில்லையா?” என்று கேட்டான் நிவாஸ்.
“என்னுடைய கனவே இந்த இடத்தை இலக்கை அடைவது தான் நிவாஸ். அப்படியிருக்க, கடந்த ஐந்து வருடம் எதிர்கட்சி இளைஞர் அணி தலைவரா இருந்து, இப்ப இந்த சந்தர்ப்பத்தை விடமுடியாதே.” என்றாள்.
“உங்களை மாதிரி யாரையும் பார்த்ததில்லை.” என்றான் நிவாஸ்.
சுரபி அவன் விழியை சந்திக்க, “முன்ன உங்க மேல…, இப்ப ஆச்சரியப்படுத்தற லேடியா மதிக்கறேன்.” என்று காதல் என்ற வார்த்தையை மிக நாசூக்காய் தவிர்த்து, மென்னகை புரிய, சுரபியோ வழிமொழிவது போல தேர்தல் பிரச்சாரத்திற்கு அவளுமே தொகுதிக்கு தயாரனாள்.
மக்களில் பெரும்பான்மையானவர்களை நேரில் சந்தித்து ஓட்டு கேட்க செல்ல, சில இடத்தில் வளையல் போட்டு மகிழ்ந்தார்கள்.
அதெல்லாம் கூட செய்தியில், பாமரனின் வீட்டில் ஜனநாயக விடியல் கட்சியின் இளைஞர் அணி தலைவிக்கு வளையல் அணிந்து மக்கள் மகிழ்ந்தனர்.’ என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தனர்.
ஆராவமுதன் அதை வாசிக்கும் போது தான், “ஏழாவது மாதம் முடிந்திருக்குமே. ஏன் வளைகாப்பு வைக்கலை?” என்று சிதம்பரத்திடம் கேட்டான்.
“தெரியலையே தம்பி. வளைகாப்பு விழா அப்பா வீட்டு சார்பில் வைப்பாங்க” என்றுரைத்தார்.
உடனடியாக ஆராவமுதன் அத்தை பல்லவிக்கு அழைத்து விசாரித்தான்.
கணவரிடம் மகள் முட்டி மோதி வீட்டில் இருப்பதை உரைக்க, “அத்தை... வளைகாப்பு விழா வையுங்க. நான் வர்றேன்.” என்று கூறினான்.
பல்லவியோ “நிஜமாவா” என்று கேட்க, “அவ வயிற்றில் இருப்பது என் குழந்தை அத்தை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கறப்ப கொண்டாடப்படுற விழா. அப்படியிருக்க நான் வருவேன்.” என்றான்.
கணவர் நட்ராஜிடமும், மகளிடமும் கூட கலந்து ஆலோசிக்காமல் அடுத்த வாரத்தில் வளைகாப்பு விழாவை கொண்டாட முடிவெடுத்தனர்.
மாலை நேரம் தேர்தல் பிரச்சாரமோ, பேச்சோ, அலுவலக சந்திப்போ எதுவும் இல்லாமல் இருந்த சமயம் தன் வீட்டு சொந்தத்தை வரவழைத்து வளைகாப்பு நடத்த அலங்காரம் செய்ய சொல்ல, சுரபியோ “யாரை கேட்டு இதெல்லாம் கொண்டாட முடிவெடுத்திருக்கிங்க? எனக்கு இந்த பிறந்த வீட்டு சிறப்பு எதுவும் வேண்டாம்” என்று கோபமாக கத்தினாள்.
“மாப்பிள்ளையும் இலக்கியன் அண்ணாவும் வர்ற நேரமா வம்பு பண்ணாத சுரபி” என்று பல்லவி கூறவிட்டு நகர, சுரபி நிதானமடைந்தாள்.
அவள் கேட்க நினைத்தவையை, நட்ராஜ் கேட்டறிந்தார். “இலக்கியன் வர்றாரா? ஆராவமுதன் வர்றாரா?” என்று கேட்க, “தமிழ்ல தானே சொன்னேன்.” என்று கோணித்து ஆக வேண்டிய வேலையை, கவனிக்க சென்றார்.
ஆராவமுதன் வருவானா? ‘பழிக்கு பழி’ என்று சுரபி அவனை பதம் பார்த்து வைத்திருக்க, அவன் இவ்விடம் வருவது அத்தனை உவர்ப்பான விஷயமில்லை.
ஆனால், ஆராவமுதனிடம் பேசி பலநாட்கள் கடந்துவிட்டது போல பிரம்மை ஏற்பட, அவனை சந்திக்க காத்திருந்தாள்.
பட்டுபுடவையில் அலங்காரம் முடித்து தேவதையாக தோன்றினாள். சாதாரணமாகவே அப்சரஸ் அழகியாக காட்சியளிக்கும் சுரபி, தாய்மை கோலத்தில் கூடுதலாக அழகாகவே இருந்தாள்.
நேரம் நெருங்க நெருங்க அவ்விடம் பரபரப்பானது.
இலக்கியனும் ஆராவமுதனும் வருவதாக தகவல் வரவும் கூடுதலாக பாதுகாப்பிற்கும், அவர்களை மிகவும் நெருங்கவிடாமல் தடுக்க ஆட்களையும் நிவாஸ் ஏற்பாடு செய்திருந்தான்.
நான்கைந்து கார் வழமையாக வட்டமிட, ஆராவமுதனின் தனிப்பட்ட காரில் வந்து இறங்கினான்.
தந்தை இலக்கியனின் கையை பிடித்து இறங்கியவனை நிவாஸ் தான் வரவேற்றான்.
சிதம்பரம் இலக்கியனோடு மெதுவாக நடக்க, ஆராவமுதனோ, மனைவியை தேடினான்.
“கார்டன்ல ரைட் சைட்ல விழா அரேஞ்ச் ஆகுது சார். மேம் இன்னமும் மெஹந்தி வைக்கலை. அதான் டிலே ஆகுது. இப்ப வந்துடுவாங்க. நீங்க அதுக்கு முன்ன பார்க்கணும்னா சொல்லுங்க உங்களை கூட்டிட்டு போறேன்” என்று வந்தான்.
“அவளா ஸ்டேஜ் வரும் பொழுது பார்த்துக்கறேன்” என்று முடித்துக் கொண்டான்.
நிவாஸ் ‘ஓகே சார்’ என்று தலையாட்டி நகர்ந்து விட, பல்லவி இலக்கியனை ஆராவமுதனை வரவேற்க வந்தார். இம்முறை நட்ராஜும் ஆத்மார்த்தமாக வந்து இலக்கியனை வரவேற்றார். பழைய நட்பில் மீண்டும் திளைக்கவில்லை என்றாலும், ஓரளவு சுமூகமாக பேசினார்கள்.
ஆராவமுதனிடம், பேச தயங்கி இலக்கியனிடம் கூறுவது போல ஜாடையாக, “சுரபி என்னிடம் பேசறதை குறைச்சிட்டா. எல்லாம் இந்த பாழா போன அரசியலால், என் மகளை இழந்திடுவேனோனு பயமாயிருக்கு.
வாழ்க்கையில் சூழ்நிலை புரியாம நண்பனை பகைச்சிட்டேன். இப்ப மகள் பேசுவதில்லை என்றதும் வாழ்க்கையில் யாருக்காக இந்த ஓட்டம்னு பயம் வருது.” என்றார்.
இலக்கியனோ நட்ராஜிடம், “உங்க பொண்ணுக்கு புத்திமதி சொல்லற அளவுக்கு அவ குறைந்து போகலை. சொல்லப்போனா அரசியலில் அவளுக்கு நிகர் யாருமில்லை. இந்த சின்ன வயசுல நான் வியந்து பார்க்கறவ சுரபி. என் மருமகளுக்கு என்னையே மன்னித்து மறந்து மாமானு கூப்பிடும் அளவுக்கு தெரிந்திருக்குன்னா, நிச்சயம் அவளா உங்களையும் புரிந்துப்பா.
நீயும் தப்பு செய்யலை நட்ராஜ். யாராயிருந்தாலும் பதவி பணம் என்று வர்றப்ப மாறுவது இயல்பு. வழிநடத்த ஒரு ஆள் சரியா இருக்கணும்.” என்று ஆறுதலுரைத்தார்.
ஆராவமுதனோ, ‘முதல்ல அவ என்னையே புருஷன்னு பார்க்க மாட்டா. இதுல இவங்க வேற.’ என்று கடிகாரத்தை பார்வையிட, லேசான சலசலப்பு சத்தம் கேட்டது.
நான்கு பக்கம் பணிப்பெண்கள் அலங்காரம் செய்த நிழற்கொடையை ஏந்தி வர, அதில் நடைப்பாதையில் பூக்களில் நூவியிருக்க, மென்பாதம் வைத்து நடந்து வந்தாள்.
அவளது கண்கள் ஆராவமுதனை தேட, அவனோ எழுந்து வந்து கைகொடுத்து, அவள் அமருமிடத்தில் உதவினான்.
அவை பார்க்க ஒரு ராணிக்கு ராஜாவின் உதவியாக காட்சியளித்தது. பல்லவி கூட, பூரித்து முடிக்க வளையல் அணிவித்தார்.
“நீங்க வளையல் போட்டு விடுங்க மாப்பிள்ளை” என்று ஆராவமுதனிடம் பல்லவி கூற, தன் பேண்ட் பேக்கெட்டில் மரகதம் பதித்த வளையலை எடுத்தான். சுரபி நிமிர்ந்து பார்க்க மறுக்க, அவனுமே அவளை நேர்கொண்டு பார்வையிட தவிர்த்தான்.
அவள் கையில் மரகதம் பதித்த வளையலை அணிவித்திட, முயலும் பொழுது உள்ளங்கையை சுரண்டினான்.
சுரபியோ நெளிந்தபடி, விழிநிமிர, இவனும் அவள் விழியோடு விழி கலந்து, ஒரு மாயப் புன்னகையை வீசி “போட்டோஸ் எடுக்கறாங்க சுரபி” என்றான். அங்கே தனிப்பட்டு எடுக்கப்படும் வீடியோ கவரேஜை தவிர்த்து செய்திக்கென்று எடுக்கப்படும் அவளது தனியுரிமை பெற்ற செய்தி அலைவரிசையும் இருவரது நெருக்கத்தை படம் படிக்கின்றதே.
அதற்கு பிறகு சந்தனம் தடவி, குங்குமமிட்டு ஆராதனை செய்து, பூவோடு, சில பேப்பரை சுக்கல் சுக்கலாக கிழித்து அவள் தலையில் போட்டான்.
அந்த பேப்பரை கண்டவள் வாய் பிளந்து பார்வையிட, கண்சிமிட்டி பிறை நெற்றியில் முத்தமிட்டு ”உன்னை எதுக்காகவும் மிஸ் பண்றதா இல்லை பேபி.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான்.
ஏற்கனவே வண்ண காகிதம் கீழே சிதறியிருக்க, இவன் கிழித்து போட்ட வெள்ளை காகிதங்களும் வண்ணத்தோடு வண்ணமாக கலந்தது.
பல்லவிக்கு அது என்ன காகிதமென்று தெரிந்ததால், இன்ஸ்டன்டாக இறைவனுக்கு ஒரு நன்றியுரைத்தார்.
நட்ராஜ் இலக்கியன் என்று அதே போல சடங்கை செய்யவும் முகமலர்ந்து விகாசித்தாள் சுரபி.
உணவு உண்ணும் வேலையில் கூட சுரபி ஆராவமுதன் பேசிக்கொள்ளவில்லை.
நேரம் கடக்கவும், “சரிங்க அத்தை நாங்க கிளம்பறோம்” என்று எழுந்துவிட்டான்.
பல்லவி நட்ராஜ் மாறி மாறி பார்க்க, சுரபியோ அவனை தடுக்கவில்லை. இலக்கியனும் ஆராவமுதனும் வந்த வேகத்தில் புறப்பட்டார்கள்.
தேர்தல் பரபரப்பாய் நடந்தேறியது. தமிழக மக்கள் வாக்கு சாவடியில் குவிந்தனர்.
எப்பவும் போல எந்தயெந்த கட்சி வெல்லும் வாய்ப்பு உண்டு என்று வாதங்கள் நிகழ்ந்து, பிரபலங்கள் ஓட்டு போடும் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் நிறைந்தது.
After Some Days….
தேர்தல் என்னும் புயல் ஓய்ந்து முடிவடைந்தப்பின், சுரபி ஆராவமுதன் இருவருமே தனிதனியாக இருந்தார்கள். சுரபிக்கு பிரசவவலி நேரம் நெருங்கியது.
பிரபல மருத்துவமனையில் வசதிக்கும், பாதுகாப்புக்கு குறைவின்றி, ஆண் சிசுவை ஈன்றெடுத்தாள்.
ஆராவமுதன் அன்று மருத்துவமனைக்கு வந்து மகனை நேசத்துடன் கண்டான்.
சுரபியிடம், “ரொம்ப படுத்திட்டானா” என்று கேட்க, “உன்னை விட கொஞ்சம் குறைவு தான்” என்றாள் சுரபி.
தெற்றுபல் தெரிய அழகாய் சிரித்த ஆராவமுதன், சுரபியின் சிரத்தை ஆதரவாய் கோதிவிட்டான்.
பெயர் சூட்டும் விழாவுக்கு வந்தவன், குழந்தைக்கு ‘ஆழியன்’ என்று பெயரிட்டு தூக்கி கொண்டான்.
மறுகையால், சுரபிக்கு கரத்தை நீட்ட, சுரபி இரண்டு நொடி அவன் விழியில் காதலை கண்டு கரம் கோர்த்தாள்.
பல்லவி பேரனையும் மகளையும் மாப்பிள்ளை அழைத்து செல்ல, கண்குளிர மனமார ஆசிர்வாதித்து அனுப்பி வைத்தார். நட்ராஜ் மகளிடம், “நீ எப்பவும் உன்னோட பாதையில் சரியா இருக்கம்மா. நான் தான்” என்று துவள, இலக்கியனோ, “அட எப்பவும் பசங்க தான் தப்பு செய்வாங்களா என்ன? ஒரு சேஞ்சுக்கு பெத்தவங்க தவறு செய்து சமாதானம் செய்துக்கலாம்” என்று தட்டிக் கொடுக்க, ஆராவமுதன் தன் மனைவி சுரபியையும், மகன் ஆழியனையும் வீட்டுக்கு அழைத்து சென்றான். இம்முறையும் பல்லவி மகளின் நலனுக்காவும் பேரனை கவனிக்கவும் கூடவே வந்தார்.
எல்லா பணியை செய்ய ஆட்கள் அமர்த்தப்பட்டாலும் அதை ஏவி செயல்படுத்த ஒரு முதியவர் வேண்டும் அல்லவா!
இனிமையாக நாட்கள் நகர, தமிழகமே பரபரப்பாய் இயங்கியது.
தேர்தலில் வாக்கு பதிவாகி முடிவு வெளியாகும் நாளும் வந்தது.
ஆராவமுதன் சுரபி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாச ஓட்டுக் கணக்கெடுப்பில் முன்னவும் பின்னவும் லீடிங்கில் இருப்பதாக மாறிமாறி வந்தார்கள்.
இறுதியாக…. மக்கள் எதிர்பார்த்தவரே வெற்றி பெற்றார்.
ஆம்… தமிழக முதல்வராக சுரபி பொறுப்பேற்றிருந்தாள்.
அவளது மிடுக்கும் கண்டிப்பான பார்வையும், எதிராளியை வீழ்த்தும் பேச்சும் துளியும் குறையாமல், சொல்லப்போனால் கூடுதலாக குரல் கூடியிருந்தது.
இது கனவு வெற்றிப்பெற்ற மிதப்பு.
எல்லோரும் தான் கனவு காண்கின்றார்கள். ஆனால் யாருமே வெற்றிக்கு செல்லும் பாதையில் தோல்வி இடைஞ்சலாக வந்தால் துவண்டு போராடுவதை நிறுத்தி விடுகின்றனரே. இந்த சுரபி தொடர் போராட்டத்தையுமா தோல்வியையுமா ஏணியாக மாற்றிக்கொள்ளும் தந்திரத்தையும் கற்று தேர்ந்தாள்.
இன்று….
சுரபி மிடுக்காய் காட்டன் புடவை அணிந்து, தன் புருவத்திற்கு மத்தியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்து, நெற்றி வகிட்டில் செஞ்சாந்து பூசினாள்.
பல்லவியோ, “அங்க ஆழியன் கிளம்பிட்டான். அவனுக்காகவாது யோசித்திருக்கலாம்” என்று புலம்ப, “அய்யோ அம்மா… என்னவோ கட்சியில் கைகுழந்தை வச்சிட்டு நான் மட்டும் கஷ்டப்படுவதா புலம்பற, இதுக்கு முன்னவே நிறைய பெண் அரசியல்வாதிகள் இது போல குழந்தையை வச்சிட்டு சட்டபேரவைக்கு வந்திருக்காங்க.
ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் செனட் சபையில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருக்காங்க.
2012 ல ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் அமர்வில் இத்தாலியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா ரோன்சுல்லி தனது மகளோட சபையில் இருந்தாங்க.
2015ல அர்ஜென்டினா நாடாளுமன்ற உறுப்பினர் விக்டோரியா டோண்டா தனது எட்டு மாத குழந்தைக்கு காங்கிரஸ் அரண்மனையில் தாய்ப்பால் கொடுத்தாங்க. அதுக்கு கலவையான எதிர்வினைகள் வந்துச்சு.
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் தனது ஐந்து மாத மகன் டியாகோவுடன் கரோலினா பெஸ்கான்சா.
ஸ்வீடிஷ் எம்.இ.பி.யான ஜைட் குட்லேண்ட், தனது எட்டு மாத மகன் யூனோவை மார்ச் 2017 இல் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்தபோது இரண்டு உணர்ச்சிமிக்க உரைகளையும் நிகழ்த்தினாங்க.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் குளோ ஸ்மித் அவங்களுமே குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தாங்க. இப்ப இல்லை.. 2012 ல இருந்தே இதெல்லாம் சாத்தியம் ஆகியிருக்கு.
அப்படியிருக்க…. நானும் என் பையன் ஆழியனை வச்சிட்டு, சட்டபேரவைக்கும், செயலகத்துக்கும் போறதுல என்னம்மா தப்பு?
நீ பயந்து யோசிக்கற அளவுக்கு இங்க சீனே இல்லை.
அச்சச்சோ அய்யய்யோனு பதறுற வரை தான் எல்லாமே பேசப்படும் பொருளா பார்ப்பாங்க. இது இயல்பு, எந்த வேலை செய்தாலும் வேலையில் தோய்வில்லாம அதே சமயம் கைக்குழந்தையை பார்த்து கவனிச்சிக்கறதுல எந்த பிரச்சனையும் நேர்ந்திடாது. அதோட பீடிங் டைம்ல மட்டும் ஆழியன் என்னோட இருப்பான். மத்த நேரம் ‘கேர்டேக்கர் லிண்டா’ என்னோட இருப்பாங்க. அதையும் தாண்டி அவனை சமாளிக்கணும்னா, உன் மாப்பிள்ளையிடம் உன் பேரனை கொடுத்துடறேன்.” என்று கூறி நகைத்தாள்.
பல்லவி அறிந்த ஒன்றே. சட்டபேரவையில் குழந்தையோடு சுரபி அழகாக கையாளும் விதத்தையும் டிவியில் ஒளிபரப்பி செய்தியானதே. அது மட்டுமா?
என்ன தான் ஆராவமுதன் கணவன் என்றாலும் எதிர்கட்சியாக அவனை சந்திக்க எந்த சாதகமும் இல்லாது முடிவை எடுக்கின்றாள். இதனால் கட்சியில் கூடுதலாக மதிப்பும் மரியாதையும் பெறுவதை நட்ராஜ் தினமும் வந்து புகழ்ந்து பேசுகின்றார்.
அதோடு எதிரே இலக்கியனும் அமர்ந்திருக்க, அதே கம்பீரம் மாறாது ஆட்சி செய்பவளை வியந்து இலக்கியனும் மருமகளை பாராட்டி பல்லவியிடம் கூறியிருந்தார். அந்த பெருமையும் சந்தோஷமும் ஒருபுறம் இருக்க, சாதாரண தாயின் புலம்பலாக “என்ன சொல்லியும் கேட்கப் போறதில்லை. இந்த தமிழகத்தையே ஆளப்போற. உன் வீட்டையும் உன் குழந்தையும் கவனிச்சிக்க தெரியும்னு நம்பறேன்.” என்று பல்லவி முகம் வாடி அனுப்ப தயாரானார்.
பல்லவிக்கு பேரன் ஆழியனை இந்த இடைப்பட்ட நேரத்தில் பிரிந்திருக்க கஷ்டமாக இருந்தது.
ஆறு மாதம் ஆனாலாவது வீட்டில் வேறு ஆகாரம் தரலாம். இன்னமும் ஆறு மாதம் தொடவில்லையே.
ஆராவமுதன் வரவும், பல்லவி, “சரிடி.. நான் பேரனோட இருக்கேன். நீ நேரத்துக்கு வா” என்று நகர்ந்தார்.
மாமியார் தலை மறையவும், “ஜனநாயக விடியல் கட்சியின் இளைஞர் அணி தலைவியா இருந்து, இப்ப தமிழக முதல்வரா மாறியிருக்க. அதுவும்…. தமிழக எழுச்சி கட்சியில் முதல்வரா இருந்த என்னை தோற்கடிச்சி… ம்ம்ம்… மேடம் சட்டசபைக்கு தயாராகிட்டிங்களா” என்று கேட்டு அவளருகே வந்தான்.
“அரசியலை இந்த ரூம்ல பேசக்கூடாதுன்னு விதிமுறை இருக்கு. நீங்க அதை அடிக்கடி மீறறிங்க மிஸ்டர் ஆராவமுதன்” என்றாள்.
“ஹலோ மிஸ் எதிர்கட்சி அப்படி பார்த்தா… நான் உன் போட்டோவை அப்லோட் செய்து நீயும் நானும் விரும்பறோம், கல்யாணம் செய்துக்க போறோம்னு இக்கட்டை உருவாக்கியதுக்கு இங்க தான் சாரி கேட்டதே.. நினைவிருக்கா.” என்றான்.
அதை எப்படி மறக்க முடியும் குழந்தையை அழைத்துக் கொண்டு வந்த அன்று, ஆழியனுக்கு பீடிங் கொடுத்து உறங்க வைத்ததும், “சாரி சுரபி… என்னயிருந்தாலும் எல்லாம் தெரிந்தும் நம்ம போட்டோவை வெளியிட்டு உன்னை பேசும் பொருளா மீடியாவிடம் இக்கட்டில் தள்ளி தப்பு பண்ணிட்டேன். அதுக்காக நீயும் என்னோட வீடியோவை பதிவு செய்த, இரண்டும் பழிக்கு பழியா மத்தவங்க நினைச்சிக்கட்டும். ஆனா நான் வலிக்கு வலியே மருந்தா, நீ தந்ததா நினைச்சிக்கறேன்.
செய்த தப்புக்கு சாரி கேட்டுட்டேன். என்னால உன்னை பிரிந்து வாழ முடியாது. இந்த உலகத்துல சிறந்த முதல்வரா இருக்கணும்னா, முதல்ல தனிமனித ஒழுக்கத்துலயும் சரியா இருக்கணும்.
நீ சரியா இருக்க, இதுவரை செய்த உதவிகளை கூட, நீ அரசியல் என்ற போர்வைக்குள் செய்யாம மனதார செய்வதை நான் உணர்ந்திருக்கேன்.
அதோட, நெப்போடிஸம்ல அரசியலில் குதிக்க வர்ற எனக்கே பதவி ஆசையிருக்கும் போது, அதுவே கனவா நினைச்சி ஒவ்வொரு அடியும் எடுத்து வச்சவ நீ. அரசியலில் இந்த தந்திரம் கூட இல்லாம ஜெயிக்க முடியாது.
தேர்தல் முடிவு இன்னமும் வெளியாகலை. ஆனா அதுல யார் ஜெயித்தாலும் நான் சந்தோஷப்படுவேன். ஏன்னா… இங்க அரசியலில் ஆதாயம் தேடுறதை விட, மக்களுக்கு தேவையானதை தேவையான நேரத்துல எல்லாம் கிடைக்க வழிவகை செய்தாலே, நல்ல தலைவரா, நல்ல மனிதனா மாறலாம்னு என்னோட குரு உன்னை பார்த்து கத்துக்கிட்டேன்.” என்று நீண்ட உரையும் மன்னிப்பும் கேட்டானே.
எல்லாவற்றையும் கேட்டு, “மிஸ்டர் ஆராவமுதன் நான் அதே மிஸ் எதிர்கட்சி இல்லை. *மிஸஸ் ஆளுங்கட்சி*யா மாறிட்டேன். நீங்க இன்னமும் தப்பா என்னை கூப்பிடறிங்க.” என்று நடந்தவையை நடக்காதது போல பேசினாள்.
“இப்பவும் உன்னை பார்க்க ‘மிஸ்’ மாதிரி இருக்க, ‘மிஸஸா’ தோணலையே.” என்று இடையை வளைத்து நெருக்கமாய் நின்றான்.
அடுத்து அவன் செய்ய போகும் காரியத்திற்கு ஏற்றவாறு தன்னை மறந்து, தன் உலகத்தையே மறந்து, இமை மூடி ஆராவமுதனின் இதழ் முத்தம் பெற மெய்மறக்க, அவனும் தாய்மையில் கூடுதல் அழகாக நின்றவளின் சேலை மடிப்பை சரிசெய்து விட்டு ‘அமுதசுரபி’யாக இணைந்திருந்தனர்.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
வணக்கம்…
கதை பிடிச்சிருக்கா? எனக்கு அரசியல் தெரியாது. எங்க வீட்ல பெரிப்பா, அப்பா, சின்ன மாமா, அதோட அண்ணா அத்தை பசங்க, இப்படி பேசறதை வேடிக்கை பார்த்திருக்கேன்.
அப்பா பெரிப்பா ஒரு டீம், எங்க சின்ன அத்தையோட மாமா ஒரு டீம். அரசியல் பத்தி பேச ஆரம்பிச்சா வீடு உச்சஸ்தாதியில் ஆர்கியூமெண்ட் கேட்கும்.
சில நேரம் ரொம்ப சுவாரசியமா இருக்கும்.
மத்தபடி எனக்கு இந்த அரசியலில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. அதாவது தனிப்பட்ட விதத்தில் இவங்க என்று ஆதரவு தரவே பிடிக்காது.
ஆப்டர் மேரேஜ் பிறகு தான் அரசியலை பத்தி ஆன்னா ஆவன்னாவே புரிந்துக்க ஆரம்பிச்சது.
இன்னமும் முழுதா தெரியாது. ஏதாவது தப்பும் தவறுமா இருந்தா சொல்லுங்க. எடிட் பண்ணிடலாம். கதையின் ஓட்டத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் தந்தேன்.
அப்பறம் ரொம்ப நெருக்கமான அரசியல் நிகழ்வுகள் என் வாழ்வில் என்று யோசித்தா. எங்க ஏரியாவுல ஒருமுறை பாப்பாவுக்கு உடல்நிலை சரியில்லைன்னு டாக்டருக்கு காட்டிட்டு ரிட்டன் வர்றப்ப *ஜெயலலிதா அம்மா*வை பார்த்தேன். புல்லட் ப்ரூப் வண்டியில் முன்ன ஆயுதம் தாங்கிய பாதுகாவலரோட சென்றார்கள். அப்ப நேர்ல பார்த்த கூட்டத்தை. ஒரு ஐயர்ன் லேடியை வாழ்க்கையில் நேர்ல பார்த்ததில் சந்தோஷப்பட்டேன். உண்மையிலா பாதுகாப்பு படைகள் எல்லாம் எல்லாருக்கும் தரமாட்டாங்க. ரியாலிட்டி அதான்.
வேற… ஆங்.. எப்பவும் அரசியல் கதையில் ஆண் அரசியல்வாதி பார்த்திருக்கலாம். நான் பெண் அரசியல்வாதியை வச்சி எழுத ஆசைப்பட்டேன். ஆன்டிஹீரோவை கூட எழுதாம ஆன்டிஹீரோயின் எழுதின ஆளுதானே நானு.(நான் கொஞ்சம் அரக்கி) சிலர் நாம என்ன எழுதினாலும் ஈ அடிச்சி கான்சப்டை சுடறாங்க. எத்தனை தடவை புலம்பறது தெரியலை.
அப்பறம் நிறைய பேசணும்னு தோணுது. ஆனா ஏதாவது தவறா புரிந்துக்கொண்டால் என்ன செய்வதுன்னு யோசனையும் இருக்கு. ஆனா எப்பவும் நினைப்பது சரியென்றால் பேசறது தப்பில்லையே.
(நம்ம கதை தொடர்ந்து வாசித்து கருத்திடும் ரீடர்ஸுக்கு இல்லை.) இது மற்றவர்களுக்காக புதிய ரீடர்ஸுக்காக…..👇
இங்க நிறைய ரீடர்ஸ் மெம்பர்ஸ் ஆகியிருக்கிங்க. அதே போல முகநூல் குழுவிலும் இணைந்திருக்கிங்க. ஆனாலும் ஒரு லைக் கமெண்ட்ஸ் போட்டு உற்சாகப்படுத்த மனசு வரலை. நான் கூட சைலண்ட் ரீடர்ஸ் அப்படி இருப்பாங்கனு கடந்து வந்தேன். ஆனா இப்ப நிறைய சைட் இருக்கு. முகநாலில் சில நேரம் கவனிக்கறப்ப அவங்க அவங்களுக்கு பிடிச்ச ரைட்டருக்கு மட்டும் பக்கம் பக்கமா கருத்து பதிவு பண்ணிருக்கிங்க.
என்னிடம்
*சைட்ல லாகின் பண்ண தெரியலை. ரிஜிஸ்டர் பண்ண தெரியலை.
*பாண்ட் சரியா தெரியலை படிக்க முடியலை.
*கண்ணு வலி அதனால் சைட்ல கதையே படிக்கறதில்லை.
*எனக்கு உடல்நிலை சரியில்லை பாப்பா. அதனால் இந்த பக்கமே வரமுடியலை.
*எங்க வீட்ல முகநூலில் ஆக்டிவா இருந்தா திட்டுவாங்க. நான் யாருக்கும் கமெண்ட்ஸ் பண்ணறதில்லை
*இப்பல்லாம் ரிவ்யூ போட நேரமில்லை. இத்யாதி காரணம் கூறும் பல ரீடர்ஸ், மத்த இடத்துல ஆக்டிவா கமெண்ட்ஸ் எல்லாம் ஜோரா போடறாங்க, அதோட லாகின் பண்ணி தான் படிக்கறாங்க.
சரி நமக்கு வர்றது தான் வரும்னு நானும் எப்பவும் போல விட்டாச்சு. ஆனா இப்படி பொய் பேசி இருக்கறவங்களுக்கு நீங்க சொல்லற விஷயம் பொய்யுனு எனக்கு தெரியுதுனு சொல்லிக்கறேன். மாமியார் உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன் சட்டி. அதானே. அப்படியே இருக்கட்டும்.
எப்பவும் ஒரே கொள்கை தான். எழுத்தை நேசிக்கறவங்க எழுத்தாளரை கொண்டாட மாட்டாங்க. அந்த எழுத்தை வாசித்து கதையை தான் கொண்டாடுவாங்க.
ரொம்ப பெருசா இருக்குல்ல… சரி இத்துடன் உரையை முடித்து கொள்கின்றேன்.
கதை மே 5 வரை தளத்தில் இருக்கும்.
புதுக்கதையோ ரீரன் கதையோ நாளை பதிவிடப்படும். அனேகமா ரீரன் வரலாம். ஊருக்கு போறேன். அதனால் புதுக்கதை எழுத வாய்ப்பு அமையாது. ரீரன் என்றால் தினமும் பதிவிடப்படும்ல.
ஓகே… வரட்டா.
அப்பறம் எல்லாம் வாசித்துவிட்டு எனக்கு ஆறுதல் தரவேண்டாம். அதெல்லாம் நான் சட்டுனு கடந்துடுவேன்.
நம்ம சுரபி ஆராவமுதனோட கதை ஹலோ மிஸ் எதிர்கட்சியை பத்தி சொல்லிட்டு போங்க.. ரெகுலரா வாசிக்கற என் அன்பான ரீடர்ஸுக்கு எப்பவும் போல லவ் யூ. 🫂🫂🫂🫂 நீங்க கூடயிருக்கற காரணம் மட்டுமே என்னால எழுத முடியும். உங்களுக்கு புதுக்கதை தர விரைவில் வந்துடுவேன். ஆன்கோயிங் யாராவது படிக்காம விட்ட கதை இருந்தா கமெண்ட்ஸ் பண்ணுங்க
என்றும் ஆதரவு வேண்டி.
உங்கள்
பிரவீணா தங்கராஜ்.
Super.. Nalla story.. But innum unkakitte expect panrom.. Unke story na virumbi padipen.. Unke style enaku romba pidikum.. Descent a eluthurenka… All the best..
இனிய நிறைவு. என்ன இருந்தாலும் அரக்கிய அடிச்சிக்க முடியாது
கதை ரொம்ப நல்லா இருந்துச்சு ஆனா லாஸ்ட் எபிசோடு சட்டுன்னு முடிச்சிட்ட மாதிரி இருந்தது . உங்க ஸ்டைல கதையை நல்லபடியா கொண்டு போயிருந்தீங்க. அருமை வாழ்த்துக்கள் .மேலும் நிறைய புதிய கதைகளை கொடுக்கவும்.
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 31 Final)
ஐய்… கடைசியில நான் நினைச்ச மாதிரியே சுரபி தான் முதல்வராயிட்டாளா….? இந்த அமுதன் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்னுத் தான் சுத்திக்கிட்டிருக்கானா ?
பின்னே, தான் நேசிச்ச பொண்ணோட போட்டோவையே மீடியால பப்ளிக் பண்றது, மழைக்காலத்துல நிலச்சரிவுல செஞ்ச உதவியை கூட பிரகடனப்படுத்தறது, நெப்போட்டிஸத்துல முதல்வர் பதவிக்கு வந்துட்டு மக்களை ரொம்ப கேவலாமா பேசறது..
இதெல்லாம் இருந்தா யார் தான் இவனுக்கு பதவியைத் தூக்கி கொடுப்பாங்க. பொறுத்தார் தான் பூமியாள்வார், பொறுக்காதவர் இப்படித்தான்
வாய்ப்பை இழந்து முழிச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
⭐⭐⭐⭐⭐⭐ மிகவும் அருமை தோழி👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕😍😍😍😍😍😍
Super praveena. Different story. BTW I also admire Jayalalitha mam
Super super…. unrealistic story idu ..♥️♥️♥️👌👌👌
Asusual eppo vum pola story super sis and your story flow also.
Endha oru edathula yum salipu thatama rombavae etharthama swarsiyam ah story kondu pora unga vitham eppo vum pola ithula yum super and story plot really awesome unga style la politics ah partha feel romba nalla irundhu chi
Amudhan surabi nu politics la opposite ah irundhalum amudhasurabi ah avanga love life ah kammichi irundhiga.
Awesome feel good love story ❤️❤️😍🥳🥳❤️😍 interesting 💥🤔💥🤔💥… Vera level 💥🔥👍👍… Lovely moments 🎊☺️
Superb superb ending ethir patha mathiri surabi tha win paniniruka but amuthan ellathaium purinjitu alaga athula opp team la irunthu loss analum perusa eduthukala en wife tha guru nu solli mannippu ketutan itha vida vera ena Venum oru wife ku . Thanna nalla purinji kitta oru husband kedaikurathu varam ache rendu perum oruthar vitu kodukama avanga love la confident ah irunthanga . Yen kolanthaiya vachitu assembly poga kudathunu illaye apadium samalipen nu iniku thairiyama vanthu nikuran surabi that’s great . Unga stories la mostly ladies tha geth ah irupanga antha Mari nan konjam araki la vera mari na intha story la surabi great character sisy . Intha unga stories ku always waiting. Oru story mudiuthuna aiyo mudiya potha thonura alavuku tha irukum unga story apadi tha irunthuchi .
Ithe aduthu unga kathaikaga waiting sikram puthusa story oda vanga . Congratulations 👏🏻👏🏻👏🏻👏🏻🎉🎉🎉🎉
Super super super super super super super super 👌👏
Story super super ❤️❤️❤️❤️❤️❤️